ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்திடம் நற்சான்றிதழ்களை வழங்கினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்திடம் நற்சான்றிதழ்களை வழங்கினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், 2026, பெப்ரவரி 10 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் தனது நற்சான்றிதழ்களை அமைச்சில் வைத்து வழங்கினார்.

திருமதி கோவ்லினை வரவேற்ற அமைச்சர் ஹேரத், இலங்கையின் சவால் மிகுந்த பொருளாதார நிலை நிலவிய காலகட்டத்தில் வங்கி வழங்கிய வலுவான ஆதரவிற்கும், இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வலுவான பன்முக கூட்டாண்மையுடன் தொடர்ந்து செல்ல இலங்கை ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2025 டிசம்பரில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிக்காக அமைச்சர் ஹேரத் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் நிலைபேறான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுதிப்பாட்டை நாட்டிற்கான பணிப்பாளரான திருமதி கோவ்லின் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மை மற்றும் நாட்டின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு வங்கியின் தொடர்ச்சியான ஆதரவை இந்த இக்கலந்துரையாடல்கள் பெரிதும் மதிப்பீடு செய்தன.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026, பெப்ரவரி 12

Please follow and like us:

Close