அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூகத்தால் வழங்கப்பட்ட இரண்டு டொன் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

  அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூகத்தால் வழங்கப்பட்ட இரண்டு டொன் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

ஒன்பது சரக்குப் பகுதிகளாக 2021 ஜூன் 09 முதல் 2021 ஆகஸ்ட் 07 வரை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நேரடி விமானங்கள் மூலம் மெல்போர்னில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு டொன் மருத்துவ உபகரணங்களை மெல்போர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஒருங்கிணைத்தது. இந்த உபகரணங்கள் விக்டோரியா,  தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூக சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளால் நன்கொடையாக வழங்கப்பட்டன.

உயிர்காக்கும் நாசி ஒட்சிசன் இயந்திரங்கள், ஒட்சிசன் செறிவூட்டிகள், துடிப்பு ஒட்சிமீட்டர்கள், பி.ஐ.பி.ஏ.பி. இயந்திரங்கள், சி.பி.ஏ.பி. இயந்திரங்கள், உட்செலுத்துதல் பம்புகள், டயலிசிஸ் இயந்திரங்கள், நாசி கனுலா ஒட்சிசன் விநியோக முகமூடிகள், ஒட்சிசன் முகமூடிகள் மற்றும் இரத்த அழுத்த அவதானிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த உபகரணங்களை வழங்குவதற்காக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சலுகை விமானப் போக்குவரத்தை வழங்கிய அதே வேளையில், அந்த உபகரணங்களை சுகாதார அமைச்சிற்கு அனுமதித்து, வழங்குவதற்காக இலங்கை வெளிநாட்டு  அமைச்சு உதவியது.

இந்த மிகக் கடினமான காலங்களில் இலங்கையின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றும் முகமாக,  சரியான நேரத்தில் நன்கொடைகளை வழங்கியமைக்காக அனைத்து சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு மெல்போர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இலங்கையின் துணைத் தூதரகம்

மெல்போர்ன்

2021 ஆகஸ்ட் 17

Please follow and like us:

Close