அமெரிக்காவிடமிருந்து மற்றொரு  மருந்துப் பொதி  நன்கொடை  773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்காரேஸ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கர்ஸ் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

அமெரிக்காவிடமிருந்து மற்றொரு  மருந்துப் பொதி  நன்கொடை  773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்காரேஸ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்கர்ஸ் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, மருந்து மற்றும்  மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காரேஸ், இலங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் 773,000  அமெரிக்க டொலர்கள் (மதிப்பிடப்பட்ட மதிப்பீட்டின்படி 279,476,100.28 இலங்கை ரூபா) பெறுமதியான மருத்துவப் பொருட்களை தாராள நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் வைட்டமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், இன்ட்ராவெஸ்குலர் வடிகுழாய்கள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது.

இவ்வாறான செயலை எளிதாக்குவதன் விளைவாக, எதிர்கால நன்கொடைகள் நடைபெறுவதற்கு உதவும் வகையில் இலங்கை மற்றும் அமெரிக்காவிலுள்ள சுகாதார அமைச்சுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வ சான்றிதழ்  கையளிக்கும் நிகழ்வு, மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்காரேஸிற்கான துணை மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோருடன் இடம்பெற்றது.

இந்த முயற்சியானது இலங்கையின் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் கூடிய சர்வதேச உதவி மற்றும் மருந்து விநியோகங்கள் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வேளையில், இலங்கை மக்களும் இலங்கைத் தூதரகமும் அமெரிக்காரேஸின் தாராளமான முயற்சிகள்  மற்றும் தேசத்திற்கு உதவுவதற்கான அர்ப்பணிப்பிற்கு உண்மையான பாராட்டுக்களையும், அங்கீகாரத்தையும் தெரிவிக்கின்றன.

ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பான அமெரிக்காரேஸ், வறுமை அல்லது பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. வாழ்க்கையை மாற்றும் சுகாதாரத் திட்டங்கள், மருந்து, மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பு அமெரிக்கா உட்பட சராசரியாக 85 நாடுகளை சென்றடகின்றது.  40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்கா உட்பட 164  நாடுகளுக்கு 20 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்காரேஸ் வழங்கியுள்ளது.

இலங்கைத் தூதரகம்,                                                                                    அமெரிக்காரேஸ்

வொஷிங்டன் டிசி.                                                                                          கனெக்டிகட்

2022 செப்டம்பர் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close