The Ministry of Foreign Relations has decided to suspend all services offered by the Consular Affairs Division of the Ministry until 20 March 2020 (Friday), to support the Government’s efforts at restricting the congregation of the general public, thereby making the public and the staff vulnerable to the spread of COVID-19.
Accordingly, the Consular Affairs Division situated at the Ceylinco Building in Colombo will remain closed for visitors for normal business in the upcoming four days from 17 to 20 March, and will only accept queries related to death cases of Sri Lankans overseas and death-related documentation assistance, strictly on prior appointment basis.
—————————–
—————————–
ஊடக வெளியீடு
வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் கொன்சியூலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன
கோவிட் – 19 இன் பரவலினால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக, பொதுமக்கள் ஒன்று கூடுவதனை மட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவும் முகமாக, அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வழங்கும் அனைத்து சேவைகளையும் 2020 மார்ச் 20ஆந் திகதி வரை (வெள்ளிக்கிழமை) இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், மார்ச் 17 முதல் 20 வரையான எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கொழும்பில் உள்ள செலின்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சாதாரண நடவடிக்கைகள் வருகை தருனர்களுக்காக மூடப்படுவதுடன், கட்டாயமாக முன் நியமனம் செய்து கொள்வதன் அடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்புக்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் இறப்புக்களுடன் தொடர்பான ஆவணங்களுக்கான உதவி சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
முன் நியமனங்களை பின்வரும் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்: