සුඩාන ජනරජයේ පවතින වත්මන් අර්බුදය හේතුවෙන් ඉන් ඉවත් වූ ශ්රී ලාංකිකයින් 14 දෙනෙකු අද දින බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන් තොටුපොළ වෙත පැමිණිය හ. විදේශ කටයුතු අමාත්යංශයේ කොන්සියුලර් අංශයේ අධ්යක්ෂ ජනරාල් සිසිර සෙනවිරත්න මහතා විසින් ඔවුන් උණුසුම් ලෙස පිළිගනු ලැබී ය. විදේශ කටයුතු අමාත්යංශයේ සම්බන්ධීකරණය සහ සෞදි අරාබි රජයේ නොමසුරු සහය ඇතිව එම පිරිස සුඩානයෙන් ඉවත් කරගන්නා ලදී.
සුඩානයෙන් ඉවත් වීම සඳහා ඉල්ලීම් යොමු කළ කාර්ටූම් හි වෙසෙන ශ්රී ලාංකිකයන් ඉන් ඉවත් කරගැනීම සඳහා රියාද් සහ කයිරෝ හි ශ්රී ලංකා තානාපති කාර්යාල සහ ජෙඩාහි ශ්රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය සෞදි අරාබි රජයේ සහ ඉන්දීය රජයේ බලධාරීන් සමඟ එක්ව කටයුතු කරමින් සිටිති. නයිරෝබි හි ශ්රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය සහ මස්කට් හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය ද මෙම ඉවත් කිරීමේ ක්රියාවලිය සඳහා සිය සහය ලබා දුන් හ.
විදේශ කටයුතු අමාත්යංශය සුඩාන ජනරජයේ වත්මන් තත්ත්වය අඛණ්ඩව අධීක්ෂණය කරන අතර, සුඩාන ජනරජයේ සිටින ශ්රී ලාංකිකයන් දිවයිනට පැමිණීම සඳහා ඉල්ලීමක් යොමු කළහොත් සිය සහය ලබා දීම සඳහා සූදානමින් සිටියි.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2023 අප්රේල් 29 වැනි දින
....................................
මාධ්ය නිවේදනය
.................................................
ஊடக வெளியீடு
சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கையர்கள் இலங்கையை வந்தடைவு
சூடான் குடியரசில் நிலவும் நெருக்கடி காரணமாக வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சிசிர செனவிரத்ன அன்புடன் வரவேற்றார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒருங்கிணைப்பு மற்றும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் தாராளமான உதவியினால் அவர்களது வெளியேற்றம் எளிதாக்கப்பட்டது.
கார்ட்டூமில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றுவதற்காக, ரியாத் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஆகியன சவுதி அரேபியா மற்றும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியனவும் வெளியேற்றும் பணியில் உதவிகளை வழங்கியுள்ளன.
சூடான் குடியரசின் நிலைமையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், இன்னும் சூடான் குடியரசில் இருக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக உள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஏப்ரல் 29