The attention of the Ministry of Foreign Affairs has been drawn to misleading information circulating in the public domain that Minister of Foreign Affairs M.U.M. Ali Sabry has spent a substantial amount of public funds while undertaking official visits overseas in the recent past.
The Ministry wishes to clarify that
i. the Minister of Foreign Affairs undertakes official visits to represent Sri Lanka at important multilateral, regional and bilateral engagements overseas, as and when required;
ii. these meetings/conferences/engagements should be attended by the Foreign Minister himself, considering their importance and also the expected level of participation;
iii. it is the practice and essential for substantive reasons that senior officials of the Ministry and other line agencies accompany the Foreign Minister to these meetings/conferences/engagements as appropriate, considering the requirement of the expertise of such officials in discussions/deliberations;
iv. the Foreign Ministry curtails expenses to the maximum extent possible and only essential expenses are authorized in keeping with the new Treasury circulars and guidelines.
Therefore, the Ministry of Foreign Affairs wishes to emphasize that the Foreign Minister by virtue of his appointment/high office is required to undertake foreign travel for official purposes in the context of the Foreign Ministry’s and the government’s engagement with its international partners, and to represent Sri Lanka in fulfilling the country’s domestic and international obligations.
As clearly evidenced in the recent past, many immediate and long-term advantages accrue to Sri Lanka from these high-level person-to-person discussions with the Foreign Minister’s counterparts and other foreign dignitaries.
Ministry of Foreign Affairs
Colombo
20 June 2023
.........................................
මාධ්ය නිවේදනය
විදේශ කටයුතු අමාත්යවරයාගේ විදෙස් නිල සංචාර පිළිබඳව මහජනතාව අතර සංසරණය වන නොමඟ යවනසුළු තොරතුරු
විදේශ කටයුතු අමාත්ය එම්.යූ.එම්. අලි සබ්රි මැතිතුමා පසුගිය කාලය තුළ විදෙස් නිල සංචාරවල යෙදී සිටියදී සැලකිය යුතු මහජන මුදල් ප්රමාණයක් වැය කර ඇති බව සඳහන් වන නොමඟ යවන සුළු තොරතුරු මහජනතාව අතර සංසරණය වන බව විදේශ කටයුතු අමාත්යංශය විසින් නිරීක්ෂණය කරන ලදී.
ඒ අනුව පහත කරුණු පැහැදිලි කරන විදේශ කටයුතු අමාත්යංශය,
i. විදේශ රටවල පැවැත්වෙන වැදගත් බහුපාර්ශ්වික,කලාපීය සහ ද්විපාර්ශ්වික කටයුතුවලදී ශ්රී ලංකාව නියෝජනය කිරීම සඳහා අවශ්යතාව මත පදනම්ව විදේශ කටයුතු අමාත්යවරයා විසින් නිල සංචාර සිදු කරනු ලබන බවත්;
ii. මෙම රැස්වීම්/සම්මන්ත්රණ/නිරතවීම්වල වැදගත්කම සහ අපේක්ෂිත සහභාගීත්වය ද සැලකිල්ලට ගනිමින් ඒ සඳහා විදේශ කටයුතු අමාත්යවරයාගේ සහභාගීත්වය ලබා දිය යුතු බවත්;
iii. අමාත්යංශයේ සහ අනෙකුත් රේඛීය ආයතනවල ජ්යෙෂ්ඨ නිලධාරීන්ගේ ප්රවීණත්වය සාකච්ඡා/විවාද සඳහා අවශ්ය වන ආකාරය සැලකිල්ලට ගනිමින්, මෙම රැස්වීම්/සම්මන්ත්රණ/නිරතවීම් සඳහා ඔවුන් සුදුසු පරිදි විදේශ කටයුතු අමාත්යවරයා සමඟ සහභාගී කරවීම ප්රායෝගිකව සිදු කෙරෙන අත්යවශ්ය ක්රියාවලියක් බවත්;
iv. හැකි උපරිමයෙන් වියදම් සීමා කිරීමට කටයුතු කරන විදේශ කටයුතු අමාත්යංශය නව භාණ්ඩාගාර චක්රලේඛ සහ මාර්ගෝපදේශයන්ට අනුකූලව අත්යවශ්ය වියදම් සඳහා පමණක් අවසර ලබා දෙන බවත් ප්රකාශ කර සිටියි.
එබැවින්, විදේශ කටයුතු අමාත්යංශය සහ රජය සිය ජාත්යන්තර හවුල්කරුවන් සමඟ කටයුතු කරන සන්දර්භය තුළ සහ දේශීය හා ජාත්යන්තර වගකීම් ඉටු කිරීමේ දී ශ්රී ලංකාව නියෝජනය කිරීම ගත් කල, විදේශ කටයුතු අමාත්යවරයාගේ නිල පත්වීම/උසස් නිලය ප්රකාරව නිල අවශ්යතා සඳහා විදේශ සංචාරවල නිරත වීම අවශ්ය බව විදේශ කටයුතු අමාත්යංශය මෙයින් අවධාරණය කර සිටියි.
විදේශ කටයුතු අමාත්යවරයාගේ මිත්ර පාර්ශ්ව සහ අනෙකුත් විදේශීය ප්රභූවරුන් සමඟ පැවැත්වූ මෙම ඉහළ මට්ටමේ පුද්ගලික සාකච්ඡා මඟින් ශ්රී ලංකාවට ක්ෂණික හා දිගු කාලීන වාසි රැසක් හිමිවී ඇති බව මෑත අතීතයේ සිදු කළ නිරතවීම් හරහා පැහැදිලිව පෙන්නුම් කෙරේ.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ
2023 ජූනි 20 වැනි දින
.........................................
ஊடக வெளியீடு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் குறித்து பொதுவெளியில் தவறான தகவல்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு, பொது நிதியில் கணிசமான தொகையை செலவிட்டதாக பொதுவெளியில் பரவிவரும் தவறான தகவல் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றை அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகின்றது:
i. வெளிநாடுகளில் முக்கியமான பலதரப்பு, பிராந்திய மற்றும் இருதரப்பு ஈடுபாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்கின்றார்;
ii. இந்தக் கூட்டங்கள் / மாநாடுகள் / ஈடுபாடுகளின் முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பங்கேற்பு அளவைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரே இவற்றில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்;
iii. கலந்துரையாடல்கள் / ஆலோசனைகளில் அமைச்சினதும், இதர வரிசை முகவர்களினதும் சிரேஷ்ட அதிகாரிகளின் நிபுணத்துவத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த அதிகாரிகள் இந்தக் கூட்டங்கள் / மாநாடுகள் / ஈடுபாடுகளுக்குத் தகுந்தவாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இணைந்து செல்வது நடைமுறையானதும், அத்தியாவசியமானதுமாகும்;
iv. புதிய கருவூல சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு செலவுகளை அதிகபட்சமாக குறைத்து வருவதுடன், அத்தியாவசியமான செலவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன.
எனவே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும், அரசாங்கத்தினதும் சர்வதேசப் பங்காளிகளுடனான ஈடுபாட்டின் பின்னணியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தனது நியமனம் / உயர் பதவியின் காரணமாக உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், நாட்டின் உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்த விரும்புகின்றது.
அண்மைக் காலங்களிலான தெளிவான சான்றாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் சகாக்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரமுகர்களுடனான இந்த உயர்மட்ட நேரடிக் கலந்துரையாடல்களின் வாயிலாக இலங்கைக்கு பல உடனடியான மற்றும் நீண்ட கால நன்மைகள் கிடைத்துள்ளன.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2023 ஜூன் 20