Foreign Minister Sabry discusses key areas of collaboration in shipping sector with Bangladesh

Foreign Minister Sabry discusses key areas of collaboration in shipping sector with Bangladesh

 

Foreign Minister Ali Sabry held discussions with State Minister of Shipping in Bangladesh holding Cabinet rank Khalid Mahmud Chowdhury for further collaboration in the shipping sector on 23 November.

During the discussion, both Ministers emphasised the importance of shipping as one of the key areas selected for collaboration between Sri Lanka and Bangladesh. Ministers Ali Sabry and Khalid Chowdhury agreed that it is important to hold the 2nd Session of Joint Working Group and Joint Secretary level talks early, in order to enhance the cooperation in the sector. Further, both the Ministers discussed finalizing the proposed Agreement on Coastal Shipping between the two countries and also the Standard Operating Procedure (SOP) of the Feeder Service between Colombo and Chattogram. Minister Sabry highlighted that Bangladesh is a very important partner in the Shipping sector, as around 40% of Bangladesh’s exports, mainly apparel which are bound to Western Europe and US, are transported from Chattogram using the Port of Colombo and thereby reducing the cost and time for Bangladeshi exports, compared to Singapore.

The Bangladesh Minister mentioned the development of the Matarbari Port  in Cox’s Bazar district, which is being developed as a deep sea port with the assistance of Japan and Bangladesh always targets to keep direct connectivity between Colombo and Chattogram ports through such initiatives. Minister Sabry invited the Bangladesh investors to invest in the terminal development projects in the country’s ports. Further, the Minister briefed the Bangladesh side, about the opportunities available for foreign investors in the Colombo Port City and invited Bangladesh investors to see the potential available in Sri Lanka.

The Bangladesh side requested the Sr Lanka side to consider offering priority berthing to the Bangladesh vessels, which arrive in to Colombo port. Both sides discussed further collaboration as Bangladesh is a country which widely uses the Colombo Port as a transshipment hub. The Ministers agreed that the development of the shipping sector is a positive factor for tourism development of the two countries. The necessity of having strong air connectivity and the entry of private airlines was also discussed.

Minister Ali Sabry is in Dhaka to attend meetings as the Vice Chair of IORA at the 22nd Council of Ministers’ Meeting.

 

High Commission of Sri Lanka

Dhaka

23 November, 2022

 

.........................

මාධ්‍ය නිවේදනය

විදේශ කටයුතු අමාත්‍ය සබ්රි මැතිතුමා නාවික ක්ෂේත්‍රයේ සහයෝගීතාව ආශ්‍රිත ප්‍රධාන ක්ෂේත්‍ර සම්බන්ධයෙන් බංග්ලාදේශය සමඟ සාකච්ඡා පවත්වයි

 නැව් සේවා ක්ෂේත්‍රය සම්බන්ධයෙන් පවතින ශ්‍රී ලංකා- බංග්ලාදේශ සහයෝගීතාව ඉහළ නැංවීමේ අරමුණින්, විදේශ කටයුතු අමාත්‍ය අලි සබ්රි මැතිතුමා, 2022 නොවැම්බර් 23 වැනි දින, ග්ලාදේශයේ කැබිනට් ශ්‍රේණිය දරන, නැව් සේවා පිළිබඳ රාජ්‍ය අමාත්‍ය ඛලීඩ් මහ්මුද් චෞද්රි මැතිතුමා හමුවී සාකච්ඡා පැවැත්වී ය.

ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර සහයෝගීතාව පැවැත්වීම සඳහා තෝරාගෙන ඇති ප්‍රධාන ක්ෂේත්‍රයක් වන නැව් සේවා ක්ෂේත්‍රයේ වැදගත්කම පිළිබඳව අමාත්‍යවරුන් දෙදෙනා මෙම සාකච්ඡාවේදී අවධාරණය කළහ. මෙම ක්ෂේත්‍රයේ සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම සඳහා ඒකාබද්ධ ක්‍රියාකාරී කණ්ඩායම් සහ ඒකාබද්ධ ලේකම් මට්ටමේ සාකච්ඡාවල 2 වැනි සැසිවාරය කලින් පැවැත්වීම වැදගත් වන බව, අමාත්‍ය අලි සබ්රි මැතිතුමා සහ අමාත්‍ය ඛලීඩ් චෞද්රි මැතිතුමා මෙහිදී පිළිගත් හ. තවද, වෙරළබඩ නැව්ගත කිරීම සම්බන්ධයෙන් දෙරට අතර යෝජිත ගිවිසුම සහ කොළඹ සහ චැටෝග්‍රම් අතර පෝෂක සේවාවේ සම්මත මෙහෙයුම් ක්‍රියා පටිපාටිය (SOP) අවසන් කිරීම පිළිබඳව ද අමාත්‍යවරු දෙදෙනා සාකච්ඡා කළහ. ප්‍රධාන වශයෙන් බටහිර යුරෝපයට සහ එක්සත් ජනපදයට අපනයනය කෙරෙන, බංග්ලාදේශයේ අපනයනවලින් 40% ක් පමණ වන ඇඟලුම්, චැටෝග්‍රම් වරායේ සිට කොළඹ වරාය භාවිතා කරමින් ප්‍රවාහනය කරනු ලබන බැවින් සහ සිගප්පූරුව සමඟ සසඳන කල, ග්ලාදේශ අපනයන ප්‍රවාහනය කිරිම සඳහා වැය වන කාලය සහ මුදල් මෙමඟින් අවම වන බැවින්, බංග්ලාදේශය නැව් සේවා ක්ෂේත්‍රයේ ඉතා සුවිශේෂී හවුල්කරුවකු වන බව අමාත්‍ය සබ්රි මැතිතුමා අවධාරණය කළේ ය.

 ජපානයේ ආධාර සහිතව, කොක්ස් බසාර් දිස්ත්‍රික්කයේ ගැඹුරු මුහුදු වරායක් ලෙස සංවර්ධනය කෙරෙන මටාර්බරි වරායේ කටයුතු පිළිබඳව බංග්ලාදේශ අමාත්‍යවරයා මෙහිදී සඳහන් කළේ ය. බංගලාදේශය සෑම විටම එවැනි මුලපිරීම් හරහා කොළඹ සහ චැටෝග්‍රම් යන වරායන් අතර සෘජු සම්බන්ධතාවක් පවත්වා ගැනීම ඉලක්ක කරන බවද එතුමා ප්‍රකාශ කළේ ය. මෙහිදී සිය අදහස් පළ කළ අමාත්‍ය සබ්රි මැතිතුමා, මෙරට වරායන්හි පර්යන්තවල සංවර්ධන ව්‍යාපෘති සඳහා ආයෝජනය කරන ලෙස බංග්ලාදේශ ආයෝජකයන්ට ආරාධනා කළේ ය. තවද, කොළඹ වරාය නගරයේ විදේශීය ආයෝජකයන් සඳහා පවතින අවස්ථා පිළිබඳව බංග්ලාදේශ පාර්ශ්වය දැනුම්වත් කළ අමාත්‍යවරයා, ශ්‍රී ලංකාවේ පවතින විභව ශක්‍යතා ගවේෂණය කිරීම සඳහා බංග්ලාදේශ ආයෝජකයන්ට ආරාධනා කළේ ය.

 කොළඹ වරායට පැමිණෙන බංග්ලාදේශ යාත්‍රා සඳහා ප්‍රමුඛතා නැංගුරම් ලෑම පිරිනැමීම සම්බන්ධයෙන් සලකා බලන ලෙස, බංග්ලාදේශ පාර්ශ්වය ශ්‍රී ලංකා පාර්ශවයෙන් ඉල්ලා සිටියේ . බංගලාදේශය, නැවකින් නැවකට/වෙනත් ප්‍රවාහනයකට මාරු වීමේ මධ්‍යස්ථානයක් ලෙස කොළඹ වරාය බහුලව භාවිතා කරන රටක් වන බැවින්, මේ හා සබැඳි සහයෝගීතාව තවදුරටත් වර්ධනය කිරීම පිළිබඳව දෙපාර්ශ්වය මෙහිදී සාකච්ඡා පැවැත්වූ . නැව් සේවා ක්ෂේත්‍රයේ දියුණුව දෙරටේ සංචාරක ව්‍යාපාරයේ දියුණුව සඳහාවහල් වන සාධනීය සාධකයක් බව අමාත්‍යවරු දෙපළ මෙහිදී සඳහන් කළහ. ශක්තිමත් ගුවන් සම්බන්ධතාවක් තිබීමේ අවශ්‍යතාව සහ පුද්ගලික ගුවන් සේවාවලට රට තුළට පිවිසීමේ අවශ්‍යතාව පිළිබඳව ද සාකච්ඡා කෙරිණි.

 න්දියානු සාගර වටද්දර රටවල ගමයේ (IORA) උප සභාපතිත්වය දරන අමාත්‍ය අලි සබ්රි මැතිතුමා එහි 22 වැනි අමාත්‍ය කවුන්සිල රැස්වීමේ රැස්වීම්වලට සහභාගී වීම සඳහා ඩකා නුවර චාරයක නිරත වී සිටියි.

 

ශ්‍රී කා මහ කොමසාරිස් කාර්යාලය

ඩකා

2022 නොවැම්බර් 23 වැනි දින

........................................

ஊடக வெளியீடு

 பங்களாதேஷூடன் கப்பல் துறையில் ஒத்துழைப்பதன் முக்கிய பகுதிகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி கலந்துரையாடல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள  பங்களாதேஷ் கப்பல் போக்குவரத்து அமைச்சர் காலித் மஹ்மூத் சவுத்ரியுடன் நவம்பர் 23ஆந் திகதி கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் ஒன்றாக கப்பல் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் காலித் சௌத்ரி ஆகியோர், இத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, கூட்டுப் பணிக்குழு மற்றும் இணைச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் 2வது அமர்வை முன்கூட்டியே நடாத்துவது அவசியமாகும் என ஒப்புக்கொண்டனர். மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான கரையோரக் கப்பல் போக்குவரத்து தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தை இறுதிசெய்வது குறித்தும், கொழும்பு மற்றும் சட்டோகிராமிற்கு இடையிலான ஊட்டி சேவையின் நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். பங்களாதேஷின் ஏற்றுமதியில் 40மூ, முக்கியமாக மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் ஆடைகள், கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்தி சட்டோகிராமில் இருந்து கொண்டு செல்லப்படுவதுடன், இதனால் சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது பங்களாதேஷ் ஏற்றுமதிக்கான செலவையும் நேரத்தையும் குறைக்கின்றது என்ற வகையில், பங்களாதேஷ் கப்பல் துறையில் மிக முக்கியமான பங்காளியாக உள்ளது என்பதை அமைச்சர் சப்ரி எடுத்துரைத்தார்.

ஜப்பான் மற்றும் பங்களாதேஷின் உதவியுடன் ஆழ்கடல் துறைமுகமாக  அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கொக்ஸ் பஸார் மாவட்டத்தில் உள்ள மடர்பாரி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து பங்களாதேஷ் அமைச்சர் குறிப்பிட்டதுடன், இது போன்ற முயற்சிகளின் மூலம் கொழும்பு மற்றும் சட்டோகிராம் துறைமுகங்களுக்கு இடையே நேரடித் தொடர்பை எப்போதும் வைத்திருப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நாட்டின் துறைமுகங்களில் முனைய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் சப்ரி பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், கொழும்புத் துறைமுக நகரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் பங்களாதேஷ் தரப்புக்கு விளக்கமளித்த அமைச்சர், இலங்கையில் உள்ள சாத்தியக்கூறுகளை பார்வையிடுவதற்கு வருகை தருமாறு பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் பங்களாதேஷ் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு பங்களாதேஷ் தரப்பு இலங்கைத் தரப்பிடம் கோரிக்கை விடுத்தது. கொழும்புத் துறைமுகத்தை கப்பல் சரக்குப் பரிமாற்றல் கேந்திரமாக பரவலாகப் பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் இருப்பதால், இரு தரப்பினரும் மேலும் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடினர். கப்பல் துறையின் வளர்ச்சி இரு நாடுகளினதும் சுற்றுலா அபிவிருத்திக்கு சாதகமான காரணியாக அமைகின்றது என்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். வலுவான விமான இணைப்பைக் கொண்டிருப்பதன் அவசியம் மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் நுழைவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் அலி சப்ரி ஐயோராவின் துணைத் தலைவராக 22வது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டாக்காவிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2022 நவம்பர் 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close