The Ministry of Foreign Affairs of People’s Republic of China donated a large consignment of medical equipment including multipara monitors, high flow oxygen nasal therapy machines, oxygen concentrators, oxygen cylinders and several other items valued at Sri Lanka Rupees 127 Million. This contribution is in addition to previous donations of COVID 19 related medical equipment and vaccines by China.
The donation from the Peoples’ Republic of China was handed over at a ceremony held at the Foreign Ministry in Colombo. Chinese Ambassador Qi Zhenhong handed over the donation to Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage. The donation was thereafter handed over to Prof. Channa Jayasumana, State Minister of Production, Supply and Regulation of Pharmaceuticals and Dr. R.M.S.K. Ratnayake, Secretary of the State Ministry.
The People’s Republic of China has extended unstinted COVID-19 related assistance to Sri Lanka since the outbreak of the pandemic. State Minister Prof. Channa Jayasumana and Foreign Secretary Jayanath Colombage conveyed appreciation to the Ministry of Foreign Affairs of China for their gesture which further consolidates the close cooperation between the Foreign Ministries of Sri Lanka and China.
Foreign Ministry
Colombo
12 January, 2022
.......................................................
මාධ්ය නිවේදනය
චීනයේ විදේශ අමාත්යාංශය ශ්රී ලංකාවට කොවිඩ්-19 ආශ්රිත වෛද්ය උපකරණ පිරිනමයි
මහජන චීන ජනරජයේ විදේශ කටයුතු අමාත්යාංශය විසින් ශ්රී ලංකා රුපියල් මිලියන 127ක වටිනාකමින් යුත් මල්ටිපැරා මොනිටර, ඉහළ ප්රවාහ ඔක්සිජන් නාසික චිකිත්සක යන්ත්ර, ඔක්සිජන් සාන්ද්රක, ඔක්සිජන් සිලින්ඩර ඇතුළු වෛද්ය උපකරණ විශාල තොගයක් ශ්රී ලංකාව වෙත පරිත්යාග කරන ලදි. මින් පෙර චීනය විසින් පිරිනමන ලද කොවිඩ්-19 ආශ්රිත වෛද්ය උපකරණ සහ එන්නත් පරිත්යාගයට අමතරව මෙම පරිත්යාගය ශ්රී ලංකාව වෙත පිරිනමන ලදි.
මහජන චීන ජනරජය විසින් පිරිනමන ලද මෙම පරිත්යාගය කොළඹ විදේශ අමාත්යංශයේ පැවැති උත්සවයකදී භාර දෙන ලදි. චීන තානාපති කි චෙන්හොන්ග් මැතිතුමා විසින් එම පරිත්යාගය විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා වෙත භාරදෙන ලදි. ඉන් අනතුරුව එය ඖෂධ නිෂ්පාදන, සැපයුම් සහ නියාමන රාජ්ය අමාත්ය මහාචාර්ය චන්න ජයසුමන මැතිතුමා සහ රාජ්ය අමාත්යංශ ලේකම් වෛද්ය ආර්.එම්.එස්.කේ. රත්නායක මහතා වෙත භාර දෙන ලදි.
ශ්රී ලංකාව තුළ කොවිඩ්-19 වසංගතය ව්යාප්ත වූ අවධියේ සිට මහජන චීන ජනරජය ශ්රී ලංකාව වෙත කොවිඩ්-19 ආශ්රිත ආධාර ලබා දී ඇත. ශ්රී ලංකාවේ සහ චීනයේ විදේශ අමාත්යාංශය අතර පවත්නා සමීප සහයෝගීතාව තවදුරටත් තහවුරු කරමින් චීනයේ විදේශ කටයුතු අමාත්යාංශය පිරිනමන ලද මෙම පරිත්යාගය සම්බන්ධයෙන් රාජ්ය අමාත්ය මහාචාර්ය චන්න ජයසුමන මැතිතුමා සහ විදේශ ලේකම් ජයනාත් කොළඹගේ මහතා සිය ප්රසාදය පළ කළහ.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2022 ජනවාරි 12 වැනි දින
.......................................................
ஊடக வெளியீடு
கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சினால் நன்கொடை
சீன மக்கள் குடியரசின் வெளிநாட்டு அமைச்சு 127 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மல்டிபரா கண்காணிப்பான்கள், உயர் பாய்வு ஒட்சிசன் நாசி சிகிச்சை இயந்திரங்கள், ஒட்சிசன் செறிவூட்டிகள், ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் ஏனைய பல பொருட்கள் உட்பட மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது. சீனா முன்னர் நன்கொடையாக வழங்கிய கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளுக்கும் மேலதிகமாக இந்தப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் சீன மக்கள் குடியரசின் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது. சீனத் தூதுவர் கி சென்ஹொங் இந்த நன்கொடையை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து, மருந்தக உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
தொற்றுநோய் ஏற்பட்ட காலம் முதல் சீன மக்கள் குடியரசு இலங்கைக்கு கோவிட்-19 தொடர்பான பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் சீனாவின் வெளிநாட்டு அமைச்சுக்களுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சீன வெளிநாட்டு அமைச்சுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2022 ஜனவரி 12