Sri Lanka elected to the UN Commission on International Trade Law

Sri Lanka elected to the UN Commission on International Trade Law

Sri Lanka was among thirty-one (31) members elected to the United Nations Commission on International Trade Law (UNCITRAL) by the UN General Assembly on 20 November 2024.

Sri Lanka contested for a seat from the Asia Pacific Group, and secured 177 votes. This was the second highest number of votes within the group, and second highest overall among the thirty one members elected.

Other member states elected from the Asia Pacific Group to the UNCITRAL are Malaysia, The Philippines, Singapore, Viet Nam, China, Japan and Republic of Korea.

Sri Lanka will serve a six (6) year term, commencing in January 2025.

UNCITRAL, established in 1966 and Headquartered in Vienna, is the core legal body in the field of international trade. Its mandate includes removing obstacles to trade and harmonising trade laws.

UNCITRAL also provides technical assistance to member States. Sri Lanka’s legislation for the facilitation of trade and investment such as the Sri Lanka Arbitration Act and the Electronic Transaction Act have benefitted from model laws by UNCITRAL.

Sri Lanka has previously served as a Member of UNCITRAL from 2004 – 2007, and 2016 – 2022.

Ministry of Foreign Affairs  

Colombo  

 22 November 2024

.........................

මාධ්‍ය නිවේදනය

ජාත්‍යන්තර වෙ‍ළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසමට ශ්‍රී ලංකාව තේරී පත් වේ.

2024 නොවැම්බර් 20 වැනි දින එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලය විසින් ජාත්‍යන්තර වෙළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසමට තෝරා පත් කරගනු ලැබූ සාමාජිකයින් තිස් එක අතර ශ්‍රී ලංකාවද විය.

ආසියා පැසිෆික් කණ්ඩායමෙන් ආසනයක් සඳහා තරඟ කළ ශ්‍රී ලංකාව, ඡන්ද එකසිය හැත්තෑ හතක් ලබා ගැනීමට සමත් විය. මෙම ඡන්ද සංඛ්‍යාව, කණ්ඩායම තුළ දෙවැනි වැඩිම ඡන්ද සංඛ්‍යාව වූ අතර තේරී පත් වූ සාමාජිකයන් තිස් එක් දෙනා අතරින් සමස්තයක් ලෙස දෙවැනි වැඩිම ඡන්ද සංඛ්‍යාව විය.

ජාත්‍යන්තර වෙ‍ළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසමට ආසියා පැසිෆික් සමූහයෙන් තේරී පත් වූ අනෙකුත් සාමාජික රටවල් වන්නේ මැලේසියාව, පිලිපීනය, සිංගප්පූරුව, වියට්නාමය, චීනය, ජපානය සහ කොරියානු ජනරජයයි.

ශ්‍රී ලංකාව 2025 ජනවාරි මාසයේ සිට වසර හයක කාලයක් මෙහි සේවය කරනු ඇත.

1966 වසරේදී පිහිටුවන ලද සහ වියානා අගනුවර මූලස්ථානය පිහිටා ඇති ජාත්‍යන්තර වෙ‍ළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසම, ජාත්‍යන්තර වෙළෙඳ ක්ෂේත්‍රයේ මූලික නීතිමය ආයතනයයි. වෙ‍ළෙඳාමට ඇති බාධා ඉවත් කිරීම සහ වෙ‍ළෙඳ නීති සුසංගත කිරීම මෙම කොමිසමේ විෂය පථයට ඇතුළත් වේ.

ජාත්‍යන්තර වෙ‍ළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසම, සාමාජික රටවලට තාක්ෂණික සහායද සපයයි. ශ්‍රී ලංකා බේරුම්කරණ පනත සහ ඉලෙක්ට්‍රොනික ගනුදෙනු පනත වැනි වෙ‍ළෙදාම සහ ආයෝජන සඳහා පහසුකම් සැලසීම පිණිස වන ශ්‍රී ලංකාවේ නීති, ජාත්‍යන්තර වෙ‍ළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසමෙහි ආදර්ශ නීතිවලින් ප්‍රතිලාභ ලබා ඇත.

ශ්‍රී ලංකාව මීට පෙර ජාත්‍යන්තර වෙ‍ළෙඳ නීතිය පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ කොමිසමෙහි සාමාජිකයෙකු ලෙස 2004 සිට 2007  සහ 2016 සිට 2022 දක්වා සේවය කර ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2024 නොවැම්බර් 22 වැනි දින

.........................

ஊடக வெளியீடு

 இலங்கையானது சர்வதேச வர்த்தக சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவிற்குத் தெரிவாகியுள்ளது

2024, நவம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும்.

இலங்கை ஆசிய பசுபிக் குழுவில் ஆசனமொன்றிற்குப் போட்டியிட்டு மொத்தமாக 177 வாக்குகளைப் பெற்றது. இது குழுவிற்குள் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்தொரு உறுப்பினர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிக வாக்குகளாகும்.

மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகியவை ஆசிய பசிபிக் குழுவிலிருந்து, சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பு நாடுகளாகும்.

இலங்கையானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஆறு (6) வருட காலத்திற்கு இதில் பணியாற்றவுள்ளது.

1966 இல் நிறுவப்பட்ட சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, வியன்னாவை தலைமையகமாகக் கொண்டதுடன், சர்வதேச வர்த்தகத் துறையில் முக்கிய சட்ட அமைப்பாகவும் விளங்குகிறது. வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகச் சட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் அடிப்படைப் பணிகளாகும்.

சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவானது, தனது உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்குகிறது. இலங்கை இணக்கத்தீர்வுச் சட்டம் மற்றும் மின்னணு பரிவர்த்தனை சட்டம் போன்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்கான இலங்கையின் சட்டங்கள், சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் மாதிரிச் சட்டங்களால் பயனடைந்துள்ளன.

இலங்கை இதற்கு முன்னர் 2004 - 2007 மற்றும் 2016 - 2022 ஆகிய காலப்பகுதிகளில் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

2024 நவம்பர் 22

Please follow and like us:

Close