Over 38,000 Sri Lankans in 143 countries seek to return home

Over 38,000 Sri Lankans in 143 countries seek to return home

Picture

Over 38,983 Overseas Sri Lankans (OSLs) in 143 countries at present seek to return home, based on information gathered mainly through the ‘Contact Sri Lanka’ Web Portal of the Ministry of Foreign Relations. This comprises 3,078 students, 4,040 short term visa holders, 27,854 Migrant workers, 3527 dependents and 484 duel citizens and others. Meanwhile since 21 April, up to now, 3600 OSLs have been repatriated from 15 countries, largely comprising foreign students and government officials on training, as well as their dependents.

Recognizing the need to collect data on vulnerable OSLs, the Ministry of Foreign Relations, with the assistance of the Information and Communication Technology Agency (ICTA), on 26 March 2020 created the ‘Contact Sri Lanka’ Web Portal, within a week following closure of the airport to inbound commercial flights. In parallel to the Portal, Sri Lanka Missions were also instructed to collect data on those who wish to return. The two sources, serve as the base for identifying vulnerable groups, prioritizing and repatriation.

The Contact Sri Lanka Web Portal also serves as a virtual help desk for the benefit of OSLs. According to Acting Director General, Economic Affairs (Multilateral) and Overseas Sri Lankans Anzul Jhan, since its launch, 78,033 Sri Lankans have registered on the Portal and a dedicated team operating effectively 24/7, have answered 7,788 questions posed by OSLs from across the globe - mainly on assistance on repatriation and consular issues, but also relating to other operational and policy matters.

The portal has not only been able to direct Sri Lankans to the nearest Sri Lanka Diplomatic Mission, specially where there is no Sri Lankan representation in the countries concerned, but also to help connect with vulnerable categories of Sri Lankans who are in need of food and also face medical emergencies, with provision of dry rations, medicines and in some occasions facilitating arrangements for shelter. It has also prompted streamlining issues pertaining to transfer of funds by migrants to Sri Lanka and to short term travellers and students from Sri Lanka. Some Missions have also helped students who faced issues in educational institutions and those whose employment contracts have expired to secure new employment agreements, so that they are not compelled to return due to unemployment.

Participating in a television discussion on Sri Lanka Rupavahini Corporation on Saturday (16 May), Foreign Secretary Ravinatha Aryasinha said, the ‘Contact Sri Lanka’ portal has become a reliable analytical organizational tool in forward planning and in fine-tuning the relations and direct communications between the Ministry, the Missions and the OSLs. He also added that the Ministry looks forward to expanding its utility and functions in the future.

Questioned on the manner in which the Missions abroad have responded in the face of the many challenges posed by the present pandemic, the Foreign Secretary explained to the public the complexity of the multiple tasks the Ministry and Mission staff had to simultaneously address across the globe, in an unprecedented manner. These included meeting the concerns of diplomats and tourists in Sri Lanka, securing Missions abroad, addressing the demands of those who wanted to return, easing conditions on the ground for those who wanted to remain in their host countries in collaboration with host governments and communities, securing essential supplies both medical and food, ensuring Sri Lankan exports reached their destinations and markets were found for new products such as Personal Protection Equipment (PPEs), garnering donations for the COVID-19 fund to the tune of Rs.27 million, and engaging with the WHO and other multilateral, regional and bilateral partners in leveraging Sri Lanka’s interests.

Foreign Secretary Aryasinha said, in this context, it was noteworthy that at present out of the 67 Missions of Sri Lanka, 1/3 of Missions function with officers in acting capacity from the Sri Lanka Foreign Service (SLFS), in the absence of an accredited Ambassador/High Commissioner and also several vacant diplomatic posts. He believed this experience has given significant exposure to several young SLFS officers who were acting in the posts of Heads of Mission to face high pressure situations, taking swift and calculated decisions in analyzing the host country situations to identify vulnerabilities, while dealing with aggrieved communities. He believed that such experiences would enrich their future career and would hold them in good stead in their professional progression.

Ministry of Foreign Relations
Colombo
17 May 2020

-------------------------------------

මාධ්‍ය නිවේදනය

විදේශ රටවල් 143 ක සිටින ශ්‍රී ලාංකිකයෝ 38,000 කට අධික පිරිසක් ආපසු සිය රට බලා පැමිණීමට අපේක්ෂා කරති

ප්‍රධාන වශයෙන්ම විදේශ සබඳතා අමාත්‍යාංශයේ ‘ශ්‍රී ලංකාව අමතන්න’ වෙබ් ද්වාරය හරහා රැස්කරගත් තොරතුරුවලට අනුව, විදේශ රටවල් 143 ක සිටින ශ්‍රී ලාංකිකයෝ 38,983 කට අධික සංඛ්‍යාවක් ආපසු සිය රට බලා පැමිණීමට අපේක්ෂා කරති. සිසු සිසුවියන් 3,078 ක්, කෙටිකාලීන වීසා බලපත්‍රලාභීන් 4,040 ක්, සංක්‍රමණික ශ්‍රමිකයන් 27,854 ක්, ඔවුන්ගෙන් යැපෙන්නන් 3,527 ක් සහ ද්විත්ව පුරවැසියන් 484 ක් සහ වෙනත් අය ද මීට ඇතුළත් වෙයි. මේ අතර, පසුගිය අ‌ප්‍රේල් 21 වැනි දින සිට මේ දක්වා එතෙර රටවල් 15 ක සිටි ශ්‍රී ලාංකිකයන් 3,600 දෙනෙකු මෙරටට ගෙන්වාගෙන ඇති අතර, එම කණ්ඩායම බොහෝ දුරට විදේශවල අධ්‍යාපනය හැදෑරූ සිසු සිසුවියන්, පුහුණුව සඳහා යවන ලද රජයේ නිලධාරීන් හා ඔවුන්ගෙන් යැපෙන්නන්ගෙන් සමන්විත වේ.

එතෙර සිටින අවදානමට ලක්විය හැකි ශ්‍රී ලාංකිකයන් පිළිබඳ දත්ත එක්රැස් කිරීමේ අවශ්‍යතාවය හඳුනාගත් විදේශ සබඳතා අමාත්‍යාංශය, මෙරටට පැමිණෙන ගුවන් ගමන් සඳහා ගුවන් තොටුපොළ වසා දැමීමෙන් සතියක් ඇතුළත දී, තොරතුරු හා සන්නිවේදන තාක්‍ෂණ නියෝජිතායතනයේ (ICTA) ද සහාය ඇතිව 2020 මාර්තු 26 වන දින ‘ශ්‍රී ලංකාව අමතන්න’ වෙබ් ද්වාරය නිර්මාණය කළේය. මෙම ද්වාරය විවෘත කිරීමට සමගාමීව, ආපසු ශ්‍රී ලංකාවට පැමිණීමට අපේක්ෂා කරන අය පිළිබඳ දත්ත එක්රැස් කරන ලෙස විදේශවල පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩලවලට ද උපදෙස් දෙන ලදී. අවදානමට ලක්විය හැකි කණ්ඩායම් හඳුනා ගැනීම, ප්‍රමුඛතාවය ලබා දීම සහ නැවත සියරට පැමිණවීම සඳහා පදනම ලෙස මෙම මූලාශ්‍ර දෙක භාවිත කෙරෙයි.

මෙම ‘ශ්‍රී ලංකාව අමතන්න’ වෙබ් ද්වාරය, එතෙර සිටින ශ්‍රී ලාංකිකයන්ගේ ප්‍රයෝජනය සඳහා අතථ්‍ය උපකාරක කවුළුවක් ලෙස ද කටයුතු කරයි. ආර්ථික කටයුතු (බහුපාර්ශ්වීය) සහ විදේශීය ශ්‍රී ලාංකිකයන් පිළිබඳ වැඩබලන අධ්‍යක්ෂ ජනරාල් අන්සුල් ජාන් ප්‍රකාශ කරන පරිදි, මෙම ද්වාරය දියත් කළ අවස්ථාවේ සිට මේ දක්වා එතෙර සිටින ශ්‍රී ලාංකිකයන් 78,033 දෙනෙකු එහි ලියාපදිංචි වී ඇති අතර, ඒ සඳහාම කැපවූ කණ්ඩායමක් විසින්, සතියේ දින 7 හි පැය 24 තුළ ම ඵලදායී ලෙස ක්‍රියාත්මක වෙමින්, ප්‍රධාන වශයෙන් නැවත සියරට පැමිණවීම සහ කොන්සියුලර් ගැටලු පිළිබඳව පමණක් නොව, වෙනත් මෙහෙයුම් සහ ප්‍රතිපත්තිමය කරුණු සම්බන්ධයෙන් ද ලොව වටා විදේශ රටවල සිටින ශ්‍රී ලාංකිකයන් විසින් නඟන ලද ප්‍රශ්න 7,788 කට පිළිතුරු ලබා දී ඇත.

විශේෂයෙන් අදාළ රටවල ශ්‍රී ලාංකික නියෝජනයක් නොමැති අවස්ථාවල දී, ශ්‍රී ලාංකිකයන් ආසන්නතම ශ්‍රී ලංකා රාජ්‍යතාන්ත්‍රික දූතමණ්ඩලය වෙත යොමු කිරීමට පමණක් නොව, ආහාර අවශ්‍යතාවයෙන් පෙළෙන සහ  හදිසි වෛද්‍ය අවස්ථාවන්ට මුහුණ දීමට සිදුවන ශ්‍රී ලාංකිකයන් සමඟ, වියළි සලාක හා ඖෂධ ලබා දීම සහ සමහර අවස්ථාවල නවාතැන් සඳහා පහසුකම් ද සැලසීම පිණිස සම්බන්ධ වීම සඳහා උපකාරී වීමට ද මෙම ද්වාරය සමත් වී තිබේ. සංක්‍රමණිකයන් විසින් ශ්‍රී ලංකාව වෙත මුදල් එවීම  හා ශ්‍රී ලංකාවේ සිට කෙටිකාලීන සංචාරකයින් සහ සිසු සිසුවියන් වෙත මුදල් යැවීම සම්බන්ධ ගැටලු විධිමත් කිරීමට ද එය උපකාරී වී තිබේ. අධ්‍යාපන ආයතනවල ගැටලුවලට මුහුණ දුන් සිසුන්ට සහ රැකියා ගිවිසුම් කල් ඉකුත් වූ අයට නව රැකියා ගිවිසුම් ලබා ගැනීම සඳහා සමහර දූත මණ්ඩල උපකාර කර ඇති අතර, එම නිසා විරැකියාව හේතුවෙන් නැවත මෙරටට පැමිණීමට බලාපොරොත්තුවෙන් පසුවන අය ඒ පිළිබදව නැවත සළකා බලන ලෙස ඉල්ලා සිටිනු ලැබේ.

සෙනසුරාදා (මැයි 16) දින ශ්‍රී ලංකා රූපවාහිනී සංස්ථාව සමඟ පැවති රූපවාහිනී සාකච්ඡාවකට සහභාගී වෙමින් විදේශ ලේකම් රවිනාථ ආර්යසිංහ මහතා පැවසුවේ, ඉදිරි සැලසුම් සකස් කිරීමේ දී සහ මෙම අමාත්‍යාංශය, දූත මණ්ඩල සහ එතෙර සිටින ශ්‍රී ලාංකිකයන් අතර සබඳතා හා ඍජු සන්නිවේදනයන් සියුම් ලෙස සම්බන්ධීකරණය කිරීමේදී විශ්වාසදායක විශ්ලේෂණාත්මක ආයතනික මෙවලමක් බවට මෙම ‘ශ්‍රී ලංකාව අමතන්න’ ද්වාරය පත්ව ඇති බවයි. අනාගතයේ දී එහි උපයෝගීතාව සහ ක්‍රියාකාරිත්වයන් පුළුල් කිරීමට මෙම අමාත්‍යාංශය අපේක්ෂා කරන බව ද ඔහු පැවසීය.

වර්තමාන ගෝලීය වසංගත තත්ත්වය නිසා ඇති වී තිබෙන අභියෝග රාශිය හමුවේ විදේශ දූත මණ්ඩල ප්‍රතිචාර දක්වා ඇති ආකාරය පිළිබඳව නඟන ලද ප්‍රශ්නවලට පිළිතුරු දෙමින්, මෙම අමාත්‍යාංශයට සහ ලොව පුරා පිහිටි දූත මණ්ඩල කාර්ය මණ්ඩලවලට පෙර නොවූ විරූ ආකාරයකින් එකවර විසඳිය යුතු වූ විවිධ කර්තව්‍යයන්හි සංකීර්ණතාව පිළිබඳව විදේශ ලේකම්වරයා මහජනයාට පැහැදිලි කළේය. එහිදී ශ්‍රී ලංකාවේ සිටින රාජ්‍යතාන්ත්‍රිකයින්ගේ සහ සංචාරකයින්ගේ අවශ්‍යතා සපුරාලීම, විදේශ දූත මණ්ඩල සුරක්ෂිත කිරීම, ආපසු පැමිණීමට අපේක්ෂා කරන අයගේ බලවත් ඉල්ලීම් පිළිබඳව කටයුතු කිරීම, සත්කාරක රජයන් සහ ප්‍රජාවන් සමඟ සහයෝගයෙන් යුතුව තම සත්කාරක රටවල රැඳී සිටීමට අපේක්ෂා කරන අය සඳහා එම භූමිවල කොන්දේසි ලිහිල් කරවා දීම, ශ්‍රී ලංකාවේ වෛද්‍ය සහ ආහාර යන අංශ දෙකෙහිම අත්‍යවශ්‍ය සැපයුම් සුරක්ෂිත කිරීම, ශ්‍රී ලංකාවේ අපනයන අදාළ ගමනාන්ත කරා ළඟා වීම සදහා කටයුතු සම්පාදනය, පුද්ගලික ආරක්ෂණ උපකරණ (PPEs) වැනි නව නිෂ්පාදන සඳහා වෙළඳපල සොයා ගැනීම සහතික කිරීම, ශ්‍රී ලංකාව සැලකිලිමත් වන කරුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා ලෝක සෞඛ්‍ය සංවිධානය සහ අනෙකුත් බහුපාර්ශ්වික, කලාපීය සහ ද්විපාර්ශ්වික හවුල්කරුවන් සමඟ එක්ව කටයුතු කිරීම ආදී කර්තව්‍යයන් සිදු කරනු ලබන අතර කොවිඩ්-19 අරමුදල සඳහා ද රුපියල් මිලියන 27 ක මුදලක් එකතු කොට පරිත්‍යාග කරන ලද බවද ප්‍රකාශ කළේය.

මෙම සන්දර්භය තුළ, අක්තගන්වන ලද තානාපතිවරුන්/මහ කොමසාරිස්වරුන් නොමැතිව සහ පුරප්පාඩු වූ රාජ්‍යතාන්ත්‍රික තනතුරු සහිතව ශ්‍රී ලංකා දූත මණ්ඩල 67 න් 1/3 කම ක්‍රියාත්මක වන අතර තානාපතිවරු නොමැති කාර්යාලයන්හි ශ්‍රී ලංකා විදේශ සේවයේ (SLFS) නිලධාරීන් වැඩබැලීමේ තත්ත්වයෙන් කටයුතු කිරීම සැලකිල්ලට ගත යුතු කරුණක් බව විදේශ ලේකම් ආර්යසිංහ මහතා පැවසීය. පීඩාවට පත් වූ ප්‍රජාවන් සමඟ කටයුතු කරන අතරතුර දී, බරපතල අවස්ථාවන්ට මුහුණ දීමට සහ අවදානම් තත්වයන් හඳුනා ගැනීම පිණිස සත්කාරක රටෙහි පවතින තත්වයන් විශ්ලේෂණය කිරීමේ දී අප්‍රමාදීව හා සිතාමතා තීරණ ගැනීම ආදී වූ අත්දැකීම් ලබා ගැනීමට දූත මණ්ඩල ප්‍රධානී තනතුරුවල වැඩබලන ශ්‍රී ලංකා විදේශ සේවයේ තරුණ නිලධාරීන් කිහිප දෙනෙකු සඳහා මෙය කදිම අවස්ථාවක් බවට පත්ව ඇති අතර එවැනි අත්දැකීම් ඔවුන්ගේ අනාගත වෘත්තිය සාරවත් කරනු ඇති අතර, ඔවුන්ගේ වෘත්තිමය දියුණුව සඳහා ඔවුන්ට හොඳ ස්ථාවරයක් ලබා දෙනු ඇතැයි ද විදේශ ලේකම්වරයා විශ්වාසය පළ කළේය.

විදේශ සබඳතා අමාත්‍යාංශය
කොළඹ
2020 මැයි 17 වැනි දින
-------------------------------------
ஊடக வெளியீடு
 
143 நாடுகளிலுள்ள 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தற்போது 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர். இவர்களுள் 3,078 மாணவர்கள், 4,040 குறுகிய கால வீசாவையுடையவர்கள், 27,854 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 3527 தங்கிவாழ்வோர் மற்றும் 484 இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள் மற்றும் ஏனைய நபர்கள் உள்ளடங்குவர். அதேவேளை, ஏப்ரல் 21 தொடக்கம் தற்போது வரை, பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் என 15 நாடுகளிலிருந்து 3600 வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, உள்வரும் வணிக விமானங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்ட ஒரு வார காலப்பகுதிக்குள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரமைப்பின் உதவியுடன் 2020 மார்ச் 26 ஆந் திகதி 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உருவாக்கியது. இந்த இணைய முகப்புக்கு இணையாக, நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்புவோர் பற்றிய தரவுகளை சேகரிக்குமாறு இலங்கைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாதிக்கப்படக்கூடிய குழுக்களை அடையாளம் காண்பதற்கும், முன்னுரிமை அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்குமான அடிப்படையாக இந்த இரண்டு மூலங்களும் செயற்படுகின்றன.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக உண்மையான உதவி மையமாக இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல் இணைய முகப்பு செயற்படுகின்றது. இந்த இணைய முகப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, 78,033 இலங்கையர்கள் இதில் பதிவு செய்துள்ளதுடன், முக்கியமாக நாட்டிற்கு மீள அழைத்து வரல் மற்றும் கொன்சுலர் பிரச்சினைகள் தொடர்பான உதவி சம்பந்தமாகவும், ஏனைய செயற்பாட்டு மற்றும் கொள்கை விடயங்கள் சம்பந்தமாகவும் உலகம் முழுவதிலுமுள்ள வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எழுப்பிய 7,788 கேள்விகளுக்கு, 24/7 என்ற அடிப்படையில் திறம்பட செயற்படும் பிரத்தியேகமான குழுவொன்று பதிலளித்துள்ளது என பொருளாதார விவகாரங்கள் (பலதரப்பு) மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நாடுகளில் இலங்கையின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லாத நிலையில், அருகிலுள்ள இலங்கையின் இராஜதந்திரத் தூதரகங்களுக்கு இலங்கையர்களை வழிநடத்துவதற்கு இந்த இணைய முகப்பு உதவியது மட்டுமன்றி, உலர் உணவுகள், மருந்துப் பொருட்களை வழங்குதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தல் என்ற வகையில், உணவுகள் தேவைப்படும் மற்றும் மருத்துவ அவசர நிலைகளை எதிர்கொள்ளும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களின் வகைகளுடன் இணைப்பதற்கும் உதவியது. புலம்பெயர்ந்தவர்கள் இலங்கைக்கும், குறுகிய காலப் பிரயாணிகள் மற்றும் மாணவர்களுக்கு இலங்கையிலிருந்தும் நிதிப் பரிமாற்றம் மேற்கொள்வது தொடர்பான பிரச்சினைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் இது வழியமைத்துள்ளது. கல்வி நிறுவனங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்ட மாணவர்களுக்கும், மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியானவர்கள் வேலையின்மை காரணமாக திரும்பி வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படாதிருப்பதன் நிமித்தம், புதிய வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கும் உதவியுள்ளன.

முன்னோக்கித் திட்டமிடுவதிலும், அமைச்சு, தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இடையில் உறவுகள் மற்றும் நேரடித் தகவல் தொடர்புகளை சிறப்பாக மேற்கொள்வதிலும் நம்பகமான பகுப்பாய்வு நிறுவனக் கருவியாக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பு மாறியுள்ளதாக, சனிக்கிழமை (மே 16) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற தொலைக்காட்சிக் கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்ட வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் அதன் பயன்பாடு மற்றும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட பல சவால்களை எதிர்கொண்டு வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் எவ்வாறு பதிலளித்தன என்பது குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், முன்னோடியில்லாத வகையில் அமைச்சு மற்றும் தூதரக ஊழியர்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தெரிவிக்க வேண்டிய பல பணிகளின் சிக்கல் நிலை குறித்து வெளிவிவகார செயலாளர் மக்களுக்கு விளக்கினார். இலங்கையிலுள்ள இராஜதந்திரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்களை எதிர்கொள்ளுதல், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களைப் பாதுகாத்தல், நாட்டிற்குத் திரும்பி வர விரும்புவோரின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்தல், பெற்றுக்கொண்ட அரசாங்கங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து, அந்த நாடுகளில் தங்க விரும்புவோருக்கான நிலைமைகளை தளர்த்துதல், மருத்துவம் மற்றும் உணவு ஆகிய இரண்டிற்குமான அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாத்தல், இலங்கை ஏற்றுமதியாளர்கள் தமது இலக்குத் தளங்களை அடைவதை உறுதிசெய்தல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற புதிய தயாரிப்புக்களுக்கான சந்தைகளை கண்டறிதல், கோவிட்-19 நிதியத்திற்கான நிதிப் பெறுமதி ரூபா. 27 மில்லியனை அடையும் வகையில் நன்கொடைகளை சேகரித்தல் மற்றும் இலங்கையின் நலன்களை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஏனைய பல்தரப்பு, பிராந்திய மற்றும் இருதரப்பு பங்காளர்களுடன் ஈடுபடுதல் ஆகியன இவற்றுள் உள்ளடங்கும்.

இலங்கையின் 67 தூதரகங்களில் 1/3 தூதரகங்களிலுள்ள அங்கீகாரம் பெற்ற தூதுவர் / உயர் ஸ்தானிகர் மற்றும் வெற்றிடமாகவுள்ள பல இராஜதந்திரப் பதவிகளில், தற்போது இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த பதில் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க குறிப்பிட்டார். உயர் அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும், பாதிப்புக்குள்ளான சமூகங்களை கையாள்வதிலும், பாதிப்புக்களை அடையாளம் காண்பதற்காக, பெற்றுக்கொண்ட நாட்டின் சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்வதில் விரைவான மற்றும் கணக்கிடப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், தூதரகத் தலைவர்கள் பதவிகளில் செயற்பட்டு வரும் பல இளம் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த அனுபவம் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளதாக அவர் நம்புகின்றார். இத்தகைய அனுபவங்கள் அவர்களது எதிர்கால வாழ்க்கையை வளமாக்கும் அதே வேளை, அவர்களது தொழில் முன்னேற்றத்தில் அவர்களுக்கு நல்லதொரு நிலைமையை ஏற்படுத்தும் என அவர் கருதுகின்றார்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

17 மே 2020

Please follow and like us:

Close