Sri Lanka pledges to support the implementation of the Lumbini Master Plan

Sri Lanka pledges to support the implementation of the Lumbini Master Plan

Image 01

President Maithripala Sirisena concluded a two- day bilateral visit to Nepal on Sunday (02 September 2018), announcing Sri Lanka’s readiness to support the implementation of the Lumbini Master Plan, which would ensure the conservation of the historic site and enhance the facilities for pilgrims. The President was in Nepal to attend the 4th BIMSTEC Summit held on 30-31 August 2018.

He made this announcement during bilateral talks with Nepali President Bidhya Devi Bhandari, which was followed by an official banquet in honour of President Sirisena at Shital Nivas on Saturday, 01 September. Earlier in the day, the President and the delegation visited the sacred site in Lumbini, which is the birthplace of Prince Siddhartha Gautama. Over 50,000 Sri Lankans pay homage in Lumbini annually.

At their meeting, the two leaders reviewed with satisfaction the bilateral exchanges that have taken place over the past few years. The Nepali President expressed appreciation to Sri Lanka for being a true friend and assisting in the aftermath of the 2015 earthquake that devastated the country, particularly in the reconstruction efforts at the Anand Kutir Temple and the Rato Machindranath Temple in Kathmandu. The leaders also discussed the possibility of marketing a ‘Buddhist Circuit’ as an initiative to boost tourism between the countries, and from outside the region.

President Sirisena congratulated the Government of Nepal on the successful conclusion of the 4th BIMSTEC Summit and as the BIMSTEC’s new Chair, sought the cooperation of Nepal in operationalising the ambitious Kathmandu Declaration.

 During his meeting with the Prime Minister of Nepal K.P. Sharma Oli, the President emphasized the importance of strengthening economic relations between the two countries, and the Nepali Prime Minister said that the Sri Lanka-Nepal Joint Commission will be held early to carry forward the ideas discussed.

 On Friday, 31 August, President Sirisena also inaugurated a ‘Trade, Tourism and Investment Dialogue’ organised by the Institute for Strategic and Socio-Economic Research of Nepal. Addressing the gathering, State Minister of Foreign Affairs Vasantha Senanayake requested that Sri Lankan companies in construction, education, IT, healthcare, apparel and hospitality be facilitated to invest in Nepal.

During the visit, two Memoranda of Understanding were exchanged between the two governments, the first between the Institute of Foreign Affairs of Nepal and the Bandaranaike International Diplomatic Training Institute of Sri Lanka, and the second on Cooperation for Youth Development.

President Maithripala Sirisena also visited the Secretariat of the South Asian Association for Regional Cooperation (SAARC) headquartered in Kathmandu. He was received by the Secretary General of SAARC Amjad Hussain B. Sial and the Directors of SAARC. To mark his first visit to the SAARC Secretariat, the President planted a tree sapling in the premises. Addressing the officials at the SAARC Secretariat, President Sirisena said that Sri Lanka strongly supports the SAARC process as one of its founding members, and that his visit was intended to encourage the Secretary General and staff of the Secretariat for the important work they were doing.

He also visited the Anand Kutir Vihara and received a briefing on the progress of re-construction of the Vihara and also of the Rato Machindranath Temple. The President and his delegation also visited the Pashupatinath Temple in Kathmandu and received blessings.

Ministry of Foreign Affairs
Colombo

 

3 September 2018

 

-------------------------------------

ලුම්බිණි ප්‍රධාන සැලැස්ම ක්‍රියාත්මක කිරීමට සහය දෙන බවට ශ්‍රී ලංකාව ප්‍රතිඥා දෙයි

ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා සැප්තැම්බර් 02 වැනි ඉරු දින සිය දෙදින නේපාල ද්විපාර්ශ්වික සංචාරය නිමාවට පත් කළේය. ඓතිහාසික ලුම්බිණි පුදබිම සංරක්ෂණය කිරීම සහ එහි පැමිණෙන වන්දනාකරුවන්ගේ පහසුකම් වැඩිදියුණු කිරීම අරමුණු කරගත් ලුම්බිණි ප්‍රධාන සැලැස්ම ක්‍රියාත්මක කිරීම සඳහා සහය දීමට ශ්‍රී ලංකාව සූදානම් බව මෙම සංචාරය අතරතුරදී ඒ මහතා ප්‍රකාශයට පත් කළේය. 2018 අගෝස්තු 30-31 යන දෙදින තුළ පැවැති සිවුවැනි බිම්ස්ටෙක් සමුළුවට සහභාගීවීම සඳහා ජනාධිපතිවරයා නේපාලයේ සංචාරය කර තිබිණි.

ජනාධිපතිවරයා මේ බව ප්‍රකාශ කළේ 2018 සැප්තැම්බර් 01 වැනි සෙනසුරාදා දින නේපාල ජනාධිපතිනි බිද්‍යා දේවි භන්දාරි මහත්මිය සමග පැවැති ද්විපාර්ශ්වික සාකච්ඡා අතරතුරදීය. ඉන් අනතුරුව නේපාල ජනපති නිල නිවෙස වූ ශීතල් නිවස් හිදී ජනාධිපති සිරිසේන මහතා වෙනුවෙන් නිල රාත්‍රී භෝජන සංග්‍රහයක් පවත්වනු ලැබිණි. එදින උදෑසන ජනාධිපතිවරයා සහ නියෝජිත පිරිස සිද්ධාර්ථ කුමාරෝත්පත්තිය සිදුවූ ලුම්බිණි පුදබිම වෙත සංචාරයක නියැළිණි. 50, 000 කට අධික ශ්‍රී ලාංකික බැතිමතුන් පිරිසක් වාර්ෂිකව ලුම්බිණි පුදබිම වැඳපුදා ගනිති.

පසුගිය වසර කිහිපය තිස්සේ දෙරට අතර පැවැති සම්බන්ධතා නායක දෙපළ සිය රැස්වීමේදී තෘප්තියෙන් යුතුව සමාලෝචනය කළහ. නේපාලයේ සැබෑ මිතුරකු වීම සම්බන්ධයෙන් සහ රට විනාශයට පත් කළ 2015 භූමිකම්පාවෙන් පසු දුන් සහය, විශේෂයෙන්ම කත්මණ්ඩු නුවර ආනන්ද් කුටීර් විහාරය හා රාතෝ මචින්ද්‍රනාත් දෙවොල පිළිසකර කිරීමේ ප්‍රයත්නවලට ලබා දුන් සහය සම්බන්ධයෙන් නේපාල ජනපතිනිය ශ්‍රී  ලංකාවට සිය කෘතඥතාව පළ කළාය. දෙරට අතර සංචාරය කරන සංචාරකයන් හා කලාපයට පිටතින් පැමිණෙන සංචාරකයන් සංඛ්‍යාව වර්ධනය කිරීම සඳහා මුලපිරීමක් වශයෙන් ‘බෞද්ධ සංචාරක ප්‍රදේශයක්’ ප්‍රවර්ධනය කිරීමේ හැකියාවද නායක දෙපළගේ සාකච්ඡාවට බඳුන් විය.

සිවුවැනි බිම්ස්ටෙක් සමුළුව සාර්ථකව පැවැත්වීම සම්බන්ධයෙන් නේපාල රජයට සුබපැතුම් පිරිනැමූ ජනාධිපති සිරිසේන මහතා බිම්ස්ටෙක් සංවිධානයේ නව සභාපතිවරයා වශයෙන් කත්මණ්ඩු ප්‍රකාශනය ක්‍රියාත්මක කිරීම සඳහා නේපාලයේ සහයෝගය ඉල්ලා සිටියේය.

නේපාල අගමැති කේ.පී. ෂර්මා ඔලි මහතා සමඟ පැවැති හමුවේදී දෙරට අතර ආර්ථික සබඳතා ශක්තිමත් කිරීමේ වැදගත්කම ජනාධිපති සිරිසේන මහතා අවධාරණය කළ අතර, සාකච්ඡාවට බඳුන් වූ කරුණු ඉදිරියට ගෙනයෑම සඳහා ශ්‍රී ලංකා-නේපාල ඒකාබද්ධ කොමිසම නුදුරේදීම පැවැත්වෙන බව නේපාල අග්‍රාමාත්‍යවරයා පැවසීය.

නේපාලයේ ක්‍රමෝපායික හා සමාජ-ආර්ථික පර්යේෂණ ආයතනය විසින් සංවිධානය කරන ලද ‘වෙළෙඳ, සංචාරක හා ආයෝජන සංවාදය’ක් අගෝස්තු 31 වැනි දින ජනාධිපති සිරිසේන මහතා විසින් විවෘත කරන ලදී. එම හමුව ඇමතූ විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍ය වසන්ත සේනානායක මහතා, ඉදිකිරීම්, අධ්‍යාපන, තොරතුරු තාක්ෂණ, සෞඛ්‍ය පහසුකම්, ඇඟලුම් සහ හෝටල් වැනි ක්ෂේත්‍රවල නියුතු ශ්‍රී ලාංකික සමාගම්වලට නේපාලයේ ආයෝජනය කිරීමට පහසුකම් සපයන ලෙස ඉල්ලා සිටියේය.

මෙම සංචාරය අතරතුරදී දෙරට අතර අවබෝධතා ගිවිසුම් දෙකකට අත්සන් තැබිණි. ඉන් පළමුවැන්න නේපාල විදේශ කටයුතු ආයතනය සහ බණ්ඩාරනායක රාජ්‍ය තාන්ත්‍රික පුහුණු ආයතනය අතර අවබෝධතා ගිවිසුමක් වන අතර දෙවැන්න යොවුන් සංවර්ධනය සඳහා වූ සහයෝගීතාව පිළිබඳ ගිවිසුමක් වේ.

ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා කත්මණ්ඩු නුවර පිහිටි සාර්ක් සංවිධානයේ මහලේකම් කාර්යාලයටද ගිය අතර එහිදී සාර්ක් මහලේකම් අම්ජාඩ් හුසේන් බී. සියාල් මහතා සහ මහලේකම් කාර්යාලයේ අධ්‍යක්ෂවරුන් විසින් ඒ මහතා පිළිගනු ලැබිණි. සාර්ක් මහලේකම් කාර්යාලයට පැමිණි සිය පළමු අවස්ථාව සනිටුහන් කිරීම සඳහා ජනාධිපතිවරයා එහි පැලයක්ද රෝපණය කළේය. සාර්ක් මහලේකම් කාර්යාලයේ නිලධාරීන් ඇමතූ ජනාධිපති සිරිසේන මහතා සංවිධානයේ මුල් සාමාජිකයකු ලෙස ශ්‍රී ලංකාව සාර්ක් ක්‍රියාදාමයට දැඩි ලෙස සහය දක්වන බවත්, තමන් මහලේකම් කාර්යාලයට පැමිණීමේ අරමුණ මහලේකම්වරයා සහ කාර්ය මණ්ඩලය විසින් ඉටු කරනු ලබන වැදගත් කාර්යභාරය දිරිමත් කිරීම බවත් ප්‍රකාශ කළේය.

ආනන්ද් කුටීර් විහාරයටද ගිය ජනාධිපතිවරයා හට එම විහාරය සහ රාතෝ මචින්ද්‍රනාත් දෙවොල පිළිසකර කිරීමේ කටයුතුවල ප්‍රගතිය පිළිබඳව කරුණු දක්වන ලදී. ජනාධිපති සිරිසේන මහතා සහ නියෝජිත පිරිස කත්මණ්ඩු නුවර පිහිටි පශුපතිනාත් දෙවොලටද ගොස් ආශීර්වාද ලබාගත්හ.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ

 

 2018 සැප්තැම්බර් 03 වැනිදා

---------------------------------------------

 

லும்பினி பெருந்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்கு இலங்கை உறுதிமொழியளிக்கின்றது

வரலாற்றுப் பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் யாத்திரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் லும்பினி பெருந்திட்டத்தினை நடைமுறைப்புடுத்துவதற்கு ஆதரவு வழங்குவதற்கான இலங்கையின் ஆயத்த நிலைமையினை அறிவித்தவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது நேபாளத்திற்கான இரண்டு நாள் இரு தரப்பு விஜயத்தினை ஞாயிற்றுக்கிழமை (2018 செப்டெம்பர் 02ஆந் திகதி) பூர்த்தி செய்தார். 2018 ஆகஸ்ட் 30 - 31ஆந் திகதி நடைபெற்ற 4ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அவர்கள் நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

செப்டம்பர் 01ஆந் திகதி சனிக்கிழமை ஷிடால் நிவாஸில் இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கான உத்தியோகபூர்வ மரியாதை விருந்துபசாரத்தைத் தொடர்ந்து, நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி அவர்களுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களின் போது அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டார். குறித்த நாளின் ஆரம்பத்தில், ஜனாதிபதியும், அவரது தூதுக்குழுவினரும் இளவரசர் சித்தார்த்த கௌதம அவர்களின் பிறப்பிடமான புனித லும்பினிக்கு விஜயம் செய்திருந்தனர். வருடாந்தம் 50,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் லும்பினிக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.

அவர்களின் சந்திப்பின் போது, கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற இருதரப்பு பரிமாற்றங்களின் திருப்திகரமான விடயங்களை இரு தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். இலங்கை நேபாளத்தின் உண்மையான நட்பு நாடாக திகழ்வதற்காகவும், நாட்டை 2015இல் தாக்கிய நில அதிர்வுக்குப் பின்னர் குறிப்பாக கத்மண்டுவில் அமைந்துள்ள ஆனந்த் குதிர் விகாரை மற்றும் ராடோ மசிந்திரநாத் விகாரை ஆகியவற்றை மீள நிர்மாணிப்பதற்கு நல்கிய உதவிகளுக்குமாக நேபாள ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இரு நாடுகளுக்கு மத்தியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து சுற்றுலாத்துறையை வளர்த்துக் கொள்வதற்காகவும் “புத்த சுற்று” எனும் துவக்க முயற்சியை சந்தைப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் இரு தலைவர்களும் மேலும் கலந்துரையாடினர்.

4ஆவது பிம்ஸ்டக் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்காக ஜனாதிபதி சிறிசேன அவர்கள் நேபாள அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பிம்ஸ்டெக்கின் புதிய தலைமை என்ற ரீதியில், இலட்சியபூர்வமான கத்மண்டு பிரகடனத்தினை செயற்படுத்துவதற்காக நேபாளத்தின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்த்தார். நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஒலி அவர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி அவர்கள் இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியதுடன், நேபாள பிரதமர் அவர்கள் கலந்துரையாடப்பட்ட கருத்துக்களை முன்னெடுப்பதற்காக இலங்கை-நேபாள இணைந்த ஆணைக்குழுவொன்று ஆரம்பத்தில் இடம்பெறும் என தெரிவித்தார்.

மேலும், நேபாளத்தின் மூலோபாய மற்றும் சமூக-பொருளாதார ஆய்வு நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு கலந்துரையாடல்” இனை ஆகஸ்ட் 31ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆரம்பித்து வைத்தார். சமுகமளித்திருந்திருந்தவர்களுக்கு  உரையாற்றிய இராஜாங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வசந்த சேனாநாயக அவர்கள், இலங்கையிலுள்ள நிர்மாண, கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், ஆடை மற்றும் உபசரணை கம்பனிகள் நேபாளத்தில் முதலீடு செய்வதற்கு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

விஜயத்தின் போது, இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இரண்டு அரசாங்கங்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டன. முதலாவது, நேபாளத்தின் வெளிநாட்டு அலுவல்கள் நிறுவகம்,  மற்றும் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச  இராஜதந்திர பயிற்சி நிறுவகம் ஆகியவற்றிக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட அதேவேளை, இரண்டாவது இளைஞர் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு பற்றியதாகவும் அமைந்திருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கத்மண்டுவில் தாபிக்கப்பட்டுள்ள சார்க் அமைப்பின் செயலகத்திற்கும் விஜயம் செய்தார். அங்கு அவர் சார்க்கின் செயலாளர் நாயகம், அம்ஜட் உசைன் பீ சியல் அவர்களாலும் சார்க்கின் பணிப்பாளர்களாலும் வரவேற்கப்பட்டார். சார்க் செயலகத்திற்கான அவரின் முதலாவது விஜயத்தை குறிக்கும் முகமாக, ஜனாதிபதி அவர்கள் மரக்கன்றொன்றை வளாகாத்தில் நாட்டினார்.  சார்க் செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி,  இலங்கையானது ஆரம்ப உறுப்பு நாடென்ற வகையில் சார்க் செயற்பாட்டிற்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும், அவரது விஜயமானது செயலாளர் நாயகம் மற்றும் செயலகத்தின் பணியாட்கள் செய்யும் முக்கியமான பணிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்ததாகவும்  தெரிவித்தார்.

மேலும் அவர் ஆனந்த் குதிர் விகாரை மற்றும் ராடோ மசிந்திரநாத் விகாரை ஆகியவற்றை தரிசித்து விகாரைகளின் மீள்கட்டுமானப் பணிகள் குறித்து சாரம்சமொன்றினை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கத்மண்டுவிலுள்ள பசுபதிநாத் விகாரையை தரிசித்து ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

03 செப்படம்பர் 2018

 

Please follow and like us:

Close