​​Minister of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Prince Faisal bin Farhan bin Abdulla Al Saud and the accompanying delegation make an official visit to Sri Lanka

​​Minister of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Prince Faisal bin Farhan bin Abdulla Al Saud and the accompanying delegation make an official visit to Sri Lanka

The visiting Minister of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, H.H. Prince Faisal bin Farhan bin Abdulla Al Saud paid a courtesy calls on President Gotabaya Rajapaksa and Prime Minister Mahinda Rajapaksa followed by a bilateral meeting with the Minister of Foreign Affairs, Prof. G.L. Peiris, at the Ministry of Foreign Affairs on 14 March 2022.

While welcoming the Saudi Foreign Minister, Minister Peiris expressed Sri Lanka’s keen interest to transform Sri Lanka– Saudi Arabia bilateral relations into a results-oriented, multi-faceted partnership.

The two Ministers agreed to a stronger relationship on a multitude of areas of bilateral interest for the mutual benefit, in the current global context.

Minister Peiris noted with appreciation Saudi Arabia’s strong support and empathetic approach towards Sri Lanka at the United Nations, especially during the 49th Session of the Human Rights Council in Geneva.

Foreign Minister Prof. Peiris encouraged Saudi investments in the Colombo port, Hambantota port, dedicated Pharmaceutical zones in Hambantota,  newly identified IT parks, fabric/textile zone in Batticaloa and further sought more employment opportunities for Sri Lankans in the Saudi Arabian job market.

Noting that development cooperation comprises an important element in the bilateral partnership, Minister Peiris conveyed Sri Lanka’s appreciation to Saudi Arabia for providing infrastructure development assistance to Sri Lanka.

During the talks, the Saudi Foreign Minister reiterated the commitment of the Saudi Arabian Government to further deepen the already buoyant bilateral relations between the two countries and further emphasized economic cooperation. He underscored the vision of Saudi Arabia 2030 as a means to transform Saudi Arabia from the present dependency on oil to digital economy in the Middle East region.

State Minister of Regional Cooperation, Tharaka Balasuriya, Secretary to the Foreign Affairs Admiral Prof. Jayanath Colombage and senior Foreign Ministry officials were engaged with the bilateral meeting at the Ministry of Foreign Affairs. The Saudi Foreign Minister, Prince Faisal bin Farhan bin Abdulla Al- Saud was accompanied to the meeting by the Ambassador of Saudi Arabia to Sri Lanka, Abdulnaser bin Hussain Al-Harthi, Director General of the Office of the Minister of Foreign Affairs,  Abdulrahaman Arkan I. Aldawood, Second Secretary, Taif Abdulkhaliq S. Kadasah and the Officer-in-Charge of Political Affairs, Afnan Fahad A. Alhumaidan.

Ministry of Foreign Affairs

Colombo

​14 March, 2022​

..............................................................

මාධ්‍ය නිවේදනය

 සෞදි අරාබි රාජධානියේ විදේශ කටයුතු අමාත්‍ය ෆයිසාල් බින් ෆර්හාන් බින් අබ්දුල්ලා අල් සෞද් කුමරු ඇතුළු දූත පිරිසක් ශ්‍රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වේ

මෙරට සංචාරයක නිරත සෞදි අරාබි රාජධානියේ විදේශ කටයුතු අමාත්‍ය ෆයිසාල් බින් ෆර්හාන් බින් අබ්දුල්ලා අල් සෞද් කුමරු ​ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතා සහ අග්‍රාමාත්‍ය මහින්ද රාජපක්ෂ මහතා හමු වූ අතර අනතුරුව විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා හමුවී ද්විපාර්ශ්වික සාකච්ඡාවක් 2022 මාර්තු 14 වැනි දින විදේශ කටයුතු අමාත්‍යාංශ​යේ දී පැවැත්වීය.

සෞදි විදේශ අමාත්‍යවරයා පිළිගත් අමාත්‍ය පීරිස් මැතිතුමා, ශ්‍රී ලංකා - සෞදි අරාබි ද්විපාර්ශ්වික සබඳතා ප්‍රතිඵල මත පදනම් වූ බහුවිධ හවුල්කාරිත්වයක් බවට පරිවර්තනය කිරීම සඳහා ශ්‍රී ලංකාව තුළ පවත්නා දැඩි උද්‍යෝගය පිළිබඳව සඳහන් කළේ ය.

වත්මන් ගෝලීය සන්දර්භය තුළ අන්‍යෝන්‍ය ප්‍රතිලාභ අත්පත් කරගැනීම සඳහා ද්විපාර්ශ්වික උනන්දුවක් දක්වන ක්ෂේත්‍ර රාශියක් සම්බන්ධයෙන් ශක්තිමත් සබඳතා පැවැත්වීමට අමාත්‍යවරුන් දෙදෙනා මෙහිදී සිය එකඟත්වය පළ කළහ.

විශේෂයෙන්ම ජිනීවා හි පැවති එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ 49 වැනි සැසිවාරයේ දී සෞදි අරාබිය ශ්‍රී ලංකාව වෙත පළ කළ දැඩි සහයෝගය සහ අනුගමනය කළ සංවේදී ප්‍රවේශය, අමාත්‍ය පීරිස් මැතිතුමාගේ ඇගයුමට ලක්විය.

කොළඹ වරාය, හම්බන්තොට වරාය, හම්බන්තොට විශේෂිත ඖෂධ කලාප, අලුතින් හඳුනාගත් තොරතුරු තාක්ෂණ උද්‍යාන, මඩකලපුවේ ඇඟළුම්/රෙදිපිළි කලාපය සම්බන්ධයෙන් සෞදි ආයෝජන දිරිමත් කළ විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා, සෞදි අරාබියේ රැකියා වෙළෙඳපොළ තුළ ශ්‍රී ලාංකිකයන් සඳහා පවත්නා ඉහළ රැකියා අවස්ථා පිළිබඳව වැඩිදුරටත් සාකච්ඡා කළේ ය.

සංවර්ධන සහයෝගීතාව ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වයේ වැදගත් අංගයක් බව සඳහන් කළ අමාත්‍ය පීරිස් මැතිතුමා, ශ්‍රී ලංකාවට යටිතල පහසුකම් සංවර්ධන සහය ලබා දීම සම්බන්ධයෙන් සෞදි අරාබිය වෙත ශ්‍රී ලංකාවේ ප්‍රසාදය පළ කළේ ය.

මේ වන විට දෙරට අතර පවත්නා ඉහළ ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ගැඹුරු කිරීම සම්බන්ධයෙන් සෞදි අරාබි රජය සතු කැපවීම පිළිබඳව නැවත අවධාරණය කළ සෞදි විදේශ අමාත්‍යවරයා, ආර්ථික සහයෝගීතාව පිළිබඳව වැඩිදුර අවධාරණය කළේ ය.තවද,  වර්තමානයේ දී තෙල් මත යැපෙන සෞදි අරාබි ආර්ථිකය, ‘සෞදි අරාබිය 2030’ නමැති දැක්ම අනුව මැද පෙරදිග කලාපයේ ඩිජිටල් ආර්ථිකයක් දක්වා පරිවර්තනය කිරීම සඳහා කටයුතු කරන බව එතුමා අවධාරණය කළේ ය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ පැවති මෙම හමුව සඳහා කලාපීය සහයෝගීතා රාජ්‍ය අමාත්‍ය තාරක බාලසූරිය මැතිතුමා, විදේශ කටයුතු ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා සහ විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් සහභාගී වූහ. සෞදි අරාබියේ විදේශ අමාත්‍ය ෆයිසාල් බින් ෆර්හාන් බින් අබ්දුල්ලා අල් සෞද් කුමරු, ශ්‍රී ලංකාවේ සෞදි අරාබි තානාපති අබ්දුල්නසර් බින් හුසෙයින් අල්- හර්ති මැතිතුමා, විදේශ අමාත්‍යවරයාගේ කාර්යාලයේ අධ්‍යක්ෂ ජනරාල් අබ්දුල්රහ්මාන් අර්කාන් අයි. අල්ඩාවුඩ් මහතා, දෙවැනි ලේකම් ටායිෆ් අබ්දුල්ඛලීක් සහ දේශපාලනික කටයුතු භාර නිලධාරී අෆ්නන් ෆහාඩ් ඒ. අල්හුමයිදාන් සමඟ මෙම හමුවට සහභාගී විය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 මාර්තු 14 වැනි දින

..............................................................

ஊடக வெளியீடு

சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல்  பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் மற்றும் அவரது தூதுக்குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கை -  சவூதி அரேபிய இருதரப்பு உறவுகளை முடிவுகள் சார்ந்த, பன்முகக் கூட்டாண்மையாக மாற்றுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

தற்போதைய உலகளாவிய சூழலில், பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் வலுவான உறவுக்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஐ.நா.வில், குறிப்பாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வின் போது,  இலங்கைக்கு சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவையும் அனுதாப அணுகுமுறையையும் அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.

கொழும்புத் துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டையில் பிரத்தியேகமான மருந்து வலயங்கள், புதிதாக அடையாளம் காணப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், மட்டக்களப்பில் துணி / ஆடை வலயம் ஆகியவற்றில் சவூதி அரேபியாவின் முதலீடுகளை ஊக்குவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சவூதி அரேபிய தொழில்  சந்தையில் இலங்கையர்களுக்கான அதிகமான வேலை வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பது இருதரப்பு பங்காளித்துவத்தின் முக்கிய அங்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி உதவிகளை வழங்கியமைக்காக  சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவுகின்ற உற்சாகமான  இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், பொருளாதார ஒத்துழைப்பையும் சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியனார். சவூதி அரேபியாவை தற்போதைய எண்ணெய் சார்ந்த நிலையில் இருந்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கான வழிமுறையாக, சவூதி அரேபியா 2030 இன் இலக்கை அவர் சுட்டிக் காட்டினார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல்னாசர் பின் ஹூசைன் அல்-ஹர்தி, மாண்புமிகு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலுவலகத்தின் தலைமைப் பணிப்பாளர் அப்துல்ரஹ்மான் அர்கான் ஐ. அல்தாவூத், இரண்டாவது செயலாளர் தாயிஃப் அப்துல்காலிக் எஸ்.  கடாசா மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி அஃப்னான் ஃபஹத் ஏ.அல் ஹூமைதான் ஆகியோருடன் சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல்-சௌத் இந்தக் கலந்துரையாடல்களில் இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 14

Please follow and like us:

Close