​Cabinet Sub Committees on Economic Way Forward initiate deliberations under the Chairmanship of Minister of Foreign Affairs Prof. G.L. Peiris

​Cabinet Sub Committees on Economic Way Forward initiate deliberations under the Chairmanship of Minister of Foreign Affairs Prof. G.L. Peiris

The three Cabinet Sub Committees, which were appointed by the President last month to negotiate with China, Japan and the Middle East Region on economic matters met for the first time on 9 and 10 March 2022 at the Parliament under the Chairmanship of the Minister of Foreign Affairs Prof. G.L. Peiris. Commencing its task, the Cabinet Sub Committees convened the initial meetings with the participation of Cabinet Ministers Bandula Gunawardena, Namal Rajapaksa, Ali Sabry, Ramesh Pathirana and Johnston Fernando, who function as the Members of the Sub Committees.

The Committees were appointed based on a Cabinet Memorandum presented by the Minister of Finance Basil Rajapaksa, under the theme “Economy 2022 and the Way Forward” to negotiate with countries from which essential food items, raw materials and industrial goods required for the export-oriented industries are imported to the country, with a view to identifying alternative methods of importing such goods. Chairman  the Minister of Foreign Affairs Prof. Peiris, outlined that the President has appointed the Cabinet Sub Committees to explore an economic way forward in collaboration with reliable trading partners to create a facility that supports trade.

Secretaries and senior officials of the relevant Ministries briefed on various matters such as issues related to trade, employment and foreign remittances. The Cabinet Sub Committee on China was briefed on the current progress related to the ongoing negotiations in respect of the proposed China – Sri Lanka Free Trade Agreement, while the Committee agreed to fast-track the possible next steps in consultation with the relevant stakeholders at the earliest.

The Sub Committees have directed the relevant officials to obtain a list of urgent requirements from all Ministries and agencies, which Sri Lanka may solicit from partner countries, to achieve economic stability and quick progress.

Ministry of Foreign Affairs

Colombo

13 March, 2022

 ...................................................

මාධ්‍ය නිවේදනය

 ඉදිරි ආර්ථික ගමන සම්බන්ධයෙන් පිහිටුවන ලද අමාත්‍ය මණ්ඩල අනු කමිටු සාකච්ඡා විදේශ කටයුතු අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් ආරම්භ කරයි

චීනය, ජපානය සහ මැදපෙරදිග කලාපයේ ආර්ථික කටයුතු සම්බන්ධයෙන් සාකච්ඡා කිරීම සඳහා ජනාධිපතිවරයා විසින් පසුගිය මස පත් කරන ලද අමාත්‍ය මණ්ඩල අනු කමිටු ත්‍රිත්වය, විදේශ   කටයුතු    අමාත්‍ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් 2022 මාර්තු 9 සහ 10 යන දෙදින තුළ පාර්ලිමේන්තුවේ දී පළමු වරට රැස් විය. සිය කාර්යයන් ඇරඹූ මෙම කමිටු ත්‍රිත්වය, අමාත්‍ය මණ්ඩල අනුකමිටු සාමාජිකයන් ලෙස කටයුතු කරන අමාත්‍ය මණ්ඩලයීය අමාත්‍යවරුන් වන බන්දුල ගුණවර්ධන මැතිතුමා, නාමල් රාජපක්ෂ මැතිතුමා, අලි සබ්රි මැතිතුමා, රමේෂ් පතිරණ මැතිතුමා සහ ජොන්ස්ටන් ප්‍රනාන්දු මැතිතුමාගේ සහභාගීත්වයෙන් මූලික රැස්වීම් කැඳවී ය.

‘ආර්ථිකය සහ ඉදිරි ගමන 2022’ යන තේමාව යටතේ මුදල් අමාත්‍ය බැසිල් රාජපක්ෂ මැතිතුමා ඉදිරිපත් කළ අමාත්‍ය මණ්ඩල සංදේශයකට අනුව, අපනයනය ඉලක්ක කරගත් කර්මාන්ත සඳහා අවශ්‍ය වන අත්‍යාවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය, අමුද්‍රව්‍ය සහ කාර්මික භාණ්ඩ මෙරටට ආනයනය කරන රටවල් සමඟ, එවැනි ද්‍රව්‍ය ආනයනය කිරීමේ විකල්ප හඳුනාගැනීමේ අරමුණින් සාකච්ඡා පැවැත්වීම සඳහා මෙම කමිටු පත් කරන ලදි. අපගේ විශ්වාසනීය වෙළඳ හවුල්කරුවන් සමඟ එක්ව, වෙළඳාමට සහය වන පහසුකම් නිර්මාණය කිරීම සඳහා වන ඉදිරි ආර්ථික ගමන පිළිබඳව ගවේෂණය කිරීමේ අරමුණින්  ජනාධිපතිවරයා  මෙම කැබිනට් අනු කමිටු පත් කොට ඇති බව, මෙම කමිටුවේ සභාපතිත්වය දරන විදේශ කටයුතු අමාත්‍ය පීරිස් මැතිතුමා පෙන්වා දුන්නේ ය.

අදාළ අමාත්‍යාංශවල ලේකම්වරුන් සහ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් විසින් වෙළඳාම, රැකියා සහ විදේශ ප්‍රේෂණ වැනි විවිධ කරුණු පිළිබඳ දැනුම්වත් කිරීම් සිදු කරන ලදි. යෝජිත චීන-ශ්‍රී ලංකා නිදහස් වෙළඳ ගිවිසුම සම්බන්ධයෙන් සිදුවෙමින් පවතින සාකච්ඡාවලට අදාළ වත්මන් ප්‍රගතිය, චීනය පිළිබඳ කැබිනට් අනුකාරක සභාව විසින් දැනුම්වත් කෙරුණු අතර, අදාළ පාර්ශවකරුවන් සමඟ සාකච්ඡා කළ හැකි ඉදිරි පියවර හැකි ඉක්මණින් ගැනීම සඳහා කමිටුව සිය එකඟත්වය පළ කළේ ය.

ආර්ථික ස්ථාවරත්වය සහ වේගවත් ප්‍රගතියක් ළඟා කර ගැනීම සඳහා, ශ්‍රී ලංකාවට තම හවුල්කාර රටවලින් ඉල්ලුම් කළ හැකි හදිසි අවශ්‍යතා පිළිබඳ ලැයිස්තුවක්, සියලුම අමාත්‍යාංශ සහ ආයතනවලින් ලබා ගන්නා ලෙස, අනු කමිටු විසින් අදාළ නිලධාරීන්ට උපදෙස් දෙන ලදි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2022 මාර්තු 13 වැනි දින

..............................................

ஊடக வெளியீடு

 முன்னோக்கிய பொருளாதாரப் பாதைக்கான அமைச்சரவை உபகுழுக்களின் கலந்துரையாடல்கள்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்பீரிஸ் தலைமையில் ஆரம்பம்

சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்துடன் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக கடந்த மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சரவை உபகுழுக்கள் 2022 மார்ச் 9  மற்றும் 10ஆந் திகதிகளில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடின. பணிகளை ஆரம்பிக்கும் முகமாக, உபகுழுக்களின் உறுப்பினர்களாக செயற்படும் அமைச்சர்களான பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ரமேஷ் பத்திரன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுக்களின் ஆரம்பக் கூட்டங்கள் கூட்டப்பட்டன.

ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுடன், அவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று  வழிகளை அடையாளம் காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக, 'பொருளாதாரம் 2022 மற்றும் முன்னோக்கிச் செல்லும் பாதை' என்ற தொனிப்பொருளின் கீழ் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த அமைச்சரவை உபகுழுக்கள் நியமிக்கப்பட்டன. வர்த்தகத்தை ஆதரிக்கும் வசதியை உருவாக்குவதற்காக எமது நம்பகமான வர்த்தகப் பங்காளிகளுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லும் பொருளாதாரப் பாதையை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுக்களை ஜனாதிபதி நியமித்துள்ளதாக இதன் தலைவரான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். முன்மொழியப்பட்ட சீனா - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து சீனா தொடர்பான அமைச்சரவை உபகுழுவிற்கு விளக்கமளிக்கப்பட்ட  அதேவேளையில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு உபகுழு ஒப்புக்கொண்டது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் விரைவான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்காக பங்குதாரர் நாடுகளிடமிருந்து இலங்கை கோரக்கூடிய அவசரத் தேவைகளின் பட்டியலை அனைத்து அமைச்சுக்கள் மற்றும் முகவர் நிலையங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு உபகுழுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை  வழங்கியுள்ளன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 13

Please follow and like us:

Close