Foreign Minister Vijitha Herath to undertake an official visit to Belarus

Foreign Minister Vijitha Herath to undertake an official visit to Belarus

Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism Vijitha Herath is scheduled to undertake an official visit to Belarus from 12 to 15 May 2026, on the invitation of the Foreign Minister of the Republic of Belarus, Maxim Ryzhenkov.

This visit will mark a milestone in the bilateral partnership as the two countries commemorated the 25th Anniversary of the establishment of Diplomatic Relations last year.

During his visit to Minsk, Minister Herath will call on Belarus President Alexander Lukashenko and will hold bilateral discussions with the Minister of Foreign Affairs of Belarus. Minister Herath is also scheduled to meet the Belarus Ministers of Education and Health. Several MoUs and agreements across sectors are envisaged to be signed with the Republic of Belarus during the visit.

In Minsk, Minister Herath will address a business and tourism roundtable organised by the National Export Centre of Belarus. He is also scheduled to meet Sri Lankan students studying in Belarus.

Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism
Colombo 01

12 May 2026

******************************

මාධ්‍ය නිවේදනය 

විදේශ අමාත්‍ය විජිත හේරත් බෙලරුස් ජනරජයේ නිල සංචාරයක

 බෙලරුස් ජනරජයේ විදේශ අමාත්‍ය මැක්සිම් රයිෂෙන්කොව්ගේ ආරාධනය පරිදි, විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍ය විජිත හේරත්, 2026 මැයි 12 වැනි දින සිට 15 වැනි දින දක්වා බෙලරුස්හි නිල සංචාරයක නිරත වේ.

පසුගිය වසරේදී, දෙරට අතර රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා ස්ථාපිත කිරීමේ 25 වැනි සංවත්සරය සැමරීමත් සමඟ මෙම සංචාරය, ද්විපාර්ශ්වික හවුල්කාරිත්වයේ විශේෂ සන්ධිස්ථානයක් සනිටුහන් කරනු ඇත.

මින්ස්ක් වෙත කරන සංචාරයේදී, අමාත්‍ය හේරත්, බෙලරුස් ජනාධිපති ඇලෙක්සැන්ඩර් ලුකෂෙන්කෝ හමුවීමට නියමිත අතර, බෙලරුස් විදේශ කටයුතු අමාත්‍යවරයා සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පවත්වනු ඇත. අමාත්‍ය හේරත්, බෙලරුස් අධ්‍යාපන හා සෞඛ්‍ය අමාත්‍යවරුන් ද හමුවීමට නියමිතය. මෙම සංචාරය අතරතුරදී, බෙලරුස් ජනරජය සමඟ විවිධ අංශ සම්බන්ධයෙන් අවබෝධතා ගිවිසුම් සහ ගිවිසුම් කිහිපයක් අත්සන් කෙරෙනු ඇත.

මින්ස්ක්හිදී, අමාත්‍ය හේරත්, බෙලරුස් ජාතික අපනයන මධ්‍යස්ථානය විසින් සංවිධානය කරන ව්‍යාපාරික සහ සංචාරක වටමේස රැස්වීමක් ඇමතීමට නියමිතය. ඔහු බෙලරුස් හි ඉගෙනුම ලබන ශ්‍රී ලාංකික සිසුන් ද හමු වනු ඇත.

විදේශ කටයුතුවිදේශ රැකියා සහ සංචාරක අමාත්‍යාංශය
කොළඹ

 2026 මැයි 12 වැනි දින

*****************************

ஊடக வெளியீடு

வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத்தின் பெலாரஸுக்கான உத்தியோகபூர்வ பயணம்

பெலாரஸ் குடியரசின் வெளிநாட்டுஅமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நிலையில், இப்பயணம் இருதரப்புக் கூட்டாண்மையில் ஒரு மைல்கல்லாக அமையும்.

மின்ஸ்க் இற்கான பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவைச் சந்திக்கவுள்ளதுடன், பெலாரஸின் வெளிநாட்டு அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவார். அமைச்சர் ஹேரத், பெலாரஸின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, பெலாரஸ் குடியரசுடன் பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்ஸ்கில், பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையம் ஏற்பாடு செய்துள்ள வணிகம் மற்றும் சுற்றுலா வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் ஹேரத் உரையாற்றுவார். மேலும், பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

 2026 மே 12

Please follow and like us:

Close