Indian Ocean Rim Association’s 25th Committee of Senior Officials (CSO) Meeting concludes in Colombo

Indian Ocean Rim Association’s 25th Committee of Senior Officials (CSO) Meeting concludes in Colombo

Officials of the Indian Ocean Rim Association’s (IORA) Member States gathered in Colombo for the Twenty Fifth Meeting of the IORA Committee of Senior Officials. The two-day meeting from   9-10 October 2023 was chaired by Foreign Secretary Aruni Wijewardane.

Senior level participants from the twenty-three (23) IORA Member States of Australia, Bangladesh, Comoros, France, India, Indonesia, Iran, Kenya, Madagascar, Malaysia, Maldives, Mauritius, Mozambique, Oman, Seychelles, Singapore, Sri Lanka, Somalia, South Africa, Tanzania, Thailand, United Arab Emirates and Yemen attended the meeting. There was an Interactive Dialogue between Senior Officials of the Member States and Dialogue Partners of China, Egypt, Saudi Arabia, Germany, Italy, Japan, Republic of Korea, Russian Federation, Türkiye, United Kingdom and United States of America on the second day of the meeting to review the future plans with IORA.

In her opening remarks, Foreign Secretary Aruni Wijewardane welcomed the delegates representing the membership of the IORA family and its Dialogue Partners and Kingdom of Saudi Arabia, as the newest Dialogue Partner of IORA. She thanked Bangladesh for its leadership of the Association for the past two years and congratulated India for assuming the role as the Vice Chair of the Association.  Foreign Secretary Wijewardane appreciated the commitment of all Member States to make IORA a vibrant organization and efforts made by them for strengthening the IORA as a platform to address issues of common importance. Noting that Sri Lanka was assuming leadership of IORA after two decades, having previously held the Chairmanship from 2003 to 2004, she emphasised that Sri Lanka accords a great deal of importance to the Indian Ocean.  She reiterated Sri Lanka’s commitment to continue to work closely with all Member States of IORA and other partners including the Dialogue Partners for achieving the objectives of IORA. She also noted that the theme, 'Strengthening Regional Architecture: Reinforcing Indian Ocean Identity' chosen by Sri Lanka for its chairmanship reflects the country’s deep understanding of the pivotal role that the Indian Ocean plays in shaping the region’s identity and destiny. It serves as a reminder that, despite their differences, the IORA Member States are bound by the waters of the Indian Ocean, which have nurtured their societies, peoples and economies for centuries.

IORA Secretary General Dr Salman Al Farisi, Joint Secretary (Oceania) of the Ministry of External Affairs of India Paramita Tripathi representing the Vice Chair of IORA, Secretary, Maritime Affairs Unit of the Ministry of Foreign Affairs of Bangladesh Rear Admiral (Retd.) Md. Khurshed Alam representing the IORA Past Chair also delivered remarks at the opening session of the Senior Officials’ Committee Meeting.

The senior officials made recommendations including regarding the adoption of the Colombo Communiqué, which is the outcome document, to the 23rd Council of Ministers of IORA which will meet on 11 October 2023 in Colombo.

Ministry of Foreign Affairs

Colombo

10 October 2023

.................................................

මාධ්‍ය නිවේදනය

 ඉන්දියානු සාගර වටද්දර රටවල සංගමයේ (IORA) ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ කමිටුවේ (CSO) 25 වැනි රැස්වීම කොළඹ දී අවසන් කෙරේ

ඉන්දියානු සාගර වටද්දර රටවල සංගමයේ සාමාජික රටවල නිලධාරීහු එහි ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ කමිටුවේ විසිපස්වැනි රැස්වීම සඳහා කොළඹට රැස්වූ හ. විදේශ කටයුතු ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය, 2023 ඔක්තෝබර් 9 සහ 10 යන දෙදින තුළ පැවති මෙම රැස්වීමේ ප්‍රධානත්වය දැරුවා ය.

ඕස්ට්‍රේලියාව, බංග්ලාදේශය, කොමරෝස්, ප්‍රංශය, ඉන්දියාව, ඉන්දුනීසියාව, ඉරානය, කෙන්යාව, මැඩගස්කරය, මැලේසියාව, මාලදිවයින, මොරිෂස්, මොසැම්බික්, ඕමානය, සීෂෙල්ස්, සිංගප්පූරුව, ශ්‍රී ලංකාව සෝමාලියාව, දකුණු අප්‍රිකාව, ටැන්සානියාව, තායිලන්තය, එක්සත් අරාබි එමීර් රාජ්‍යය සහ යේමනය යන IORA සාමාජික රටවල් විසිතුන (23) නියෝජනය කළ ජ්‍යෙෂ්ඨ මට්ටමේ නිලධාරීහු මෙම රැස්වීමට සහභාගි වූහ. රැස්විමේ දෙවන දිනයේ දී, සාමාජික රටවල ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සහ චීනය, ඊජිප්තුව, සෞදි අරාබිය, ජර්මනිය, ඉතාලිය, ජපානය, කොරියානු ජනරජය, රුසියානු සමූහාණ්ඩුව, තුර්කිය, එක්සත් රාජධානිය සහ ඇමරිකා එක්සත් ජනපදය යන සංවාද හවුල්කරුවන් අතර අන්තර් ක්‍රියාකාරී සංවාදයක් පැවැත්විණි. එහි අරමුණ වූයේ  IORA සමඟ ක්‍රියාත්මක කිරීමට නියමිත අනාගත සැලසුම් සමාලෝචනය කිරීම යි.

ආරම්භයේ දී අදහස් පළ කළ විදේශ කටයුතු ලේකම් අරුණි විජේවර්ධන මහත්මිය, සංවාද හවුල්කරුවකු ලෙස සංගමයට අභිනවයෙන් එක් වූ සෞදි අරාබි රාජධානිය මෙන්ම, සංගමයේ සාමාජිකයන් සහ අනෙකුත් සංවාද හවුල්කරුවන් නියෝජනය කළ නියෝජිතයන් පිළිගත්තා ය.  පසුගිය වසර දෙක තුළ සංගමයට නායකත්වය ලබා දුන් බංග්ලාදේශය වෙත සිය කෘතඥතාව පළ කළ එතුමිය, සංගමයේ උපසභාපති ධුරයට පත් වූ ඉන්දියාවට සුබ පැතුවා ය. IORA ප්‍රබල සංවිධානයක් බවට පත් කිරීම සඳහා සියලුම සාමාජික රටවල් විදහා දක්වන කැපවීම මෙන්ම, පොදු ගැටළු විසඳීම සඳහා වන වේදිකාවක් ලෙස එම සංගමය ශක්තිමත් කිරීම සඳහා ඔවුන් දරන උත්සාහය විදේශ කටයුතු ලේකම් විජේවර්ධන මහත්මියගේ පැසසුමට ලක්විය. මීට පෙර, එනම් 2003 සිට 2004 දක්වා මෙම සංගමයේ සභාපතිත්වය දැරූ ශ්‍රී ලංකාව දශක දෙකකට පසු මෙසේ නායකත්වය භාර ගන්නා බව සඳහන් කළ එතුමිය, ශ්‍රී ලංකාව ඉන්දියානු සාගරය සම්බන්ධයෙන් විශේෂ සැලකිල්ලක් දක්වන බවද අවධාරණය කළා ය.  IORA හි අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා IORA හි සියලුම සාමාජික රටවල් සහ සංවාද හවුල්කරුවන් ඇතුළු අනෙකුත් හවුල්කරුවන් සමඟ සමීපව කටයුතු කිරීම සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාව සතු කැපවීම ද එතුමිය නැවත වරක් අවධාරණය කළා ය. ශ්‍රී ලංකාව තමන් සභාපතිත්වය දරන කාලය සඳහා තෝරා ගත් තේමාව වන 'කලාපීය ව්‍යුහාත්මක සැකැස්ම ශක්තිමත් කිරීම: ඉන්දියානු සාගරයේ අනන්‍යතාවය ශක්තිමත් කිරීම', මෙම කලාපයේ අනන්‍යතාවය සහ පැවැත්ම ගොඩනැගීමෙහිලා ඉන්දියානු සාගරය ඉටු කරන ප්‍රධාන කාර්යභාරය පිළිබඳව ශ්‍රී ලංකාව සතු ගැඹුරු අවබෝධය පිළිබිඹු කරන බවද එතුමිය සඳහන් කළා ය. මෙම සංගමයේ සාමාජික රටවල්,  විවිධත්වය හමුවේ වුවද, ශතවර්ෂ ගණනාවක් මුළුල්ලේ විවිධ සමාජ ව්‍යුහයන්, ජනතාව සහ ආර්ථිකයන් පෝෂණය කළ ඉන්දියානු සාගරය වටා බැඳී ඇති බවද මෙම තේමාව හරහා සිහිපත් කෙරේ.

ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ කමිටු රැස්වීමට සහභාගී වූ IORA මහලේකම් ආචාර්ය සල්මාන් අල් ෆාරිසි මහතා, IORA හි උපසභාපති ධුරය නියෝජනය කරමින් සහභාගී වූ ඉන්දියානු විදේශ කටයුතු අමාත්‍යංශයේ සම ලේකම් (ඕෂනියා අංශය) පාරමිතා ත්‍රිපාති මහත්මිය සහ මින් පෙර සංගමයේ සභාපතිත්වය දැරූ බංග්ලාදේශය නියෝජනය කරමින් සහභාගී වූ බංග්ලාදේශ විදේශ කටයුතු අමාත්‍යංශයේ සමුද්‍රීය කටයුතු ඒකකයේ ලේකම් රියර් අද්මිරාල් (විශ්‍රාමික) මොහොමඩ් කුර්ෂිඩ් අලාම් මහතා යනාදීහු එහි සමාරම්භක සැසියේ දී සිය අදහස් පළ කළහ.

2023 ඔක්‌තෝබර් 11 වැනි දින කොළඹ දී රැස්‌වීමට නියමිත IORA හි 23 වැනි අමාත්‍ය මණ්ඩලයේ අපේක්ෂිත ඵල ලේඛනය වන Colombo Communiqué ලේඛනය සම්මත කරගැනීම ඇතුළු නිර්දේශ මෙහිදී ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් විසින් ඉදිරිපත් කරන ලදී.

විදේශ කටයුතු අමාත්‍යංශය

කොළඹ

2023 ඔක්තෝබර් 10 වැනි දින

...........................................

ஊடக வெளியீடு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 25வது சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டம் கொழும்பில் நிறைவு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் இருபத்தி ஐந்தாவது கூட்டத்திற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில் ஒன்றுகூடியிருந்தனர். 2023 அக்டோபர் 9 முதல் 10 வரையான இரண்டு நாட்கள் இந்தக் கூட்டம் வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இருபத்தி மூன்று (23) இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், கொமோரோஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யெமன் ஆகியவற்றைச் சேர்ந்த சிரேஷ்ட மட்டத்திலான பங்கேற்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்துடனான எதிர்காலத் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக, கூட்டத்தின் இரண்டாவது நாளில், உறுப்பு நாடுகள்  மற்றும் உரையாடல் பங்காளிகளான சீனா, எகிப்து, சவூதி அரேபியா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளிடையே ஊடாடும் உரையாடல் இடம்பெற்றது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பினர்கள், அதன் உரையாடல் பங்காளிகள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் புதிய உரையாடல் பங்காளியாக இணைந்துள்ள சவுதி அரேபியா இராச்சியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளை தனது தொடக்க உரையில் வெளியுறவு செயலாளர் அருணி  விஜேவர்தன வரவேற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத்தின் தலைமைத்துவத்தை வகித்தமைக்காக பங்களாதேஷூக்கு நன்றி தெரிவித்த அவர், சங்கத்தின் துணைத் தலைவராக இந்தியா பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தை ஒரு துடிப்பான அமைப்பாக மாற்றுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் அர்ப்பணிப்பையும், பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளமாக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தை வலுப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வெளியுறவு செயலாளர் விஜேவர்தன பாராட்டினார். இரண்டு தசாப்தங்களின் பின்னர்இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னர் 2003 முதல் 2004 வரை தலைமைப் பொறுப்பை வகித்து வந்ததாகவும், இந்து சமுத்திரத்திற்கு இலங்கை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வலியுறுத்தினார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அனைத்து உறுப்பு நாடுகளுடனும், சங்கத்தின் நோக்கங்களை அடைவதற்காக உரையாடல் பங்காளிகள் உட்பட ஏனைய பங்காளிகளுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை தனது தலைமைப் பதவிக்காகத் தெரிவுசெய்துள்ள 'பிராந்திய கட்டிடக்கலையை வலுப்படுத்துதல்: இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருள், பிராந்தியத்தின் அடையாளத்தையும் விதியையும் வடிவமைப்பதில் இந்து சமுத்திரம் வகிக்கும் முக்கிய பங்கு குறித்த நாட்டின் ஆழமான புரிதலை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்து சமுத்திர விளிம்பு சங்கம் உறுப்பு நாடுகள் தங்கள் சமூகங்கள், மக்கள் மற்றும் பொருளாதாரங்களை பல நூற்றாண்டுகளாக வளர்த்து வந்த இந்து சமுத்திரத்தின் நீரால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது நினைவூட்டுகின்றது.

சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் (ஓசியானியா) பரமிதா  திரிபாதி மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் முன்னாள் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சின் கடல்சார் விவகாரப் பிரிவின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) எம்.டி. குர்ஷத் ஆலம் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கினார்.

2023 அக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் ஒன்று கூடிய இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 23வது அமைச்சர்கள் குழுவின் முடிவு ஆவணமான கொழும்பு  அறிக்கையை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள் வழங்கினர்.

கொழும்பில் 2023 அக்டோபர் 11ஆந் திகதி ஒன்று கூடவுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 23வது அமைச்சர்கள் குழுவிற்கு, விளைவு ஆவணமான கொழும்பு  அறிக்கையை ஏற்றுக்கொள்வது உட்பட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள் வழங்கினர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 அக்டோபர் 10

Please follow and like us:

Close