​Statement by the Minister of Foreign Affairs of Sri Lanka at the 51st  Regular Session of the United Nations Human Rights Council in Geneva on 12 September 2022

​Statement by the Minister of Foreign Affairs of Sri Lanka at the 51st  Regular Session of the United Nations Human Rights Council in Geneva on 12 September 2022

Mr. President,

Madam Acting High Commissioner,

Excellencies,

At the outset, on behalf of our Government, I reiterate our unwavering commitment towards advancing, securing and protecting the human rights of our people, and continuing our engagement with the Council in a spirit of cooperation and dialogue. In keeping with our commitment, notwithstanding our categorical rejection of resolution 46/1, we have submitted Sri Lanka’s detailed written response to the High Commissioner’s Report. We have requested that Sri Lanka’s Comments be placed as an Addendum to the Report, to accord with best practices.

Mr. President,

We remain cognizant of and acutely sensitive to the events that have taken place in the recent past. The severe economic crisis emanating from factors both internal and external offer many lessons for all of us. We recall in this context the indivisibility of human rights, as enshrined in the Vienna Declaration and Programme of Action. The Government is extremely sensitive to the socio-economic hardships faced by our people, and has initiated immediate multi-pronged measures to address the challenges and to ensure their wellbeing through the provision of supplies essential to the life of the community. A staff level agreement has been reached with the International Monetary Fund, and discussions on debt restructuring are in progress. The Government is in dialogue with UN agencies as well as bilateral partners to protect the most vulnerable from the adverse impacts of the crisis. In spite of multiple challenges, Sri Lanka would endeavour to remain on course in meeting the goals of the 2030 Agenda for Sustainable Development.

The recent changes that have taken place bear testimony to our continued commitment to upholding our longstanding democratic principles and norms. The constitutional rights to peaceful assembly and expression guaranteed the democratic space for our people to exercise their rights. In this regard, transgressions of the law resulting in criminal and unlawful activity were addressed in accord with the law and the Constitution, in circumstances where such freedoms were abused by elements with vested interests to achieve undemocratic political ends.

Mr. President,

Notwithstanding the severe constraints and challenges, Sri Lanka remains firmly committed to pursuing tangible progress in the protection of human rights and reconcilation through independent domestic institutions.

Sri Lanka along with several Members of this Council have opposed resolution 46/1, fundamentally disagreeing with its legitimacy and objectives. We have consistently highlighted that the content of the resolution, its operative paragraph 06 in particular, violates the sovereignty of the people of Sri Lanka and the principles of the UN Charter. Once again, we are compelled to categorically reject any follow-up measures to the resolution, as well as the related recommendations and conclusions by the High Commissioner.

Mr. President,

It is observed that the High Commissioner’s report makes extensive reference to “economic crimes”. Apart from the ambiguity of the term, it is a matter of concern that such reference exceeds the mandate of the OHCHR. In this context, we recall the paramount importance of adhering to UNGA resolutions 60/251, 48/141 and the IB package.

Notwithstanding, Sri Lanka has continued to brief the Council on the comprehensive legal framework that is being established to further strengthen governance and combat corruption. The proposed 22nd Amendment to the Constitution introduces several salient changes which would strengthen democratic governance and independent oversight of key institutions, as well as public scrutiny, participation in governance, and combating corruption including the constitutional recognition of the United Nations Convention Against Corruption (UNCAC). This will include, inter alia, the composition of the Constitutional Council, and the reintroduction of the National Procurement Commission and the Audit Service Commission. The proposed legal framework will also strengthen the asset declaration system, protect the rights of whistle blowers, and increase the independence of the Commission to Investigate Allegations of Bribery or Corruption.  A proposal to establish a system similar to an Inspector General tasked with overseeing government expenses by detecting and preventing fraud, waste and abuse in public institutions, is under consideration.

Mr. President,

Measures aimed at promoting domestic reconciliation and human rights, if they are to be meaningful and sustainable, must be based on cooperation with the country concerned, be compatible with the aspirations of its people, and be consonant with its basic legal framework. The international community is aware that unconstitutional and intrusive external initiatives have repeatedly failed to yield meaningful results on the ground, and are in effect an unproductive drain on member state resources.

The Government would endeavour to establish a credible truth-seeking mechanism within the framework of the Constitution. The contours of such a model that would suit the particular conditions of Sri Lanka are under discussion.

The recommendations of the Presidential Commission of Inquiry on “Appraisal of the Findings of Previous Commissions and Committees and the Way Forward” have, inter alia, resulted in the establishment of an Advisory Board under the Prevention of Terrorism Act (PTA), progressive amendments to the PTA, and the release of detainees. Further recommendations are awaited.

As we delivered on the onerous task of review and reform of the PTA this year, to further enhance human rights, we will replace the PTA with a more comprehensive national security legislation in accordance with international best practices.

The recent delisting of groups and individuals will provide further impetus for constructive dialogue.

The independent statutory bodies established to advance the rights of victims and their families, and to provide reparations, continue to vigourously execute their respective mandates.

The Office on Missing Persons (OMP) has commenced the process of inquiry and verification, set up separate units on Tracing and Victim and Family Support, and acts as an Observer on relevant judicial proceedings.

Despite economic constraints, the Office for Reparations (OR) continues to deliver on its mandate, and the recently adopted National Reparations Policy and Guidelines have expanded the work of the Office beyond monetary compensation, to other forms of support.

The necessary support and resources to strengthen the functioning of the Office for National Unity and Reconciliation (ONUR) and the Human Rights Commission of Sri Lanka (HRCSL), continue to be provided.

The outreach to overseas Sri Lankans encompassing all communities and generations will be expanded through the establishment of an Office for Overseas Sri Lankans, thus facilitating more vigourous engagement.

Mr. President,

As recognized in the Universal Declaration, human rights are interdependent, interrelated and indivisible. In upholding human rights, we have benefitted from the considerable expertise available with other countries as well as the United Nations. We will seek further advice and support on best practices as we proceed, and as deemed necessary.

We will continue our cooperation with the Human Rights Council and its mechanisms. Sri Lanka is party to the 9 core Human Rights Conventions, and has maintained regular and constructive engagement with the UN Treaty Bodies. We have extended a standing invitation to all UN thematic Special Procedures mandate holders to visit Sri Lanka, and facilitated a high number of visits in the recent past. We look forward to constructive engagement with the Council through the Universal Periodic Review process. We have delivered on our commitments at the UPR, and will proactively engage in the upcoming UPR fourth cycle.

 We have facilitated two visits by the Office of the High Commissioner to Sri Lanka in May and August this year, and provided unimpeded access. The visits provided the officials of the OHCHR with the opportunity to engage with a range of stakeholders, and witness progress.

 Mr. President,

 It is 13 years since the end of the conflict in Sri Lanka, and since then a new generation has emerged with their own aspirations. While issues of reconciliation and accountability are being comprehensively addressed through a domestic process, it is time to reflect realistically on the trajectory of this resolution which has continued on the agenda of the Council for over a decade, and undertake a realistic assessment on whether it has benefited the people of Sri Lanka. There is a need to acknowledge actual progress on the ground and support Sri Lanka.

 The current challenges, though formidable, have provided us with a unique opportunity to work towards institutional change for the betterment of our people. Sri Lanka appreciates the solidarity and support extended by our friends and partners during this challenging time. In a message of unity and reconciliation, President Ranil Wickremesinghe in his inaugural address to Parliament said “if we come together, we will be able to invigorate the nation”.

Mr. President,

Through many a challenge, the people of Sri Lanka have remained steadfast and resilient while upholding their democratic values as one of Asia’s oldest democracies. We are not hesitant to acknowledge our challenges and forge ahead with renewed vigour. While our immediate concern is economic recovery, advancing the human rights of our people is of equal priority. We look to the genuine support and understanding of this Council, as we proceed on this path.

Thank you.

....................................................

2022 සැප්තැම්බර් 12 වැනි දින ජිනීවා හිදී පැවති එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ 51 වැනි නිත්‍ය සැසිවාරයේ දී ශ්‍රී ලංකාවේ විදේශ කටයුතු අමාත්‍යවරයා විසින් කරන ලද ප්‍රකාශය

සභාපතිතුමනි,

වැඩ බලන මහ කොමසාරිස්තුමියනි,

සම්භාවනීය මැතිවරුනි,

ආරම්භයේදීම, අපගේ රජය වෙනුවෙන්, අපගේ ජනතාවගේ මානව හිමිකම් ඉදිරියට ගෙනයාම, සුරක්ෂිත කිරීම සහ ආරක්ෂා කිරීම සහ මෙම කවුන්සිලය  සමඟ සහයෝගිතාවයෙන් හා සංවාදය තුළින් අපගේ සම්බන්ධය අඛණ්ඩව පවත්වාගෙන යාම සඳහා වන අපගේ නොසැලෙන කැපවීම මම යළි අවධාරණය කරමි. 46/1 වැනි යෝජනාව අපි තරයේ ප්‍රතික්ෂේප කළද, අපගේ කැපවීමට එකඟව, අපි ශ්‍රී ලංකාවේ සවිස්තරාත්මක ලිඛිත ප්‍රතිචාරය මහ කොමසාරිස්වරියගේ වාර්තාව සඳහා ඉදිරිපත් කර ඇත්තෙමු. යහපත් පරිචයන්ට අනුව, ශ්‍රී ලංකාවේ අදහස් මෙම වාර්තාවට අතිරේකයක් ලෙස තබන මෙන් අපි ඉල්ලා සිටිමු.

සභාපතිතුමනි,

මෑත අතීතයේ දී සිදු වූ සිදුවීම් පිළිබඳව අපි දැනුවත්ව සහ දැඩි ලෙස සංවේදීව සිටිමු. අභ්‍යන්තර හා බාහිර සාධකවලින් පැන නගින දරුණු ආර්ථික අර්බුදය අප සැමට බොහෝ පාඩම් සපයයි. වියානා ප්‍රකාශනයේ සහ ක්‍රියාකාරී වැඩසටහනේ දක්වා ඇති පරිදි, මානව හිමිකම් බෙදා වෙන්කළ නොහැකි බව මෙම සන්දර්භය තුළ  අපි සිහිපත් කරමු. අපගේ ජනතාව මුහුණ දෙන සමාජ-ආර්ථික දුෂ්කරතා සම්බන්ධයෙන් රජය අතිශයින් සංවේදී වන අතර, ප්‍රජාවගේ ජීවිතයට අත්‍යවශ්‍ය සැපයුම් ලබාදීම තුළින් අභියෝගවලට මුහුණ දීම සහ ඔවුන්ගේ යහපැවැත්ම සහතික කිරීම සඳහා ක්ෂණික බහුවිධ ක්‍රියාමාර්ග ආරම්භ කොට ඇත. ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල සමඟ කාර්ය මණ්ඩල මට්ටමේ එකඟතාවකට පැමිණ ඇති අතර, ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම පිළිබඳව සාකච්ඡා කෙරෙමින් පවතී. අර්බුදයේ අහිතකර බලපෑම්වලින් වඩාත් අවදානමට ලක්විය හැකි අයවලුන් ආරක්ෂා කිරීම සඳහා රජය එක්සත් ජාතීන්ගේ නියෝජිතායතන මෙන්ම ද්විපාර්ශ්වික හවුල්කරුවන් සමඟ ද සංවාදයක යෙදී සිටී. බහුවිධ අභියෝග මධ්‍යයේ වුවද, තිරසාර සංවර්ධනය සඳහා වූ 2030 න්‍යාය පත්‍රයේ ඉලක්ක සපුරා ගැනීමේ මාර්ගයෙහි රැඳී සිටීම සඳහා ශ්‍රී ලංකාව උත්සාහ දරනු ඇත.

අපගේ දිගුකාලීන ප්‍රජාතන්ත්‍රවාදී මූලධර්ම සහ සම්මතයන් ආරක්ෂා කිරීම සඳහා අපගේ අඛණ්ඩ කැපවීම සම්බන්ධයෙන්, මෑතකාලීනව සිදු වූ වෙනස්කම් සාක්ෂි දරයි. සාමකාමීව රැස්වීමට සහ අදහස් ප්‍රකාශ කිරීමට ඇති ව්‍යවස්ථාමය අයිතිවාසිකම් මඟින්, අපගේ ජනතාවට ඔවුන්ගේ අයිතිවාසිකම් ක්‍රියාත්මක කිරීම සඳහා වන ප්‍රජාතන්ත්‍රවාදී අවකාශය සහතික කෙරිණ. මේ සම්බන්ධයෙන්, එවැනි නිදහසක් ප්‍රජාතන්ත්‍ර විරෝධී දේශපාලන අරමුණු සාක්ෂාත් කර ගැනීම සඳහා අභිලාෂකාමී අවශ්‍යතා ඇති කොටස් විසින් අපයෝජනය කරන ලද අවස්ථා වලදී, සාපරාධී සහ නීති විරෝධී ක්‍රියාකාරකම්වල ප්‍රතිඵලයක් ලෙස නීතිය උල්ලංඝනය කිරීම් සම්බන්ධයෙන් නීතියට සහ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට අනුකූලව කටයුතු කරන ලදී.

සභාපතිතුමනි,

දැඩි බාධාවන් සහ අභියෝග මධ්‍යයේ වුවද, ස්වාධීන දේශීය ආයතන හරහා මානව හිමිකම් ආරක්ෂා කිරීම සහ ප්‍රතිසන්ධානය සඳහා ස්පෘෂ්‍ය ප්‍රගතියක් ලබා ගැනීම පිණිස ශ්‍රී ලංකාව දැඩි ලෙස කැපවී සිටී.

එහි නීත්‍යානුකූලභාවය සහ අරමුණු සමඟ මූලික වශයෙන් එකඟ නොවෙමින්, මෙම කවුන්සිලයේ සාමාජිකයින් කිහිප දෙනෙකු සමඟ ශ්‍රී ලංකාව 46/1 යෝජනාවට විරුද්ධ වී ඇත. මෙම යෝජනාවේ අන්තර්ගතය, විශේෂයෙන්ම එහි 06 වැනි ක්‍රියාකාරී ඡේදය, ශ්‍රී ලංකාවේ ජනතාවගේ පරමාධිපත්‍යය සහ එක්සත් ජාතීන්ගේ ප්‍රඥප්තියේ මූලධර්ම උල්ලංඝනය කරන බව අපි නිරන්තරයෙන් ඉස්මතු කොට ඇත්තෙමු. යළිත් වරක්, මෙම යෝජනාවට අදාළ පසු විපරම් ක්‍රියාමාර්ග මෙන්ම මහ කොමසාරිස්වරයාගේ අදාළ නිර්දේශ සහ නිගමන තරයේ ප්‍රතික්ෂේප කිරීමට අපට බලකෙරේ.

සභාපතිතුමනි,

මහ කොමසාරිස්වරියගේ වාර්තාවේ “ආර්ථික අපරාධ” පිළිබඳව පුළුල් ලෙස සඳහන් වන බව මෙහි දී නිරීක්ෂණය වේ. මෙම පදයේ ඇති බහුඅර්ථතාව හැරෙන්නට, එවැනි සඳහන් කිරීම් මානව හිමිකම් පිළිබඳ මහ කොමසාරිස් කාර්යාලයේ වරම ඉක්මවා යාම කනස්සල්ලට කරුණකි. මෙම සන්දර්භය තුළ, එක්සත් ජාතීන්ගේ මහ සමුළුවේ යෝජනා අංක 60/251, 48/141 සහ IB පැකේජය පිළිපැදීමේ පරම වැදගත්කම අපි සිහිපත් කරමු.

එසේ වුවද, පාලනය තවදුරටත් ශක්තිමත් කිරීම සහ දූෂණයට එරෙහිව සටන් කිරීම සඳහා ස්ථාපිත කෙරෙන විස්තීරණ නීතිමය රාමුව පිළිබඳව ශ්‍රී ලංකාව දිගින් දිගටම මෙම කවුන්සිලය දැනුවත් කර ඇත. යෝජිත 22 වැනි ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය මගින් ප්‍රජාතන්ත්‍රවාදී පාලනය සහ ප්‍රධාන ආයතනවල ස්වාධීන අධීක්ෂණය මෙන්ම මහජන පරීක්ෂාව, පාලනයට සහභාගී වීම සහ එක්සත් ජාතීන්ගේ දූෂණයට එරෙහි ප්‍රඥප්තිය (UNCAC) ව්‍යවස්ථාපිතව පිළිගැනීම ඇතුළුව, ප්‍රජාතාන්ත්‍රික පාලනය ශක්තිමත් කරන කැපී පෙනෙන වෙනස්කම් කිහිපයක් හඳුන්වා දෙයි. අනෙකුත් කරුණු අතර, ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ සංයුතිය, ජාතික ප්‍රසම්පාදන කොමිෂන් සභාව සහ විගණන සේවා කොමිෂන් සභාව නැවත හඳුන්වාදීම මෙයට ඇතුළත් වේ. යෝජිත නෛතික රාමුව මගින්, වත්කම් ප්‍රකාශ කිරීමේ ක්‍රමය ශක්තිමත් කිරීම, අනාවරණ සිදුකරන්නන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සහ අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ ස්වාධීනත්වය ඉහළ නැංවීම ද සිදුවනු ඇත. රාජ්‍ය ආයතනවල සිදුවන වංචා, නාස්තිය සහ අපයෝජනයන් හඳුනාගෙන ඒවා වළක්වාලමින් රාජ්‍ය වියදම් අධීක්‍ෂණය කිරීම සඳහා පොලිස්පතිවරයකුට සමාන නිලධරයෙකු පත්කිරීම පිණිස ක්‍රමවේදයක් පිහිටුවීමේ යෝජනාවක් පිළිබඳව සලකා බැලෙමින් පවතී.

සභාපතිතුමනි,

දේශීය සංහිඳියාව සහ මානව හිමිකම් ප්‍රවර්ධනය කිරීම අරමුණු කරගත් ක්‍රියාමාර්ග අර්ථවත් සහ තිරසාර වීමට නම්, ඒවා අදාළ රට සමඟ පවතින සහයෝගිතාව මත පදනම් විය යුතු අතර, එහි ජනතාවගේ අභිලාෂයන් සමඟ අනුකූල විය යුතු මෙන්ම, එහි මූලික නීති රාමුවට අනුකූල විය යුතුය. ව්‍යවස්ථා විරෝධී සහ ආක්‍රමණශීලී බාහිර මුලපිරීම් මඟින් අර්ථවත් ප්‍රතිඵල ලබා දීමට නැවත නැවතත් අපොහොසත් වී ඇති බවත්, ඒවා සාමාජික රාජ්‍ය සම්පත්වල ඵලදායී නොවන නාස්තියක් බවට ජාත්‍යන්තර ප්‍රජාව දැනුවත්ව සිටී.

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ රාමුව තුළ විශ්වසනීය සත්‍ය සෙවීමේ යාන්ත්‍රණයක් ස්ථාපිත කිරීම සඳහා රජය උත්සාහ දරනු ඇත. ශ්‍රී ලංකාවේ විශේෂිත තත්වයන්ට ගැලපෙන එවැනි ආකෘතියක සමෝච්ඡයන් පිළිබඳව සාකච්ඡා කෙරෙමින් පවතී.

“පෙර කොමිෂන් සභා සහ කමිටුවල සොයාගැනීම් තක්සේරු කිරීම සහ ඉදිරි මාවත” පිළිබඳ ජනාධිපති විමර්ශන කොමිෂන් සභාවේ නිර්දේශයන්, අනෙකුත් කරුණු අතර, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත (PTA) යටතේ උපදේශක මණ්ඩලයක් පිහිටුවීම, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතට ප්‍රගතිශීලී සංශෝධන සිදුකිරීම සහ රැඳවියන් නිදහස් කිරීම සඳහා හේතු වී ඇත. වැඩිදුර නිර්දේශ අපේක්ෂාවෙන් පවතී.

මානව හිමිකම් තවදුරටත් වැඩිදියුණු කිරීම සඳහා ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත සමාලෝචනය කිරීම සහ ප්‍රතිසංස්කරණය කිරීමේ බැරෑරුම් කර්තව්‍යය මේ වසරේ දී අප විසින් ඉටු කරන ලද බැවින්, ජාත්‍යන්තර විශිෂ්ට පරිචයන්ට අනුකූලව වඩාත් පුළුල් ජාතික ආරක්‍ෂක නීති සම්පාදනයකින් අපි ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත ප්‍රතිස්ථාපනය කරන්නෙමු. මෑතදී සිදු කරන ලද කණ්ඩායම් සහ පුද්ගලයන් ලැයිස්තුවෙන් ඉවත් කිරීම මඟින් නිර්මාණාත්මක සංවාදයක් සඳහා තවදුරටත් දිරිගැන්වීමක් ලබා දෙනු ඇත.

වින්දිතයින්ගේ සහ ඔවුන්ගේ පවුල්වල අයිතිවාසිකම් ඉදිරියට ගෙනයාම සහ වන්දි ගෙවීම සඳහා පිහිටුවා ඇති ස්වාධීන ව්‍යවස්ථාපිත ආයතන, ඒවායෙහි අදාළ වරම ශක්තිමත් ලෙස ක්‍රියාත්මක කරයි.

අතුරුදහන් වූවන් පිළිබඳ කාර්යාලය (OMP) විසින් විමර්ශන සහ සත්‍යාපනය කිරීමේ ක්‍රියාවලිය ආරම්භ කර ඇති අතර, සොයාගැනීම සහ වින්දිතයන් සහ පවුල්වලට සහාය වීම සඳහා වෙනම ඒකක පිහිටුවා, අදාළ අධිකරණ ක්‍රියාමාර්ග පිළිබඳ නිරීක්ෂකයෙකු ලෙස ක්‍රියා කරයි.

ආර්ථික බාධාවන් මධ්‍යයේ වුවද, වන්දි ගෙවීම සඳහා වන කාර්යාලය (OR) එහි වරම අඛණ්ඩව ලබා දෙන අතර, මෑතක දී සම්මත කරන ලද ජාතික වන්දි ප්‍රතිපත්ති සහ මාර්ගෝපදේශ මගින් කාර්යාලයේ කාර්යය මුදල් වන්දි ගෙවීමෙන් ඔබ්බට, වෙනත් ආකාරයේ සහාය ලබාදීම දක්වා පුළුල් කර ඇත.

ජාතික සමගිය සහ සංහිඳියාව සඳහා වූ කාර්යාලය (ONUR) සහ ශ්‍රී ලංකා මානව හිමිකම් කොමිෂන් සභාව (HRCSL) හි ක්‍රියාකාරීත්වය ශක්තිමත් කිරීම සඳහා අවශ්‍ය සහයෝගය සහ සම්පත් අඛණ්ඩව සපයනු ලැබේ.

විදේශගත ශ්‍රී ලාංකිකයන් සඳහා කාර්යාලයක් පිහිටුවීම හරහා සියලුම ප්‍රජාවන් සහ පරම්පරා ආවරණය වන පරිදි එතෙර සිටින ශ්‍රී ලාංකිකයන් වෙත ළඟාවීම පුළුල් කෙරෙන අතර, එමඟින් වඩාත් ප්‍රබල ලෙස සම්බන්ධ වීම සඳහා පහසුකම් සැලසේ.

සභාපතිතුමනි,

විශ්ව ප්‍රකාශනය මඟින් පිළිගෙන ඇති පරිදි, මානව හිමිකම් යනු අන්‍යෝන්‍ය වශයෙන් රඳා පවතින, අන්තර් සම්බන්ධිත මෙන්ම වෙන්කළ නොහැකි ඒවාය. මානව හිමිකම් ආරක්ෂා කිරීමේදී, අනෙකුත් රටවල්වල මෙන්ම එක්සත් ජාතීන්ගේ සංවිධානයෙහි පවතින සැලකිය යුතු විශේෂඥ දැනුමෙන් අපි ප්‍රතිලාභ ලබා ඇත්තෙමු. අපි ඉදිරියට යන විට සහ අවශ්‍ය යැයි සලකන විශිෂ්ට පරිචයන් පිළිබඳ වැඩිදුර උපදෙස් සහ සහාය ලබා ගන්නෙමු.

අපි මානව හිමිකම් කවුන්සිලය සහ එහි යාන්ත්‍රණයන් සමඟ අපගේ සහයෝගීතාවය දිගටම පවත්වාගෙන යන්නෙමු. ශ්‍රී ලංකාව ප්‍රධාන මානව හිමිකම් සම්මුතීන් 9 හි පාර්ශ්වකරුවෙකු වන අතර, එක්සත් ජාතීන්ගේ ගිවිසුම් ආයතන සමඟ නිත්‍ය හා නිර්මාණාත්මක සම්බන්ධයක් පවත්වා ගෙන ඇත. ශ්‍රී ලංකාවට පැමිණෙන ලෙස එක්සත් ජාතීන්ගේ විශේෂ ක්‍රියා පටිපාටි බලතල දරන සියලුම දෙනා වෙත අපි ස්ථාවර ආරාධනයක් කර ඇති අතර, පසුගිය කාලය තුළ දී ඉහළ සංචාර සංඛ්‍යාවක් සඳහා පහසුකම් සලසා ඇත. අපි විශ්ව කාලාන්තර සමාලෝචන ක්‍රියාවලිය හරහා මෙම කවුන්සිලය සමඟ නිර්මාණාත්මක සම්බන්ධයක් අපේක්ෂා කරමු. අපි විශ්ව කාලාන්තර සමාලෝචන ක්‍රියාවලිය සඳහා වන අපගේ කැපවීම් ඉටු කර ඇති අතර, එළඹෙන විශ්ව කාලාන්තර සමාලෝචන ක්‍රියාවලියේ සිවුවැනි චක්‍රයේ ක්‍රියාකාරීව නිරත වන්නෙමු.

අපි මේ වසරේ මැයි සහ අගෝස්තු මාසවල දී මහ කොමසාරිස් කාර්යාලය විසින් නිරත වූ ශ්‍රී ලංකා සංචාර දෙකක් සඳහා පහසුකම් සලසා ඇති අතර, බාධාවකින් තොරව ප්‍රවේශය ලබා දී ඇත. මෙම චාරිකා මඟින් මානව හිමිකම් පිළිබඳ මහ ‍කොමසාරිස් කාර්යාලයේ නිලධාරීන්ට පාර්ශ්වකරුවන් රාශියක් සමඟ සම්බන්ධ වීම සහ ප්‍රගතිය නිරීක්ෂණය කිරීම සඳහා අවස්ථාව සැලසුණි.

සභාපතිතුමනි,

ශ්‍රී ලංකාවේ ගැටුම් නිමා වී වසර 13ක් සපිරෙන අතර, ඉන් පසුව ඔවුන්ගේම අභිලාෂයන් සහිත නව පරපුරක් බිහිවී ඇත. සංහිඳියාව සහ වගවීම පිළිබඳ ගැටලු පිළිබඳව දේශීය ක්‍රියාවලියක් හරහා පුළුල් ලෙස නියැලෙන අතරම, දශකයකට වැඩි කාලයක් තිස්සේ කවුන්සිලයේ න්‍යාය පත්‍රයේ අඛණ්ඩව පවතින මෙම යෝජනාවේ ගමන්මග පිළිබඳව යථාර්ථවාදීව මෙනෙහි කොට, එමඟින් ශ්‍රී ලංකාවේ ජනතාවට ප්‍රතිලාභ ලැබී තිබේද යන්න පිළිබඳ යථාර්ථවාදී තක්සේරුවක් කිරීම සඳහා කාලය එළඹ ඇත. භූමියේ පවතින සැබෑ ප්‍රගතිය පිළිගෙන, ශ්‍රී ලංකාව වෙත සහයෝගය දැක්වීමේ අවශ්‍යතාවක් පවතී.

වත්මන් අභියෝග, බලවත් වුවද, අපගේ ජනතාවගේ අභිවෘද්ධිය සඳහා ආයතනික වෙනසක් සඳහා කටයුතු කිරීම සඳහා එමඟින් අපට සුවිශේෂී අවස්ථාවක් ලබා දී ඇත. මෙම අභියෝගාත්මක කාලය තුළ දී අපගේ මිතුරන් සහ හවුල්කරුවන් විසින් දක්වන ලද සහයෝගීතාවය සහ සහය ශ්‍රී ලංකාව අගය කරයි. සමගිය සහ සංහිඳියාව පිළිබඳ පණිවුඩයක් නිකුත් කරමින් ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා පාර්ලිමේන්තුව අමතා සිය ආරම්භක දේශනය සිදුකරමින් ප්‍රකාශ කළේ, “අප එක් වුව හොත් ජාතිය ප්‍රබෝධමත් කිරීමට හැකිවනු ඇති” බවයි.

සභාපතිතුමනි,

බොහෝ අභියෝග හරහා, ආසියාවේ පැරණිතම ප්‍රජාතන්ත්‍රවාදී රාජ්‍යයක් ලෙස තම ප්‍රජාතන්ත්‍රවාදී වටිනාකම් ආරක්ෂා කරන අතරම, ස්ථීරව නැඟීසිටීමේ සහ ඔරොත්තු දීමේ හැකියාවක් ශ්‍රී ලංකාවේ ජනතාව සතුව පවතී. අපගේ අභියෝග පිළිගෙන නව ජවයකින් ඉදිරියට යාම සඳහා අපි පසුබට නොවන්නෙමු. ආර්ථික වශයෙන් ප්‍රකෘතිමත් වීම කෙරෙහි අපගේ ක්ෂණික අවධානය යොමුවන අතර, අපගේ ජනතාවගේ මානව හිමිකම් ඉදිරියට ගෙන යාමද ඒ හා සමාන ප්‍රමුඛතාවයකි. අප මෙම මාර්ගයේ ගමන් කරන විට, මෙම කවුන්සිලයේ නිර්ව්‍යාජ සහය සහ අවබෝධය අපි අපේක්ෂා කරමු.

ස්තුතියි.

---------------------------------------------

ஜெனீவாவில் 2022 செப்டம்பர் 12ஆம்  திகதி  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின்  அறிக்கை

தலைவர் அவர்களே,

பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே,

மேன்மை தங்கியவர்களே,

எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் சபையுடனான எமது ஈடுபாட்டை ஒத்துழைப்பு, உரையாடல் என்ற உணர்வில் தொடர்வதற்குமான எமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஆரம்பத்தில் எமது அரசாங்கத்தின் சார்பாக மீண்டும் வலியுறுத்துகின்றேன். 46/1 தீர்மானத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்த போதிலும், எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கான இலங்கையின் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். சிறந்த நடைமுறைகளுக்கு அமைய, அறிக்கைக்கான ஒரு சேர்க்கையாக இலங்கையின் கருத்துக்கள் வைக்கப்பட வேண்டும் என  நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தலைவர் அவர்களே,

சமீப காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நாங்கள் நன்கு அறிந்தவர்களாகவும், அது குறித்து உணர்ச்சிபூர்வமானவர்களாகவும் இருக்கின்றோம். உள்ளக மற்றும் வெளிப்புறக் காரணிகளால் உருவாகும் கடுமையான பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் பல படிப்பினைகளை வழங்குகின்றது. வியன்னா பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மையை இந்தச் சூழலில் நினைவு கூர்கின்றோம். எமது மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார இன்னல்கள் குறித்து அரசாங்கம் மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக உள்ள அதே வேளையில், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்களது நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் உடனடியான பல்நோக்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நெருக்கடியின் பாதகமான பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்காக ஐ.நா. முகவர் மற்றும் இருதரப்புப் பங்காளிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது. பல சவால்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்திக்கான 2030  நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு முயற்சிக்கும்.

எமது நீண்டகால ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு சமீபத்திய மாற்றங்கள் சாட்சியமளிக்கின்றன. அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும்  கருத்துத் தெரிவிப்பதற்குமான அரசியலமைப்பு உரிமைகள், எமது மக்கள் தமது உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஜனநாயக இடத்தை உத்தரவாதப்படுத்தியது. இது சம்பந்தமாக, குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் விளையும் சட்டத்தின் மீறல்கள், சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்க, அத்தகைய சுதந்திரங்கள் ஜனநாயகமற்ற அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள கூறுகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சூழ்நிலைகளில் தீர்க்கப்பட்டன.

தலைவர் அவர்களே,

கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை  உறுதியாக உள்ளது.

இந்த சபையின் பல உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையும் 46/1 தீர்மானத்தை எதிர்த்துள்ளதுடன், அதன் சட்டபூர்வமான தன்மை மற்றும் நோக்கங்களுடன் அடிப்படையில் உடன்படவில்லை. தீர்மானத்தின் உள்ளடக்கம், குறிப்பாக அதன் செயற்பாட்டுப் பந்தி 06, இலங்கை மக்களின் இறையாண்மை மற்றும் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகளை  மீறுவதாகக் குறிப்பிட்டு நாங்கள் அதனை தொடர்ச்சியாக எடுத்துரைத்துள்ளோம். மீண்டுமொருமுறை, தீர்மானம் தொடர்பான எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் மற்றும் அது தொடர்பாக உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தலைவர் அவர்களே,

உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது 'பொருளாதாரக் குற்றங்கள்' குறித்து விரிவாகக் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. இந்த வார்த்தையின் தெளிவின்மைக்கு அப்பால், அத்தகைய குறிப்பு ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மீறுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தீர்மானங்கள் 60/251, 48/141 மற்றும் ஐ.பி. தொகுப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுகூருகின்றோம.

இருந்த போதிலும், நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் நிறுவப்பட்டு வரும் விரிவான சட்டக் கட்டமைப்பு குறித்து இலங்கை தொடர்ந்தும் சபைக்கு விளக்கமளித்துள்ளது. அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதுடன், இது ஜனநாயக நிர்வாகத்தையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும் மற்றும் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரசியலமைப்பு அங்கீகாரம் உட்பட, பொது ஆய்வு, நிர்வாகத்தில் பங்கேற்றல் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுதல் போன்வற்றை வலுப்படுத்தும். இதில், அரசியலமைப்பு சபையின் அமைப்பு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வு சேவை ஆணைக்குழுவை மீண்டும் அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். உத்தேச சட்டக் கட்டமைப்பானது, சொத்துப் பிரகடன முறையை வலுப்படுத்தி, நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்துவோரின் உரிமைகளைப் பாதுகாத்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை அதிகரிக்கும். பொது நிறுவனங்களில் மோசடி, விரயம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிந்து தடுப்பதன் மூலம் அரசாங்க செலவினங்களை மேற்பார்வையிடும் ஒரு ஆய்வாளர் நாயகம் போன்ற  ஒரு அமைப்பை நிறுவுவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது.

தலைவர் அவர்களே,

உள்நாட்டு நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள்  அர்த்தமுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டுமானால், அது சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பின் அடிப்படையில், அதன் மக்களின் அபிலாஷைகளுடன் இணக்கமாக, அதன் அடிப்படை சட்டக் கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்க வேண்டும். அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் ஊடுருவும் வெளி முயற்சிகள் மீண்டும் மீண்டும் நாட்டில் அர்த்தமுள்ள முடிவுகளைத் தரத் தவறிவிட்டன என்பதையும், அவை உறுப்பு நாடுகளின் வளங்களில் பயனற்ற விரயத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்றது.

அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்க  அரசாங்கம் முயற்சிக்கும். இலங்கையின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு பொருந்தக்கூடிய அத்தகைய மாதிரியின் வரையறைகள் கலந்துரையாடப்படுகின்றன.

'முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புக்களின் மதிப்பீடு மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி' தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்  ஒரு ஆலோசனைக் குழுவை நிறுவுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்கள் மற்றும் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கு வழிவகுத்துள்ளன. மேலதிக பரிந்துரைகள் காத்திருக்கின்றன.

இந்த ஆண்டு, மிகவும் கடினமான பணியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மீளாய்வை நாங்கள் வழங்கியதால், மனித உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப மிகவும் விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டமாகக் கொண்டு வருவோம். குழுக்கள் மற்றும்  தனிநபர்களின் பட்டியல் அண்மையில் நீக்கப்பட்டமை ஆக்கபூர்வமான உரையாடலுக்கு மேலும் உத்வேகத்தை வழங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும், இழப்பீடுகளை  வழங்குவதற்கும் நிறுவப்பட்ட சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்புக்கள், அந்தந்த ஆணைகளைத் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்படுத்துகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விசாரணை மற்றும் சரிபார்ப்பு செயன்முறையைத் தொடங்கியுள்ளதுடன், தடயங்களுக்கானதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப ஆதரவு தொடர்பானதுமான தனிப் பிரிவுகளை  அமைத்து, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகளில் பார்வையாளராக செயற்படுகின்றது.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் அதன் ஆணையைத் தொடர்ந்தும் வழங்குவதுடன், அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இழப்பீட்டுக் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள்  பண இழப்பீட்டிற்கு அப்பால், ஏனைய வகையான ஆதரவை நோக்கி அலுவலகத்தின் பணியை விரிவுபடுத்தியுள்ளன. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான ஆதரவும் வளங்களும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

அனைத்து சமூகங்களையும் தலைமுறைகளையும் உள்ளடக்கிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அணுகல் வெளிநாட்டிலுள்ளஇலங்கையர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் விரிவுபடுத்தப்படும் என்பதுடன்,  இதன் மூலம் மேலதிகமான தீவிர ஈடுபாட்டிற்கு உதவிகள் வழங்கப்படும்.

தலைவர் அவர்களே,

உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, மனித உரிமைகள் ஒன்றுக்கொன்று சார்ந்தவையும், ஒன்றோடொன்று தொடர்புடையவையும் மற்றும் பிரிக்க முடியாதவையுமாகும். மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில், ஏனைய நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் கிடைக்கும் கணிசமான நிபுணத்துவத்திலிருந்து நாம் பயனடைந்துள்ளோம். நாங்கள் தொடரும்போது, அவசியமான சந்தர்ப்பங்களில் சிறந்த நடைமுறைகள் குறித்து மேலதிக  ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறுவோம்.

மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடனான எமது ஒத்துழைப்பை மேலும் தொடருவோம். இலங்கையானது 9 முக்கிய மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் அங்கம் வகிப்பதுடன், ஐ.நா. சாசன அமைப்புக்களுடன் வழக்கமான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைப் பேணி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் இலங்கைக்கு வருகை தருமாறு நாங்கள் நிலையான அழைப்பை விடுத்துள்ள அதே வேளையில், சமீப காலங்களில் அத்தகையோரின் அதிக எண்ணிக்கையிலான விஜயங்களுக்கு வசதிகளை வழங்கியுள்ளோம். உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறையின் மூலம் சபையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை  எதிர்பார்க்கின்றோம். உலகளாவிய காலாந்தர மீளாய்விலான எமது கடமைகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்பதுடன், வரவிருக்கும் நான்காவது சுழற்சி உலகளாவிய காலாந்தர மீளாய்வில் முன்கூட்டியே ஈடுபடுவோம்.

இந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான இரண்டு விஜயங்களுக்கு நாங்கள் தடையற்ற அணுகலை வழங்கினோம். இந்த விஜயங்கள் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் முன்னேற்றத்தைக் காண்பதற்குமான வாய்ப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு வழங்கியது.

தலைவர் அவர்களே,

இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பின்னர் தமது சொந்த அபிலாஷைகளுடன் புதிய தலைமுறை உருவாகியுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான  பிரச்சினைகள் உள்நாட்டு செயன்முறையின் மூலம் விரிவாகக் கையாளப்படும் அதே வேளையில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சபையின் நிகழ்ச்சி நிரலில் தொடரும் இந்தத் தீர்மானத்தின் பாதையை யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், அது இலங்கை மக்களுக்குப் பலனளித்ததா என்பதைப் பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டையும் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. களத்தில் உண்மையான முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தற்போதைய சவால்கள் வலிமையானதாக இருந்தாலும், எமது மக்களின் முன்னேற்றத்திற்காக நிறுவன மாற்றத்தை நோக்கிச் செயற்படுவதற்கான தனித்துவமான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சவாலான நேரத்தில்  எமது நண்பர்கள் மற்றும் பங்காளிகள் வழங்கிய ஒற்றுமை மற்றும் ஆதரவை இலங்கை பாராட்டுகின்றது. ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது ஆரம்ப உரையில், 'நாம் ஒன்றுபட்டால், தேசத்தை உற்சாகப்படுத்த முடியும்' எனக் குறிப்பிட்டார்.

தலைவர் அவர்களே,

பல சவால்களின் ஊடாக, ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான இலங்கையில், அதன் மக்கள் தமது ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அதே வேளையில், உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர். எங்களுடைய சவால்களை ஒப்புக்கொண்டு, புதிய வீரியத்துடன் முன்னேறுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை. எமது உடனடியான அக்கறையாக பொருளாதார மீட்சி விளங்கினாலும், எமது மக்களின் மனித உரிமைகளை  முன்னேற்றுவதும் அதற்கு சமமான முன்னுரிமையாகும். இந்தப் பாதையில் நாம் செல்லும்போது, இந்த சபையின் உண்மையான ஆதரவையும் புரிதலையும் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.

Please follow and like us:

Close