​Sri Lankan Missions to promote Batik, Handloom and Local Apparels

​Sri Lankan Missions to promote Batik, Handloom and Local Apparels

The Foreign Ministry and the State Ministry of Batik, Handloom and Local Apparel Products held a joint session on 18 February 2022 at the Foreign Ministry to promote Sri Lankan batik, handloom and local apparel products through Sri Lankan Missions worldwide.

Foreign Minister Prof. G.L. Peiris who chaired the event reiterated the importance of economic diplomacy initiatives and emphasized that Sri Lankan indigenous products are the outcome of creativity of the people and their promotion abroad will directly uplift the economy at grassroot level. State Minister of Batik, Handloom and Local Apparel Products,   Dayasiri Jayasekara requested Sri Lankan diplomats to vigorously promote Sri Lankan batik and handloom products in their respective countries of accreditation and presented samples to display at Missions and events.  He also explained the various initiatives being taken to promote them in foreign countries.  Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage apprised the beauty of the work of art from the cottage industry of Sri Lanka and suggested to observe a weekly batik day to reenergize the sector.

The Secretary of the State Ministry of Batik, Handloom and Local Apparel Products, Janaka Dharmakeerthi, Chairman of Sri Lanka Handicrafts Board, Lakmal Wickramaarachchi and senior officials of the Foreign Ministry and the State Ministry of Regional Cooperation also attended the event, while Ambassadors, High Commissioners and other diplomatic officials of Sri Lanka joined virtually.

Foreign Ministry

Colombo

18 February, 2022

​........................................................

 මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකා දූත මණ්ඩල බතික්අත්යන්ත්‍ර රෙදිපිලි සහ දේශීය ඇඟලුම් ප්‍රවර්ධනය කරයි

ලොව පුරා ශ්‍රී ලංකා දූත මණ්ඩල හරහා ශ්‍රී ලංකාවේ බතික්, අත්යන්ත්‍ර සහ දේශීය ඇඟලුම් නිෂ්පාදන ප්‍රවර්ධනය කිරීම සඳහා, විදේශ අමාත්‍යාංශය සහ බතික්, අත්යන්ත්‍ර සහ දේශීය ඇඟලුම් නිෂ්පාදන පිළිබඳ රාජ්‍ය අමාත්‍යාංශය 2022 පෙබරවාරි 18 වැනි දින විදේශ අමාත්‍යාංශයේ දී ඒකාබද්ධ සැසියක් පැවැත්වීය.

උත්සවයේ මුලසුන දැරූ විදේශ අමාත්‍ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා, ආර්ථික රාජ්‍යතාන්ත්‍රික මුලපිරීම්වල වැදගත්කම සහ ශ්‍රී ලාංකික දේශීය නිෂ්පාදන ජනතාවගේ නිර්මාණශීලීත්වයේ ප්‍රතිඵලයක් බවත් අවධාරණය කරමින්, විදේශයන්හි දී ඔවුන් ප්‍රවර්ධනය කිරීම ඔවුන්ගේ බිම් මට්ටමේ ආර්ථිකය සෘජුවම නංවාලනු ඇති බව පැවසීය. බතික්, අත්යන්ත්‍ර සහ දේශීය ඇඟලුම් නිෂ්පාදන රාජ්‍ය අමාත්‍ය දයාසිරි ජයසේකර මැතිතුමා ඔවුන් අක්තගන්වා සිටින රටවල ශ්‍රී ලාංකේය බතික් සහ අත්යන්ත්‍ර නිෂ්පාදන ප්‍රබල ලෙස ප්‍රවර්ධනය කරන ලෙස ශ්‍රී ලංකා තානාපතිවරුන්ගෙන් ඉල්ලීමක් කළ අතර, දූත මණ්ඩලවල සහ උත්සව අවස්ථාවල දී ප්‍රදර්ශනය කිරීම සඳහා සාම්පල පිරිනැමීය. විදේශ රටවල දී ඒවා ප්‍රවර්ධනය කිරීම සඳහා ගෙන යන විවිධ ක්‍රියාමාර්ග පිළිබඳව ද ඔහු පැහැදිලි කළේය. ශ්‍රී ලංකාවේ ගෘහ කර්මාන්තයෙන් නිමැවෙන කලා නිර්මාණවල අලංකාරය පිළිබඳව දැනුවත් කළ විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා මෙම ක්ෂේත්‍රය නැවත පණ ගැන්වීම සඳහා සතිපතා බතික් දිනයක් පැවැත්වීමට යෝජනා කළේය.

බතික්, අත්යන්ත්‍ර සහ දේශීය ඇඟලුම් නිෂ්පාදන රාජ්‍ය අමාත්‍යාංශයේ ලේකම් ජනක ධර්මකීර්ති මහතා, ශ්‍රී ලංකා හස්ත කර්මාන්ත මණ්ඩලයේ සභාපති ලක්මාල් වික්‍රමආරච්චි මහතා සහ විදේශ අමාත්‍යාංශයේ සහ කලාපීය සහයෝගිතා රාජ්‍ය අමාත්‍යාංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් ද මෙම අවස්ථාව සඳහා සහභාගී වූ අතර, ශ්‍රී ලංකාවේ තානාපතිවරුන්, මහ කොමසාරිස්වරුන් සහ අනෙකුත් රාජ්‍යතාන්ත්‍රික නිලධාරීන් අතථ්‍ය ලෙස සම්බන්ධ විය.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2022 පෙබරවාරි 18 වැනි දින

................................................

ஊடக வெளியீடு

 பட்டிக்கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகளை இலங்கைத் தூதரகங்கள் ஊக்குவிப்பு

வெளிநாட்டு அமைச்சு மற்றும் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியன  இணைந்து இலங்கையின் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களை உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலம் ஊக்குவிப்பதற்கான கூட்டு அமர்வை 2022 பெப்ரவரி 18ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடாத்தின.

நிகழ்விற்குத் தலைமை தாங்கிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகள் மக்களின் படைப்பாற்றலின் விளைவேயாகும் என்றும், வெளிநாடுகளில் அவற்றை ஊக்குவிப்பதானது நேரடியாகவே பொருளாதாரத்தை அடிமட்டத்தில் இருந்து உயர்வடையச் செய்யும் என்றும் வலியுறுத்தினார். இலங்கையின் பட்டிக் மற்றும் கைத்தறித் தயாரிப்புக்களை தாம் அங்கீகாரம் பெற்றுள்ள நாடுகளில் ஊக்குவிக்குமாறு இலங்கை இராஜதந்திரிகளிடம் கேட்டுக்கொண்ட பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களுக்கான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தூதரகங்கள் மற்றும் நிகழ்வுகளில் காட்சிப்படுத்தத் தேவையான மாதிரிகளை வழங்கினார். வெளிநாடுகளில்  அவற்றை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விளக்கினார். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கையின் குடிசைத் தொழில்துறையின் கலைப் படைப்புக்களின் அழகை எடுத்துரைத்ததுடன், இந்தத் துறையை மீண்டும் புதுப்பிக்க வாரந்தோறும் பாட்டிக் தினத்தை அனுசரிப்பதற்குப் பரிந்துரைத்தார்.

பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடைத் தயாரிப்புக்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, இலங்கை கைவினைப்பொருட்கள் சபையின் தலைவர் லக்மால் விக்கிரமாராச்சி மற்றும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான  இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதே வேளை, இலங்கைத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திர அதிகாரிகள் மெய்நிகர் ரீதியாக இணைந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 பிப்ரவரி 18

Please follow and like us:

Close