23rd meeting of the EU-Sri Lanka Joint Commission

23rd meeting of the EU-Sri Lanka Joint Commission

The European Union (EU) and the Democratic Socialist Republic of Sri Lanka held their 23rd meeting of the Joint Commission on 25 January 2021, via video conference. This was the first Joint Commission under the new leadership in both the European Union and Sri Lanka.

The Joint Commission meeting, was held in a cordial and open atmosphere and the EU and Sri Lanka exchanged views on a wide array of subjects, reaffirming the deep cooperation ties and the willingness to strengthen the relationship between the people of the EU and Sri Lanka further. The EU and Sri Lanka agreed on the importance of enhancing trade ties and continuing to work closely together on human rights and reconciliation issues which were on the agenda of the meeting.

Sri Lanka thanked the EU for its contribution of €22 million grant to support the Sri Lanka Governments efforts to deal with the COVID 19 pandemic targeting the health, agriculture, and tourism sectors. The EU and Sri Lanka highlighted the role played by the World Health Organisation (WHO) and noted the importance of an effective multilateral system in addressing the challenges related to the pandemic.

Sri Lanka and the EU concurred that the EU’s unilateral tariff preferences granted under the Special Incentive Arrangement for Sustainable Development and Good Governance (GSP+) have made a significant contribution to Sri Lanka’s economy. Exports from Sri Lanka to the EU have increased to reach €2.3 billion (Sri Lankan currency equivalent), thus making the EU Sri Lanka’s second largest export market.

The Joint Commission acknowledged that there was potential for Sri Lanka to make even better use of the tariff concessions granted. In this regard, among other things, the EU also stressed that open and fair trade requires a level playing field, and expressed its strong concerns about Sri Lanka’s import restrictions imposed since April 2020, following COVID, which have a negative impact on European businesses. The EU urged Sri Lanka to notify these measures to the World Trade Organisation. The EU and Sri Lanka committed to further enhance the regular EU-Sri Lanka Investor Dialogue to address impediments affecting trade and investment from the EU.

Sri Lanka reaffirmed the commitments made to effectively implement the 27 international Conventions covered by the GSP+ scheme on human and labour rights, environment and good governance. In this context, the EU reiterated the need for Sri Lanka to amend the Prevention of Terrorism Act and bring it in line with international standards. The Sri Lankan government confirmed its intent on revisiting the provisions of the PTA with a view to making the appropriate amendments.

The EU regrets Sri Lanka’s withdrawal from its co-sponsorship of the UN Human Rights Council Resolution 30/1and subsequent resolutions that incorporated and built on it. Sri Lanka explained how it would advance national reconciliation and action taken in accordance with its Constitution and laws. Sri Lanka announced the appointment of a Commission of Inquiry to investigate alleged human rights violations.  The EU reiterated the importance of fostering reconciliation, justice, accountability and peaceful coexistence among Sri Lanka’s diverse communities, and underlined the important role of the independent institutions established in recent years, notably the Office on Missing Persons, the Office for Reparations and the Human Rights Commission. The EU stressed the value of a fully empowered and resilient civil society, in all its diversity for any democracy. The EU expressed its continued readiness to support Sri Lanka in these efforts.

Regarding the use of the death penalty, the EU welcomed Sri Lanka’s record on maintaining its moratorium on executions and encouraged it to legally abolish the death penalty. The EU also reiterated its opposition to the use of the death penalty in all circumstances.

The Joint Commission was informed about the proceedings of the fourth EU-Sri Lanka Working Group on Development Cooperation held in Brussels on 28 October 2020. In addition to the support for Sri Lanka’s COVID-19 response, the Working Group appraised positively another three grants from the European Union worth €35.75 million, which will support Sri Lanka’s justice sector, help improve food safety, and strengthen efforts to mitigate climate change. Implementation is planned for 2021 and beyond. The EU and Sri Lanka committed to working together in the coming years on the preparation of possible new actions aiming at addressing green recovery, promotion of inclusive and peaceful society, and water management.

The European Union and Sri Lanka explored possibilities for future cooperation on climate change, in particular on the implementation of the Paris Agreement. It was agreed that recovery from the global COVID-19 crisis should be used as an opportunity to rebuild the economies in a sustainable manner. The EU welcomed Sri Lanka's commitment to the implementation of the environmental and climate change conventions, notably the revision of the Nationally Determined Contributions, which will be submitted timely to the UN Framework Convention on Climate Change (UNFCCC) in February 2021. The EU also appreciated Sri Lanka’s positive approach towards a Global Agreement on Plastics and President Rajapaksa’s commitment to reversing biodiversity loss by 2030 [through the Leader’s Pledge for Nature at the UN Summit for Biodiversity]. The EU stressed its recent actions to enhance its climate ambition, including climate neutrality by 2050 and the increased 2030 targets of reducing its greenhouse gas emissions by at least 55% compared to 1990. Sri Lanka confirmed its commitment to taking ambitious action to ensure a sustainable, low-carbon and climate resilient development. The EU and Sri Lanka agreed that the upcoming UN conferences – the UN Conference of the Parties (COP26) to the UNFCCC and the 15th Conference of the Parties (COP15) to the Convention on Biodiversity (CBD) will present vital opportunities for the international community to make ambitious, meaningful commitments.

The European Union and Sri Lanka took note of the ad-hoc Counter-Terrorism Dialogue, which took place in Colombo in July 2019 and reviewed on-going cooperation provided through an EU funded project with UN Office on Drugs and Crime (UNODC) and Interpol. The EU stressed the importance of applying international human rights standards in the fight against terrorism. Sri Lanka looks forward to continuing the Counter Terrorism Dialogue and Security Cooperation.

Issues related to mobility and migration were also on the agenda. Ways to enhance cooperation on higher education, with a particular reference to the Horizon 2020, the EU framework programme for research and innovation, were also addressed.

Cooperation in the framework of the Indian Ocean Tuna Commission (IOTC) and towards the common goals of preservation of healthy oceans, conservation and sustainable use of marine living resources was discussed.

The EU and Sri Lanka agreed on a series of actions for follow-up before the next Joint Commission meeting in Brussels in 2021.

The meeting was co-chaired by Ms Paola Pampaloni, Deputy Managing Director for Asia and the Pacific at the European External Action Service, and Mr A.M.J Sadiq, Additional Secretary of the Foreign Ministry of Sri Lanka.

The Joint Commission, which oversees the 1995 EU-Sri Lanka Cooperation Agreement on Partnership and Development, deals with a broad range of bilateral and multilateral issues of mutual interest. Its tasks are to: ensure the proper functioning and implementation of the Agreement; set priorities; and make recommendations.

All three Working Groups established under the terms of the Joint Commission reported back from their respective meetings held in August 2019 (the Working Group on Governance, Rule of Law and Human Rights),in October 2019 (the Working Group on Trade and Economic Cooperation Issues, and on 28 October 2020 (the Working Group on Development Cooperation).

Colombo

25 January 2021

........................

ඒකාබද්ධ මාධ්‍ය ප්‍රකාශය

මානව හිමිකම් හා ප්‍රතිසංධාන ගැටලු පිළිබඳව සමීපව කටයුතු කිරිමට යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව එකඟ වෙයි.

මානව හිමිකම් සහ ප්‍රතිසන්ධාන ගැටලු පිළිබඳව අඛණ්ඩව සමීපව කටයුතු කීරීමට  යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව එකඟ වි තිබේ. යුරෝපා සංගමය (EU) සහ ශ්‍රී ලංකා ප්‍රජාතන්ත්‍රික සමාජවාදී ජනරජය සිය 23 වැනි ඒකාබද්ධ කොමිෂන් සභා රැස්වීම ඉකුත් 25 වැනි දින වීඩියෝ සම්මන්ත්‍රණයක් ලෙස පැවැත්වූ අතර එහිදී මෙම එකඟතාවට පැමිණ තිබේ. යුරෝපා සංගමයේ හා ශ්‍රී ලංකාවේ නව නායකත්වයන් යටතේ පැවති පළමු ඒකාබද්ධ කොමිෂන් සභා රැස්වීමද මෙය විය. මෙම ඒකාබද්ධ කොමිෂන් සභා රැස්වීම සුහද හා විවෘත වාතාවරණයක් තුළ පැවති අතර, ගැඹුරු සහයෝගීතා සබඳතා සහ යුරෝපා සංගමයේ සහ ශ්‍රී ලංකාවේ ජනතාව අතර සම්බන්ධතාවය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා පවතින කැමැත්ත යළි තහවුරු කරමින්, යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව පුළුල් විෂයයන් රැසක් පිළිබඳව අදහස් හුවමාරු කර ගත්හ. වෙළඳ සබඳතා වැඩි දියුණු කිරීමේ වැදගත්කම පිළිබඳව මෙහිදී වැඩි අවධානයක් යොමු විය.

සෞඛ්‍ය, කෘෂිකාර්මික හා සංචාරක කටයුතු යන අංශ ඉලක්ක කර ගනිමින් කොවිඩ්-19 වසංගතය සමඟ කටයුතු කිරීම සඳහා ශ්‍රී ලංකා රජය දරන ප්‍රයත්නයට සහය දැක්වීම සඳහා යූරෝ මිලියන 22 ක ප්‍රදානයක් ලබා දීම මඟින් දායක වීම පිළිබඳව ශ්‍රී ලංකාව යුරෝපා සංගමය වෙත ස්තූතිය පුද කළේය. යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව, ලෝක සෞඛ්‍ය සංවිධානය (WHO) විසින් ඉටු කරන ලද කාර්යභාරය ඉස්මතු කළ අතර, මෙම වසංගතය හා සම්බන්ධ අභියෝගයන්ට මුහුණ දීම සඳහා ඵලදායී බහුපාර්ශ්වීය පද්ධතියක ඇති වැදගත්කම පිළිබඳව ද සඳහන් කළේය.

තිරසාර සංවර්ධනය හා යහපාලනය සඳහා වූ විශේෂ දිරිගැන්වීමේ විධිවිධාන (ජීඑස්පී +) යටතේ ප්‍රදානය කළ යුරෝපා සංගමයේ ඒකපාර්ශ්වික තීරුබදු මනාපයන් මඟින්, ශ්‍රී ලංකාවේ ආර්ථිකයට සැලකිය යුතු අන්දමේ දායකත්වයක් ලබා දී ඇති බවට ශ්‍රී ලංකාව සහ යුරෝපා සංගමය එකඟ විය. ශ්‍රී ලංකාවේ සිට යුරෝපා සංගමය වෙත කරන අපනයන යූරෝ බිලියන 2.3 ක් (ශ්‍රී ලංකා මුදල්වලට සමානව) දක්වා ඉහළ ගොස් ඇති අතර, එමඟින් යුරෝපා සංගමය ශ්‍රී ලංකාවේ දෙවැනි විශාලතම අපනයන වෙළඳපොළ බවට පත්වී තිබේ.

ලබා දී ඇති තීරුබදු සහන වඩාත් හොඳින් භාවිතා කිරීම සඳහා හැකියාවක් ශ්‍රී ලංකාව සතුව පවතින බව ඒකාබද්ධ කොමිෂන් සභාව පිළිගත්තේය. මේ සම්බන්ධයෙන්, විවෘත හා සාධාරණ වෙළඳාම සඳහා සම මට්ටමේ ක්‍රීඩා පිටියක් අවශ්‍ය වන බව යුරෝපා සංගමය අවධාරණය කළ අතර, යුරෝපීය ව්‍යාපාර කෙරෙහි ඍණාත්මක බලපෑමක් ඇති කරමින් කොවිඩ් වසංගතයෙන් අනතුරුව 2020 අප්‍රේල් මාසයේ සිට ශ්‍රී ලංකාව විසින් පනවන ලද ආනයන සීමා කිරීම් පිළිබඳව සිය දැඩි සැලකිලිමත් බව පළ කළේය. මෙම ක්‍රියාමාර්ග පිළිබඳව ලෝක වෙළඳ සංවිධානයට දැනුම් දෙන ලෙස යුරෝපා සංගමය ශ්‍රී ලංකාවෙන් ඉල්ලා සිටියේය. යුරෝපා සංගමයේ වෙළඳාමට හා ආයෝජනයට බලපාන බාධාවන්ට පිළියම් යෙදීම පිණිස නිත්‍ය යුරෝපා-ශ්‍රී ලංකා ආයෝජක සංවාදය තවදුරටත් වැඩිදියුණු කිරීම සඳහා යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව කැපවී සිටී.

මානව හා කම්කරු අයිතිවාසිකම්, පරිසරය සහ යහපාලනය පිළිබඳ ජීඑස්පී + යෝජනා ක්‍රමය මඟින් ආවරණය වන ජාත්‍යන්තර සම්මුතීන් 27 ඵලදායී ලෙස ක්‍රියාත්මක කිරීම සඳහා පවතින ඇති කැපවීම පිළිබඳව ශ්‍රී ලංකාව යළි තහවුරු කළේය. මෙම සන්දර්භය තුළ, ශ්‍රී ලංකාව විසින් ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත සංශෝධනය කොට ජාත්‍යන්තර ප්‍රමිතීන්ට අනුකූලව ගෙන ඒමේ අවශ්‍යතාවය යුරෝපා සංගමය යළිත් අවධාරණය කළේය. සුදුසු සංශෝධන සිදුකිරීමේ අරමුණින් යුතුව, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතේ විධිවිධාන නැවත සලකා බැලීමේ අපේක්ෂාව ශ්‍රී ලංකා රජය සනාථ කළේය.

එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ 30/1 යෝජනාව හා පසුව එය අන්තර්ගත කොට ගොඩනඟන ලද යෝජනා සඳහා සම අනුග්‍රාහකත්වයෙන් ශ්‍රී ලංකාව ඉවත්වීම පිළිබඳව යුරෝපා සංගමය කනගාටුව පළ කළේය. ව්‍යවස්ථාවට හා නීතිවලට අනුකූලව ජාතික සංහිඳියාව හා ඒ සඳහා ගනු ලබන ක්‍රියාමාර්ග ඉදිරියට ගෙන යන්නේ කෙසේද යන්න පිළිබඳව ශ්‍රී ලංකාව මෙහිදී  පැහැදිලි කළේය. මානව හිමිකම් උල්ලංඝනය කිරීම් සම්බන්ධයෙන් විමර්ශනය කිරීම සඳහා විමර්ශන කොමිෂන් සභාවක් පත් කරන බව ශ්‍රී ලංකාව නිවේදනය කර ඇති බවද මෙහිදි පන්වා දුන්නේය. ශ්‍රී ලංකාවේ විවිධ ප්‍රජාවන් අතර සංහිඳියාව, යුක්තිය, වගවීම සහ සාමකාමී සහජීවනය වර්ධනය කිරීමේ වැදගත්කම පිළිබඳව යුරෝපා සංගමය යළිත් අවධාරණය කළ අතර, විශේෂයෙන් අතුරුදහන් වූවන් පිළිබඳ කාර්යාලය, වන්දි ගෙවීමේ කාර්යාලය සහ මානව හිමිකම් කොමිසම ඇතුළුව මෑත වසරවල දී පිහිටුවන ලද ස්වාධීන ආයතනවල වැදගත් කාර්යභාරය අවධාරණය කළේය. ඕනෑම ප්‍රජාතන්ත්‍රවාදයක් සඳහා වන විවිධත්වය තුළ පූර්ණ වශයෙන් බලගතු හා ඔරොත්තු දෙන සිවිල් සමාජයක ඇති වටිනාකම පිළිබඳව යුරෝපා සංගමය අවධාරණය කළේය. මෙම ප්‍රයත්න සඳහා ශ්‍රී ලංකාවට සහයෝගය දැක්වීමට අඛණ්ඩව සූදානමින් සිටින බව යුරෝපා සංගමය පැවසීය.

ශ්‍රී ලංකාවේ මරණීය දණ්ඩනය අත්හිටුවීම පිළිබඳ වාර්තාව යුරෝපා සංගමය පිළිගත් අතර, මරණීය දණ්ඩනය පැනවීම නීත්‍යානුකූලව අහෝසි කිරීම සඳහා ද දිරිමත් කළේය. සෑම තත්ත්වයක් තුළම මරණීය දණ්ඩනය භාවිතා කිරීම සඳහා සිය විරුද්ධත්වය යුරෝපා සංගමය නැවත අවධාරණය කළේය.

2020 ඔක්තෝබර් 28 වැනි දින බ්‍රසල්ස් හි දී පැවති සංවර්ධන සහයෝගීතාව පිළිබඳ සිව්වැනි යුරෝපා සංගම්-ශ්‍රී ලංකා ක්‍රියාකාරී කණ්ඩායමේ කටයුතු පිළිබඳව ඒකාබද්ධ කොමිසම වෙත දැනුම් දෙන ලදී. ශ්‍රී ලංකාවේ කොවිඩ්-19 ප්‍රතිචාරය සඳහා සහය දැක්වීමට අමතරව, ශ්‍රී ලංකාවේ අධිකරණ අංශයට සහාය වීම, ආහාර සුරක්‍ෂිතතාව වැඩි දියුණු කිරීම සහ දේශගුණික විපර්යාස අවම කිරීම සඳහා වන උත්සාහයන් ශක්තිමත් කිරීම පිණිස යුරෝපා සංගමය විසින් ලබා දෙන යූරෝ මිලියන 35.75 ක් වටිනා තවත් ප්‍රදානයන් තුනක් ක්‍රියාකාරී කණ්ඩායම විසින් ධනාත්මකව ඇගයීමට ලක් කරන ලදී. මෙය 2021 සහ ඉන් ඔබ්බෙහි දී ක්‍රියාත්මක කිරීම සඳහා සැලසුම් කොට ඇත. හරිත ප්‍රකෘතිමත් වීම, සියල්ල ඇතුළත් හා සාමකාමී සමාජයක් ප්‍රවර්ධනය කිරීම සහ ජල කළමනාකරණය අරමුණු කරගනිමින් ක්‍රියාත්මක කළ හැකි නව ක්‍රියාමාර්ග සකස් කිරීම පිණිස ඉදිරි වසරවල දී එක්ව කටයුතු කිරීම සඳහා කැපවන බව යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව සඳහන් කළහ.

යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව, විශේෂයෙන් පැරිස් ගිවිසුම ක්‍රියාත්මක කිරීම ඇතුළුව, දේශගුණික විපර්යාස පිළිබඳ අනාගත සහයෝගීතාව පිළිබඳව සොයා බැලීය. ගෝලීය කොවිඩ්-19 අර්බුදයෙන් මිදීම, ආර්ථිකයන් තිරසාර ලෙස නැවත ගොඩනැංවීමේ අවස්ථාවක් ලෙස භාවිත කළ යුතු බවට එකඟ විය. පාරිසරික හා දේශගුණික විපර්යාස පිළිබඳ සම්මුතීන් ක්‍රියාවට නැංවීම සඳහා ශ්‍රී ලංකාව දක්වන කැපවීම යුරෝපා සංගමය විසින් සාදරයෙන් පිළිගන්නා අතර, විශේෂයෙන් 2021 පෙබරවාරි මාසයේ දී එක්සත් ජාතීන්ගේ දේශගුණික විපර්යාස පිළිබඳ රාමුගත සම්මුතියට (UNFCCC) කාලෝචිත ලෙස ඉදිරිපත් කරනු ලබන, ජාතික වශයෙන් තීරණය කරන ලද දායකත්වයන් සංශෝධනය කිරීම ද යුරෝපා සංගමය අගය කළේය. ප්ලාස්ටික් පිළිබඳ ගෝලීය ගිවිසුමක් සඳහා ශ්‍රී ලංකාවේ ධනාත්මක ප්‍රවේශය සහ 2030 වන විට ජෛව විවිධත්ව හානිය ආපසු හැරවීම සඳහා (එක්සත් ජාතීන්ගේ ජෛව විවිධත්වය පිළිබඳ සමුළුවේ දී නායකයාගේ සොබාදහම පිළිබඳ ප්‍රතිඥාව හරහා) ජනාධිපති රාජපක්ෂ මැතිතුමාගේ කැපවීම ද යුරෝපා සංගමයේ ඇගයීමට ලක්විය. 2050 වසර වන විට දේශගුණික මධ්‍යස්ථභාවය කරා ළඟාවීම සහ හරිතාගාර වායු විමෝචනය 1990 වසරට සාපේක්ෂව අවම වශයෙන් 55% කින් අඩු කිරීම සඳහා වැඩිදියුණු කරන ලද 2030 ඉලක්කයන් ද ඇතුළුව, සිය දේශගුණික අභිලාෂය වැඩිදියුණු කිරීම සඳහා ගන්නා ලද සිය මෑත කාලීන ක්‍රියාමාර්ග පිළිබඳව යුරෝපා සංගමය අවධාරණය කළේය. තිරසාර, කාබන් අවම සහ දේශගුණික තත්වයන්ට ඔරොත්තු දෙන සංවර්ධනයක් සහතික කිරීම සඳහා අභිලාෂයෙන් යුතු ක්‍රියාමාර්ග ගැනීම සඳහා පවතින කැපවීම පිළිබඳව ශ්‍රී ලංකාව සනාථ කළේය. එළඹෙන දේශගුණික විපර්යාස පිළිබඳ එක්සත් ජාතීන්ගේ රාමු සම්මුතිය (UNFCCC) සඳහා පාර්ශ්වකරුවන්ගේ සමුළුව (COP26) සහ ජෛව විවිධත්ව සම්මුතිය (CBD) සඳහා පාර්ශ්වකරුවන්ගේ 15 වැනි සමුළුව (COP15) යන එක්සත් ජාතීන්ගේ සමුළු මඟින්, අභිලාෂයෙන් යුතු, අර්ථවත් කැපවීම් කිරීම පිණිස ප්‍රයෝජනවත් අවස්ථාවන් ජාත්‍යන්තර ප්‍රජාව සඳහා ඉදිරිපත් කරනු ඇති බවට යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව එකඟ විය.

2019 ජූලි මාසයේ දී කොළඹදී පැවති තාවකාලික ත්‍රස්ත විරෝධී සංවාදය සහ එහි දී යුරෝපා සංගමය විසින් අරමුදල් සපයන ව්‍යාපෘතියක් මඟින් එක්සත් ජාතීන්ගේ මත්ද්‍රව්‍ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලය (UNODC) සහ ඉන්ටර්පොල් සමඟ සපයනු ලබන අඛණ්ඩ සහයෝගය සමාලෝචනය කිරීම පිළිබඳව යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව සැලකිල්ලට ගත්හ. ත්‍රස්තවාදයට එරෙහි සටනේ දී ජාත්‍යන්තර මානව හිමිකම් ප්‍රමිතීන් ක්‍රියාත්මක කිරීමේ වැදගත්කම පිළිබඳව යුරෝපා සංගමය අවධාරණය කළේය. ශ්‍රී ලංකාව, ත්‍රස්ත මර්දන සංවාදය සහ ආරක්ෂක සහයෝගීතාව අඛණ්ඩව ඉදිරියට ගෙන යාමට අපේක්ෂා කරයි.

සංචලතාව හා සංක්‍රමණය සම්බන්ධ ගැටළු ද න්‍යාය පත්‍රයේ අඩංගු විය. පර්යේෂණ හා නවෝත්පාදන සඳහා යුරෝපා සංගම් රාමු වැඩසටහන වන හොරයිසන් 2020 පිළිබඳව විශේෂ සඳහනක් කරමින්, උසස් අධ්‍යාපනය සඳහා වන සහයෝගීතාව වැඩි දියුණු කිරීමේ මාර්ග පිළිබඳව ද අවධානය යොමු කරන ලදී.

ඉන්දියන් සාගර ටූනා කොමිෂන් සභාවේ (IOTC) රාමුව තුළ මෙන්ම, සෞඛ්‍ය සම්පන්න සාගර සංරක්ෂණය, සාගර ජීවී සම්පත් සංරක්ෂණය හා තිරසාර භාවිතය යන පොදු අරමුණු කෙරෙහි සහයෝගීතාවය පිළිබඳව ද සාකච්ඡා කෙරිණ.

2021 දී බ්‍රසල්ස් හි පැවැත්වෙන මීළඟ ඒකාබද්ධ කොමිෂන් සභා රැස්වීමට පෙර යුරෝපා සංගමය සහ ශ්‍රී ලංකාව පසු විපරම් කිරීම සඳහා ක්‍රියාමාර්ග මාලාවක් සිදුකිරීම සඳහා ද එකඟ විය.

යුරෝපීය බාහිර ක්‍රියාකාරී සේවයේ ආසියා සහ පැසිෆික් කලාපයේ නියෝජ්‍ය කළමණාකාර අධ්‍යක්ෂ පැවෝලා පැම්පලෝනි මහත්මිය සහ ශ්‍රී ලංකාවේ විදේශ අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම් ඒ.එම්.ජේ සාදික් මහතාගේ සම සභාපතිත්වයෙන් මෙම රැස්වීම පැවැත්විණි.

හවුල්කාරිත්වය සහ සංවර්ධනය පිළිබඳ 1995 යුරෝපා සංගම්-ශ්‍රී ලංකා සහයෝගිතා ගිවිසුම අධීක්ෂණය කරන මෙම ඒකාබද්ධ කොමිසම, අන්‍යෝන්‍ය වශයෙන් උනන්දුවක් දක්වන පුළුල් පරාසයක ද්විපාර්ශ්වික හා බහුපාර්ශ්වික ගැටළු සම්බන්ධයෙන් කටයුතු කරයි. මෙම ගිවිසුම නිසි ලෙස ක්‍රියාත්මකවීම හා ක්‍රියාත්මක කිරීම පිළිබඳව සහතික කිරීම, ප්‍රමුඛතා සැකසීම සහ නිර්දේශ ඉදිරිපත් කිරීම එහි කාර්යයන් වේ.

ඒකාබද්ධ කොමිෂන් සභාවේ නියමයන් යටතේ පිහිටුවා ඇති ක්‍රියාකාරී කණ්ඩායම් තුන විසින්ම, 2019 අගෝස්තු මාසයේ දී (පාලන හා නීතියේ ආධිපත්‍යය සහ මානව හිමිකම් පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායම), 2019 ඔක්තෝබර් මාසයේදී (වෙළඳ හා ආර්ථික සහයෝගීතා ගැටළු පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායම) සහ 2020 ඔක්තෝබර් 28 වැනි දින (සංවර්ධන සහයෝගීතාව පිළිබඳ ක්‍රියාකාරී කණ්ඩායම) පවත්වන ලද තම රැස්වීම් පිළිබඳව වාර්තා ඉදිරිපත් කරන ලදී.

කොළඹ

2021 ජනවාරි 25 වැනි දින

..........................

இணைந்த ஊடக அறிக்கை

ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் 23வது சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆகியவற்றின் இணைந்த ஆணைக்குழுவின் 23வது சந்திப்பானது 2021 ஜனவரி 25ஆந் திகதி வீடியோ மாநாடு மூலம் நடாத்தப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகிய இரு தரப்பினரதும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற முதலாவது இணைந்த ஆணைக்குழுவாகும்.

நல்லுறவு ரீதியான மற்றும் திறந்ததொரு சூழ்நிலையில் நடைபெற்ற இணைந்த ஆணைக்குழுவின் இந்த சந்திப்பின் போது, ஆழ்ந்த ஒத்துழைப்பு உறவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியவற்றின் மக்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் பரந்த அளவிலான பாடங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் காணப்பட்ட மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை ஒப்புக் கொண்டன.

சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதற்கான இலங்கை அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நல்கிய 22 மில்லியன் டொலர் மானிய உதவிக்கு இலங்கை நன்றிகளைத் தெரிவித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் உலக சுகாதார அமைப்பு வகித்த வகிபாகத்தை எடுத்துரைத்ததுடன், தொற்றுநோய் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் பயனுள்ள பல்தரப்பு முறைமையின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டன.

நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லாட்சிக்கான சிறப்பு ஊக்க ஏற்பாட்டின் (ஜி.எஸ்.பி +) கீழ் வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருபக்கக் கட்டண விருப்பத்தேர்வுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டன. இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் டொலர்களை (இலங்கை நாணயத்திற்கு சமமான) எட்டியுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியுள்ளது.

வழங்கப்பட்ட கட்டண சலுகைகளை இலங்கை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இணைந்த ஆணைக்குழு ஒப்புக் கொண்டது. இது சம்பந்தமாக, திறந்த மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு உகந்ததொரு திடல் அமைப்பு தேவை என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதுடன், ஐரோப்பிய வணிகங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் கோவிட் நிலைமையைத் தொடர்ந்து, 2020 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் குறித்து அதன் வலுவான கவலைகளை வெளிப்படுத்தியது. இந்த நடவடிக்கைகளை உலக வர்த்தக அமைப்புக்கு அறிவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை பாதிக்கும் தடைகளை நிவர்த்தி செய்வதற்காக வழக்கமான ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை முதலீட்டாளர் உரையாடலை மேலும் மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும் உறுதிபூண்டுள்ளன.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி தொடர்பான ஜி.எஸ்.பி + திட்டத்தின் கீழ் உள்ள 27 சர்வதேச சாசனங்களை திறம்பட செயற்படுத்துவதனை இலங்கை உறுதிப்படுத்தியது. இந்த சூழலில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. தகுந்த திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டது. தனது அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்ட தேசிய நல்லிணக்கத்தையும் நடவடிக்கைகளையும் எவ்வாறு முன்னெடுக்கவுள்ளது என்பதை இலங்கை விளக்கியது. கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக, விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக இலங்கை அறிவித்தது. இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், சமீபத்திய ஆண்டுகளில் நிறுவப்பட்ட சுயாதீன நிறுவனங்களின் முக்கிய வகிபாகத்தை, குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றன குறித்து அடிக்கோடிட்டுக் காட்டியது. எந்தவொரு ஜனநாயகத்திற்கும் தேவையான அதன் அனைத்து பன்முகத்தன்மையிலுமான முழுமையானதொரு அதிகாரம் மற்றும் நெகிழ்ச்சியான சிவில் சமூகம் ஆகியவற்றின் மதிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இந்த முயற்சிகளில் இலங்கையை ஆதரிப்பதற்கான தனது தொடர்ச்சியான தயார்நிலையை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தியது.

மரண தண்டனையின் பயன்பாடு தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மரணதண்டனை மீதான தடையை பேணி வருகின்றமை குறித்த சாதனையை வரவேற்று, மரண தண்டனையை சட்டப்பூர்வமாக ரத்துச் செய்வதனை ஊக்குவித்தது. அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கான தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது.

2020 அக்டோபர் 28ஆந் திகதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நான்காவது ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான செயற்குழுவின் நடவடிக்கைகள் குறித்து இணைந்த ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் கோவிட்-19 பிரதிபலிப்புக்கான ஆதரவைத் தவிர, 2021 மற்றும் அதற்கு அப்பால் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் நீதித் துறையை ஆதரிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்குமான முயற்சிகளை வலுப்படுத்த உதவும் 35.75 மில்லியன் டொலர் பெறுமதியான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய மூன்று மானியங்கள் குறித்து செயற்குழு நேர்மறையாக மதிப்பீடு செய்தது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் பசுமை மீட்பு, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமுதாயத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சாத்தியமான புதிய நடவடிக்கைகளைத் தயாரிப்பதில் எதிர்வரும் ஆண்டுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு உறுதியளித்தன.

காலநிலை மாற்றம் குறித்த எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை, குறிப்பாக பரிஸ் ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஆராய்ந்தன. உலகளாவிய கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதானது, பொருளாதாரங்களை நிலையான முறையில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்படல் வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற மரபுகளை நடைமுறைப்படுத்துவதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை, குறிப்பாக 2021 பெப்ரவரியில் ஐ.நா. வின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பின் மாநாட்டிற்கு சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்களின் திருத்தம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. பிளாஸ்டிக் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தத்தை நோக்கிய இலங்கையின் நேர்மறையான அணுகுமுறை மற்றும் 2030ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பை மாற்றுவதற்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் அர்ப்பணிப்பு (ஜ.நா. பல்லுயிர் உச்சி மாநாட்டில் இயற்கைக்கான அவரது உறுதிமொழி மூலம்) ஆகியவற்றுக்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைப் பாராட்டியது. 2050ஆம் ஆண்டளவில் காலநிலை நடுநிலைமை மற்றும் 1990 உடன் ஒப்பிடும்போது பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைந்தது 55% ஆகக் குறைப்பதற்கான 2030 இலக்குகள் உள்ளடங்கலாக அதன் காலநிலை சார்ந்த லட்சியத்தை மேம்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. நிலையான, குறைந்த கார்பன் மற்றும் காலநிலை நெகிழ்திறன் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக, லட்சிய நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை உறுதிப்படுத்தியது. எதிர்வரும் ஐ.நா. மாநாடுகளான ஐ.நா. தரப்புக்களின் மாநாடு (சி.ஓ.பி. 26) ஐ.நா. வின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் மாநாடு மற்றும் பல்லுயிர் தொடர்பான மாநாட்டிற்கான தரப்புக்களின் 15வது மாநாடு (சி.ஓ.பி. 15) ஆகியன லட்சிய ரீதியான, அர்த்தமுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு முக்கிய வாய்ப்புக்களை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக் கொண்டன.

2019 ஜூலை மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற தற்காலிக பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை கவனத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகம் மற்றும் இன்டர்போல் தொடர்பான ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் மீளாய்வு செய்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச மனித உரிமைத் தரங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. பயங்கரவாத எதிர்ப்பு உரையாடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.

இயக்கம் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான சிக்கல்களும் இந்த நிகழ்ச்சி நிரலில் காணப்பட்டன. ஹொரைசன் 2020 குறித்த ஒரு குறிப்பிட்ட குறிப்புடன், உயர்கல்வி மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளுக்காக, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பின் திட்டமும் கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திர டுனா ஆணைக்குழுவின் கட்டமைப்பிலான ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான சமுத்திரங்களைப் பாதுகாத்தல், கடல் உயிரினங்களின் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு ஆகிய பொதுவான குறிக்கோள்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

2021இல் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ள அடுத்த இணைந்த ஆணைக்குழுக் கூட்டத்திற்கு முன்னர் பின்தொடர்வதற்கான தொடர் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக் கொண்டன.

இந்த சந்திப்புக்கு ஐரோப்பிய வெளியக செயற்பாட்டு சேவையிலான ஆசியா மற்றும் பசிபிக் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி. பவுலா பம்பலோனி மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஏ.எம்.ஜே. சாதிக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இணைந்த மற்றும் அபிவிருத்திக்கான 1995 ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் இணைந்த ஆணைக்குழு, பரஸ்பர நலன்களின் பரந்த அளவிலான இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சிக்கல்களைக் கையாள்கின்றது. ஒப்பந்தத்தின் சரியான செயற்பாடு மற்றும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல், முன்னுரிமைகளை அமைத்தல் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன அதன் பணிகளாகும்.

இணைந்த ஆணைக்குழுவின் விதிமுறைகளின் கீழ் நிறுவப்பட்ட மூன்று செயற்குழுக்களும், 2019 ஆகஸ்ட் (வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புப் பிரச்சினைகள் தொடர்பான செயற்குழு), 2019 ஆகஸ்ட் (ஆட்சி, சட்ட விதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழு) மற்றும் 2020 அக்டோபர் 28 (அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான செயற்குழு) ஆகிய திகதிகளில் நடைபெற்ற அந்தந்த கூட்டங்களில் மீள அறிக்கையிட்டன.

கொழும்பு

2021 ஜனவரி 25

Please follow and like us:

Close