Temporary Closure of Identified Sri Lanka Missions / Posts Overseas: High Commission of Sri Lanka in Abuja/Nigeria, Consulate General of Sri Lanka in Frankfurt/Germany, Consulate General of Sri Lanka in Nicosia/Cyprus

Temporary Closure of Identified Sri Lanka Missions / Posts Overseas: High Commission of Sri Lanka in Abuja/Nigeria, Consulate General of Sri Lanka in Frankfurt/Germany, Consulate General of Sri Lanka in Nicosia/Cyprus

The Foreign Ministry, following careful consideration, has taken a decision to temporarily close three of its Missions / Posts overseas, i.e., the Sri Lanka High Commission in Abuja, Nigeria; the Consulate General of Sri Lanka in Frankfurt, Germany; and the Consulate General of Sri Lanka in Nicosia, Cyprus; with effect from 31 December 2021.  The decision, which has received the approval of the Cabinet of Ministers, is part of a restructuring process of Sri Lanka’s network of Missions and Posts overseas carried out by the Foreign Ministry.  The restructuring is undertaken with a view to conserving the country’s much needed foreign reserves and minimising expenditure related to maintenance of Sri Lanka’s Missions / Posts overseas, while ensuring the effective conduct of bilateral relations, in the backdrop of the grave economic challenges posed by the global pandemic.

Upon closure of the three identified Missions / Posts, their functions, including maintenance of bilateral political, economic, cultural relations as well as consular functions as relevant, will come under the purview of accredited, and in the case of Abuja and Nicosia, non-resident High Commissions / Embassies of Sri Lanka.  In this regard, action is in process to concurrently accredit Nigeria through Sri Lanka’s High Commission in Nairobi, Kenya; and the other countries in Africa concurrently accredited through the Sri Lankan Mission in Abuja, through Sri Lanka’s Embassy in Cairo, Egypt and High Commission in Nairobi, respectively.  The functions of Sri Lanka’s Consulate General in Frankfurt, including trade, investment and tourism promotion, as well as consular matters of Sri Lankan nationals living and working in and around Frankfurt, will come under the purview of Sri Lanka’s Embassy in Berlin, Germany.

The concurrent accreditation of Cyprus through the Sri Lanka Embassy in Rome, Italy will continue, with the latter handling Sri Lanka’s bilateral relations with Cyprus as per current practice.  The consular functions handled by the Consulate General in Nicosia will be brought under the purview of the Sri Lanka Embassy in Rome.  However, considering the significant consular and welfare requirements of the approximately 6,000-strong Sri Lankan employee community living and working in Cyprus, which need to be addressed on a regular basis, action is being taken by the Foreign Ministry to appoint forthwith a suitably qualified Honorary Consul based in Nicosia.  The Honorary Consul thus appointed will function under the direction of the Sri Lanka Embassy in Rome and the Foreign Ministry, in close coordination with the State Ministry of Foreign Employment Promotions & Market Diversification and the Sri Lanka Bureau of Foreign Employment.  The Foreign Ministry will closely monitor the transition process in Cyprus in order to address issues, if any, and provide further solutions if deemed relevant and necessary in the foreseeable future.

Notwithstanding cost-cutting measures, the Foreign Ministry continues to attach highest priority to maintenance of bilateral relations with all countries at optimum level, to meet the foreign policy objectives of the Government with special focus on economic diplomacy, which entails the promotion of exports, foreign direct investment, tourism and foreign employment generation.  The Ministry pays high attention to its mandate of safeguarding the welfare and effective functioning of Sri Lankan employees overseas with due regard to their direct and significant contribution to the nation’s economy in terms of foreign remittances.  A continuous evaluation of Mission / Post requirements vis-à-vis achievement of targets is being undertaken by the Foreign Ministry through a consultative process, both internal and external, involving senior representation of the Foreign Ministry and Sri Lanka’s Heads of Mission / Post overseas, as well as relevant line institutions of Government including the Ministries of Finance, Trade and Labour; the State Ministries of Regional Cooperation and Foreign Employment Promotion & Market Diversification; the Department of Commerce, the Sri Lanka Export Development Board, the Board of Investment of Sri Lanka and the Sri Lanka Bureau of Foreign Employment, among other agencies.  The decision to temporarily close the three identified Missions / Posts is subject to continuous review, and action will be taken in due course to consider re-instatement of relevant resident Missions / Posts as deemed necessary.

Foreign Ministry

Colombo

27 December, 2021

 ............................................

මාධ්‍ය ප්‍රකාශය

නයිජීරියාවේ අබුජා හි ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය, ජර්මනියේ ෆ්‍රෑන්ක්ෆර්ට් හි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය, සයිප්‍රස් හි නිකෝසියා හි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය යනාදී හඳුනාගත් ශ්‍රී ලංකා දූත මණ්ඩල/විදේශයන් හි දූත කාර්යාල තාවකාලිකව වසා දැමීම

නයිජීරියාවේ අබුජා හි පිහිටි ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය, ජර්මනියේ ෆ්‍රෑන්ක්ෆර්ට් හි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය සහ සයිප්‍රසයේ නිකෝසියා හි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලය යනාදී  විදේශයන් හි පිහිටි දූත මණ්ඩල/දූත කාර්යාල තුන 2021 දෙසැම්බර් 31 වැනි දින සිට බලපැවැත්වෙන පරිදි තාවකාලිකව වසා දැමීමට විදේශ අමාත්‍යංශය දැඩි සැලකිලිමත් බවින් යුක්තව තීරණය කර ඇත. අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතියට යටත් වූ මෙම තීරණය, විදේශ අමාත්‍යංශය විසින් ශ්‍රී ලංකාවේ විදේශ දූත මණ්ඩල සහ දූත කාර්යාල ජාලය ප්‍රතිව්‍යුහගත කිරීම සඳහා ක්‍රියාත්මක කරන ලද ක්‍රියාවලියක කොටසකි. ගෝලීය වසංගතය හේතුවෙන් එල්ල වී ඇති බරපතල ආර්ථික අභියෝග හමුවේ ද්විපාර්ශ්වික සබඳතා ඵලදායී ලෙස පවත්වාගෙන යාම තහවුරු කරමින්, රටට අවශ්‍ය විදේශ සංචිත සුරක්ෂිත කිරීම සහ විදේශයන් හි ශ්‍රී ලංකා දූත මණ්ඩල/දූත කාර්යාල නඩත්තු කිරීම සඳහා වැය කෙරෙන වියදම් අවම කර ගැනීමේ අරමුණින් මෙම ප්‍රතිව්‍යුහගත කිරීම සිදු කෙරේ.

මෙලෙස හඳුනාගත් දූත මණ්ඩල / දූත කාර්යාල තුන වසා දැමීමෙන් අනතුරුව, එහි ද්විපාර්ශ්වික දේශපාලනික, ආර්ථික සහ සංස්කෘතික සබඳතා මෙන්ම කොන්සියුලර් කාර්යයන් අදාළ පරිදි පවත්වාගෙන යාම ඇතුළුව ඒවායේ අනෙකුත් කාර්යයන් අක්ත ගන්වන ලද රටවල විෂය පථයට යටත් වන අතර, අබුජා සහ නිකෝසියා  හි දූත කාර්යාල නේවාසික නොවන මහ කොමසාරිස් කාර්යාල / ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලවල විෂය පථයට ඇතුළත් කෙරේ. මේ අනුව, කෙන්යාවේ නයිරෝබි හි ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය හරහා නයිජීරියාව සමගාමීව අක්ත ගැන්වීමටත්, ඊජිප්තුවේ කයිරෝ හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සහ නයිරෝබි හි මහ කොමසාරිස් කාර්යාලය මගින් අබුජා හි ශ්‍රී ලංකා දූත මණ්ඩලය හරහා අප්‍රිකාව තුළ සමගාමීව අක්ත ගන්වා ඇති අනෙකුත් රටවල් සමගාමීව අක්ත ගැන්වීමටත් මේ වන විට ක්‍රියාමාර්ග ගනිමින් සිටියි. වෙළඳාම, ආයෝජන සහ සංචාරක ව්‍යාපාරය ප්‍රවර්ධනය කිරීම ඇතුළුව ෆ්‍රෑන්ක්ෆර්ට් හි ශ්‍රී ලංකා කොන්සල් ජනරාල් කාර්යාලයේ කාර්යයන් මෙන්ම, ෆ්‍රෑන්ක්ෆර්ට් නුවර සහ ඒ අවට ජීවත්වන සහ සේවය කරන ශ්‍රී ලාංකිකයන්ගේ කොන්සියුලර් කටයුතු ජර්මනියේ බර්ලින් හි පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ විෂය පථයට ඇතුළත් වනු ඇත.

ඉතාලියේ රෝමයේ පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය හරහා සයිප්‍රසය සමගාමීව අක්ත ගැන්වීම අඛණ්ඩව සිදු කෙරෙන අතර, සයිප්‍රසය සමඟ ශ්‍රී ලංකාව පවත්නා ද්විපාර්ශ්වික සබඳතා මේ වන විට අනුගමනය කරන ක්‍රමවේදයට අනුව ඉතාලිය විසින් මෙහෙයවනු ලැබේ. නිකෝසියා හි කොන්සල් ජනරාල් කාර්යාලය විසින් මෙහෙයවනු ලබන කොන්සියුලර් කටයුතු රෝමයේ පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ විෂය පථයට ඇතුළත් කෙරේ. කෙසේ වුවද, සයිප්‍රසයේ වෙසෙන සහ එහි සේවය කරන ආසන්න වශයෙන් 6,000 ක් පමණ වන ශ්‍රී ලාංකික සේවක ප්‍රජාව යොමු කරන, නිතිපතා අවධානය යොමු කළ යුතු කොන්සියුලර් කටයුතු  සහ සුබසාධන අවශ්‍යතා සැලකිල්ලට ගෙන, නිකෝසියා කේන්ද්‍ර කර ගත් සුදුසුකම් සහිත නිර්වේතනික කොන්සල්වරයකු පත් කිරීම සඳහා මේ වන විට ක්‍රියාමාර්ග ගනිමින් සිටියි. මෙලෙස පත් කරනු ලබන නිර්වේතනික කොන්සල්වරයා රෝමයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ සහ විදේශ අමාත්‍යංශයේ මඟපෙන්වීම යටතේ, විදේශ රැකියා ප්‍රවර්ධන සහ වෙළඳපොළ විවිධාංගීකරණය පිළිබඳ රාජ්‍ය අමාත්‍යංශය  සහ ශ්‍රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යංශය  සමඟ සමීප සම්බන්ධීකරණයෙන් කටයුතු  කරනු ඇත. ගැටළු නිරාකරණය කිරීම සඳහා විදේශ අමාත්‍යංශය සයිප්‍රසයේ මෙම සංක්‍රාන්ති ක්‍රියාවලිය සමීපව අධීක්ෂණය කරන අතර, අදාළත්වය සහ අවශ්‍යතාව අනුව ඒවාට විසඳුම් ලබා දීමට නුදුරු අනාගතයේ දී කටයුතු කරනු ඇත.

වියදම් කපා හැරීමේ ක්‍රියාමාර්ග ද නොතකා අපනයන ප්‍රවර්ධනය, සෘජු ආයෝජන, සංචාරක ව්‍යාපාරය සහ විදේශ රැකියා උත්පාදනය යනාදිය ඇතුළත් ආර්ථික රාජ්‍ය තාන්ත්‍රිකභාවය කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කරමින්, රජයේ විදේශ ප්‍රතිපත්ති අරමුණු සපුරාලීම සඳහා ප්‍රශස්ත මට්ටමින් සියලුම රටවල් සමඟ ද්විපාර්ශ්වික සබඳතා පවත්වා ගැනීමට විදේශ අමාත්‍යංශය ඉහළම ප්‍රමුඛතාවයක් ලබා දෙයි. විදේශයන්හි සිටින ශ්‍රී ලාංකික සේවක සේවිකාවන් විදේශ ප්‍රේෂණ සම්බන්ධයෙන් සෘජුව සහ සැලකිය යුතු දායකත්වයක් ලබා දෙන බැවින්, ඔවුන්ගේ සුබසාධනය සහ ඵලදායී ක්‍රියාකාරීත්වය සුරක්ෂිත කිරීමේ වගකීම පිළිබඳව අමාත්‍යංශයේ ඉහළ අවධානය යොමු වී ඇත. විදේශ අමාත්‍යංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සහ ශ්‍රී ලංකා දූත මණ්ඩල/ විදේශයන් හි දූත කාර්යාලවල ප්‍රධානීන් මෙන්ම මුදල්, වෙළඳ සහ කම්කරු අමාත්‍යංශය, කලාපීය සහයෝගිතා රාජ්‍ය අමාත්‍යංශය සහ විදේශ රැකියා ප්‍රවර්ධන සහ වෙළඳපොළ විවිධාංගීකරණය පිළිබඳ රාජ්‍ය අමාත්‍යංශය, වාණිජ දෙපාර්තමේන්තුව, ශ්‍රී ලංකා අපනයන සංවර්ධන මණ්ඩලය, ශ්‍රී ලංකා ආයෝජන මණ්ඩලය සහ ශ්‍රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යංශය ආදී අනෙකුත් රේඛීය ආයතන සම්බන්ධ කරගනිමින් අභ්‍යන්තර හා බාහිර යන දෙඅංශයෙන්ම උපදේශන ක්‍රියාවලියක් පැවැත්වීම තුළින් විදේශ අමාත්‍යංශයේ ඉලක්ක සාක්ෂාත් කර ගැනීම සඳහා  දූත මණ්ඩල/දූත කාර්යාලවල අවශ්‍යතා  පිළිබඳ අඛණ්ඩ ඇගයීමක් සිදු කරනු ලැබේ.

මෙලෙස හඳුනාගත් දූත මණ්ඩල / දූත කාර්යාල තුන තාවකාලිකව වසා දැමීමේ තීරණය අඛණ්ඩ සමාලෝචනයට යටත් වන අතර, අවශ්‍යතාව අනුව අදාළ නේවාසික දූත මණ්ඩල / දූත කාර්යාල නැවත ස්ථාපිත කිරීම සලකා බැලීමට ඉදිරියේ දී කටයුතු කරනු ලැබේ.

විදේශ අමාත්‍යංශය

කොළඹ

2021දෙසැම්බර් 27 වැනි දින

.........................................

ஊடக அறிக்கை

 வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் / பணிமனைகள் தற்காலிகமாக மூடல்:
அபுஜா / நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
பிராங்பேர்ட் / ஜேர்மனியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்,
நிக்கோசியா / சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்

நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும். உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள்/ பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக்  குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள்  மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகராலயங்கள்/ தூதரகங்களால் மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.

இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும். நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும்  மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.

செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வெளிநாட்டு அமைச்சு அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உகந்த அளவில் பராமரிக்கவும், ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருளாதார இராஜதந்திரத்தில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றவும் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான அவர்களது நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலன் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது. இலக்குகளை அடைவதற்கான தூதரகங்கள் / பணிமனைகளின் பிந்தைய தேவைகளின் தொடர்ச்சியான மதிப்பீடனது, வெளிநாட்டு அமைச்சினால் வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரக/பணிமனைத் தலைவர்கள், நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சுக்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை  உள்ளடக்கிய உள்ளக மற்றும் வெளியக ஆலோசனை செயன்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close