'ஈழம்' என்ற குறிப்புடன் கூடிய லண்டன் கார்டியன் பத்திரிகையின் சுற்றுலா வினா விடைப் போட்டியை திரும்பப் பெறுமாறு இலங்கை கோரிக்கை

‘ஈழம்’ என்ற குறிப்புடன் கூடிய லண்டன் கார்டியன் பத்திரிகையின் சுற்றுலா வினா விடைப் போட்டியை திரும்பப் பெறுமாறு இலங்கை கோரிக்கை

ஐக்கிய இராச்சியத்தில் 2020 மே 15 ஆந் திகதி கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா விடைப் போட்டி தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்துகின்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது வினா, 'ஈழம் என்பது எந்தப் பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீகப் பெயர்?' எனும் வகையில் வினவுவதாக அமைந்துள்ளது.

இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கம் தோன்றுகின்றது.

இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

16 மே 2020

0001 (3) 0002
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close