விரிவான அணு பரிசோதனைத் தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை எளிதாக்குவது குறித்த அத்தியாயம் XIV மாநாட்டின் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை, நியூயோர்க், 2023 செப்டம்பர் 21

விரிவான அணு பரிசோதனைத் தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை எளிதாக்குவது குறித்த அத்தியாயம் XIV மாநாட்டின் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை, நியூயோர்க், 2023 செப்டம்பர் 21

அனைவருக்கும் இனிய மதிய வந்தனங்கள்,

இந்த ஆண்டு ஜூலையில் ஒப்பந்தத்தை அங்கீகரித்த ஒரு நாட்டின் பிரதிநிதியாக விரிவான அணுசக்தி பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தின் அத்தியாயம் XIV மாநாட்டிற்கு முன்னதாக இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இலங்கையின் சமீபத்திய ஒப்பந்தம் அணுவாயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை பற்றிய எமது வலுவான மற்றும் நிலையான கொள்கைக்கு இணங்க உள்ளது. 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இந்த ஒப்பந்தம் கையொப்பமிடத் திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, விரிவான அணுசக்தி பரிசோதனைத் தடை ஒப்பந்தத்தில் முதலாவதாக கைச்சாத்திட்ட நாடுகளில் இலங்கையும் இருந்ததுடன், 1996 ஆம் ஆண்டில் விரிவான அணு பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்புடனான  வசதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பதின்மூன்றாவது நாடு ஆகும், அதன் படி கண்டி பல்லேகலேயில் துணை நில அதிர்வு நிலையம் நிறுவப்பட்டது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை ஊக்குவிப்பதில், நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஃப்லொய்ட் மற்றும் விரிவான அணுசக்தி பரிசோதனை தடை ஒப்பந்த அமைப்புக் குழுவின் அயராத முயற்சிகளை நான் ஒப்புக்கொள்கிறேன், உடன்படிக்கைக்கான அரச கட்சிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஒரு நிலையான அதிகரிப்பே இதற்கு சாட்சியாகும்.

1996 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து, கள ஆய்வுப் பிரிவுடனான வழக்கமான தொடர்பு உள்ளடங்கலாக, விரிவான அணு பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் பணியை நாங்கள் தீவிரமாக ஆதரித்துள்ளோம். 2025 ஆம் ஆண்டில் அடுத்த ஒருங்கிணைந்த களப் பயிற்சியை நடாத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைவதுடன், இது உலகெங்கிலும் உள்ள 180 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும். இந்தப் பயிற்சியானது விரிவான அணு பரிசோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் கள ஆய்வுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், முன்னேற்ற வாய்ப்புக்களை மேலும் அடையாளம் காண்பதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.

இந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 26வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்பதால், அது நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலம் தாமதமாகிவிட்ட போதிலும், இதுவரை ஒப்பந்த ஆட்சியின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நாம் ஒப்புக்கொள்கின்றோம். அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பரவலாக்கத்தின் தடைக்கான உலகளாவிய ஆட்சியின் முக்கிய மூலக்கல்லாக இந்த ஒப்பந்தம் உள்ளது. இது அணுசக்தி பரிசோதனைக்கு எதிரான வலுவான கூட்டு நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையை நிரூபிப்பதுடன், இதனால் பனிப்போர் காலத்தின் ஆபத்தான அணு ஆயுதப் போட்டியை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது. மேலும், ஒப்பந்த சரிபார்ப்புக்கான அமைப்பானது, சிறப்பான சர்வதேச கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஒரு சர்வதேசத் தரவு நிலையத்தை நிறுவியுள்ளது. சரிபார்ப்பு அமைப்பு மேலதிகமான சிவில் மற்றும் விஞ்ஞானப் பயன்பாடுகளைக் கொண்டிருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கங்களுக்கான உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இந்த ஒப்பந்தத்தை இலங்கை அணுசக்தி பரவலுக்கு எதிரான எமது சிறந்த உத்தரவாதமாகவும், அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக எமது  கூட்டுப் பாதுகாப்பிற்காகவும் கருதுகின்றது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களின் தற்போதைய யதார்த்தம் மற்றும் அணு ஆயுதப் பரவல் அல்லாத மீளாய்வு மாநாட்டில் கணிசமான முடிவை எடுக்கத் தவறியதால், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு அங்கீகாரம் தேவைப்படும் அரசுகளுக்கான அழைப்பில் நாங்கள் இணைகின்றோம்.

அணுஆயுதப் பரவல் தடை மற்றும் நிராயுதபாணியாக்கத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பு உறுதியானதாக இருக்கும் அதே வேள, இந்த நோக்கத்தை அடைவதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

கடந்த செவ்வாய்க் கிழமை, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைவதற்கான ஆவணத்தை சமர்ப்பித்தமைக்காக மகிழ்ச்சி அடைகின்றேன்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close