ப்ளூ பிளானட் நிதியத்துடன் இலங்கை ஒத்துழைப்பு

 ப்ளூ பிளானட் நிதியத்துடன் இலங்கை ஒத்துழைப்பு

ஐக்கிய இராச்சியத்தின் 500 மில்லியன் பவுன் புளூ பிளானட் நிதியம் கடல் சூழலைப் பாதுகாக்கவும், வறுமையைக் குறைக்கவும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, வெப்பமயமாதல் கடல் வெப்பநிலை மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து கடலைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி வரவு செலவுத் திட்டத்தால் நிதியளிக்கப்பட்டதுடன், ப்ளூ பிளானட் நிதியானது கடல்சார் பிரச்சினைகளில் ஐக்கிய இராச்சியத்தின் உலகளாவிய தலைமையின் ஒரு முக்கிய பகுதியாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் உலக சமுத்திரத்தில் குறைந்தது 30% பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய இராச்சியத்தின் அழைப்பும், ஐக்கிய இராச்சியம் மற்றும் வனுவாட் தலைமையிலான பொதுநலவாய தூய சமுத்திர ஒருங்கிணைப்பின் மூலம் கடலில் நுழையும் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிறுத்துவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் தற்போதைய உறுதிப்பாடுகளும் இதில் அடங்கும்.

நிதியத்தின் திட்டங்களில் ஒன்றான புதிதாக வடிவமைக்கப்பட்ட இருதரப்பு தொழில்நுட்ப உதவித் திட்டம், கடல்சார் நாடுகளுக்கான ஒரு கூட்டுத் திட்டம் ஆகும். கடல் மாசுபாடு, பல்லுயிர் இழப்பு மற்றும் நிலையான கடல் உணவுகளை ஆதரித்தல் ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்கள் முழுவதும் கடல் விஞ்ஞான தொழில்நுட்ப உதவியை வழங்குவதை கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கடல்சார் விஞ்ஞான நிபுணத்துவத்தை வலுப்படுத்துதல், விஞ்ஞான அடிப்படையிலான கொள்கை மற்றும் முகாமைத்துவக் கருவிகளை உருவாக்குதல் மற்றும் கடலோர சமூகங்களுக்கு அறிவூட்டுவதற்கு நாடுகளை ஆதரிக்கின்றது. கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டம் ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களைச் சார்ந்திருக்கும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரங்களில் உறுதியான மற்றும் நேர்மறையான தாக்கங்களை வழங்குவதை இறுதி நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின் தற்போதைய பங்காளிகள் பெலிஸ், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவுகள் மற்றும் பசிபிக் ஆகும்.

இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் இடையில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல முயற்சிகளில் நெருக்கமான மற்றும் செயலூக்கமான ஒத்துழைப்பின் விளைவாக, புளூ பிளானட் நிதியம் - கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் ஆதரவைப் பெற இலங்கை அடையாளம் காணப்பட்டது. இலங்கையுடனான கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் திணைக்களம், சுற்றுச்சூழல், மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு விஞ்ஞான நிலையம், கூட்டுத் தேச பாதுகாப்புக் குழு மற்றும் கடல் முகாமைத்துவ அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று 2022 மார்ச் 14 முதல் 18 வரை இலங்கைக்கு விஜயம் செய்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகள் உள்ளூர் பங்குதாரர்களுடன் பல சந்திப்புக்கள், கள விஜயங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இந்த வியத்திற்கு முன்னதாக 2022 பிப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரை மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு விஞ்ஞானக் குழுவின் தொழில்நுட்ப விஜயம் அமைந்திருந்தது.

புளூ பிளானட் நிதியம் - கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின் பல்லுயிர் பெருக்க பங்குதாரர் அமர்வு மார்ச் 14ஆந் திகதி சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது. இந்த அமர்வு, பல்லுயிர் கூறுகளை முன்னிலைப்படுத்தி, டெ/ப்ரா தலைமையிலான ப்ளூ பிளானட் நிதியத்தின் விஜயத்தின் நோக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

முதல் அமர்வின் போது, இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்திற்கான பிரதி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் லிசா வன்ட்ஸ்டோல், இதுவரையில் இருந்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்கால கூட்டாண்மைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அதே வேளை, யு.என்.எப்.சி.சி. சி.ஓ.பி.-26 இல் இலங்கை அரசாங்கத்தின் பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்களைப் பாராட்டினார். 'முன்னோக்கி நகரும் ஐக்கிய இராச்சியம், இந்த இலக்குகளை அடைய இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும், சுற்றுச்சூழல் ஈடுபாடுகளில் இருந்து வெளியேறும் தளத்தை உருவாக்குவதற்கும் ஆவலுடன் உள்ளது' என அவர் குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டில் கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான உதவியை வழங்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் பொதுநலவாய குப்பைத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் பவுன்;களைச் செலவிட்டுள்ளது. எம்.ஈ.பி.ஏ, நாரா, ஐ.டி.ஐ. மற்றும் சி.ஈ.ஏ. க்கு மைக்ரோ பிளாஸ்டிக்குகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஆய்வக வசதிகளை சி.ஓ.பி. யின் மூலம் வழங்கிய உதவி, உள்ளூர் மொழிகளில் ஆரம்ப மற்றும் உயர் கல்விப் பாடசாலைகளுக்கான கல்விப் பொதிகளை உருவாக்குதல், உள்ளூர் மொழிகளில் முக்கிய மற்றும் சமூக ஊடகங்களுக்கான ஊடகப் பொதிகளை உருவாக்குதல், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, மீன்பிடி சாதனங்கள் மற்றும் துறைமுகங்களில் குவிக்கப்பட்ட கழிவுகளை மதிப்பீடு செய்தல், ஆறுகளுக்கு குப்பை வலைகளை வழங்குதல் போன்றவை இத் திட்டத்தில் உள்ளடங்கும். ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழுவானது, மக்கள், விஞ்ஞானம் மற்றும் கிரகம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை மாற்றுவதற்கும் மாற்றியமைக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்தது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, கடல்சார் இடஞ்சார்ந்த திட்டமிடலுக்கான முழுமையான திட்டம் இல்லாமை, ஈ.ஈ.இசட். க்கான அடையாளம் மற்றும் பதவி, 30 x 30 க்கான தெளிவான பாதை இல்லாமை மற்றும் தேசிய பல்லுயிர் மூலோபாய செயற்றிட்டம் / வரைவு தேசிய சுற்றுச்சூழல் செயற்றிட்டத்தில் கடல் துறை தொடர்பான உறுதிப்பாடுகள் போன்ற முக்கிய முகாமைத்துவச் சிக்கல்களை அவர் எடுத்துரைத்தார். கடலோர இடஞ்சார்ந்த திட்டமிடல் இன்னும் மிகவும் அடிப்படையானதாவதுடன், தற்போதுள்ள எம்.பி.ஏ. க்களுக்குள் பல பயன்பாட்டு பல் பங்குதாரர் இயல்பு மற்றும் கடலோர வளங்களைப் பயன்படுத்துவதற்கு வசதிகளின்மை போன்ற சமுத்திர நாடு கூட்டுத் திட்ட மானியம் மற்றும் கடல்சார் பல்லுயிர் மற்றும் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பிரதேச களத்தில் முன்னுரிமைகள் குறித்து விளக்கினார். தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் அடிப்படையில், தேசிய சுற்றுச்சூழல் செயற்றிட்டம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது என அவர் மேலும் விளக்கினார். தேசிய சுற்றுச்சூழல் செயற்றிட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட முக்கிய கருப்பொருள் பகுதிகளில் கடலோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு ஒன்றாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடலோர மற்றும் கடல் மீன்பிடி, சுற்றுலா, தொழில், கடல் போக்குவரத்து (துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து), கடலோர மற்றும் கடல் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்புடைய முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சில இதில் உள்ளடங்கும். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும், சுற்றுலா மற்றும் மீன்வளம் ஆகியவை கடற்கரையின் இயற்கை வளங்களை அதிகம் சார்ந்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, இந்த இரண்டு துறைகளும் இணைந்து இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தில் 10 சதவீதத்தை உருவாக்குவதுடன், 6.7% வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளன.

இரண்டாவது கூட்டம், 'நிலையான கடல் உணவு ஏன் முக்கியமானது' மற்றும் அதிகப்படியான சுரண்டல், மாசுபாடு, பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் கடல் தீவிரமான மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்ற வேளையில், இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எவ்வாறு கடலைச் சார்ந்திருக்கின்றன என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

புளூ பிளானட் நிதியமானது இலங்கையில் கடல் உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதுடன், இது ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புக்களுக்கு ஆதரவளித்து, கடல்சார் இருப்புக்களை அதிகமாகச் சுரண்டாத, நிலையான அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் சமமான வாழ்வாதாரங்களை வழங்கி, காலநிலை மற்றும் சமூகப் பொருளாதார அதிர்ச்சிகளுக்குப் பின்னடைவை மேம்படுத்தும். கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டங்களில் பாலினம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், காலநிலை மாற்றம், பொருளாதார அதிர்ச்சிகள் போன்ற குறுக்கு வெட்டுக் கருப்பொருள்களும் இணைக்கப்படும்.

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வன்ஸ்டோல், ஐக்கிய இராச்சியமானது இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதாகவும், இந்த முயற்சியில் கூட்டுப் பணி மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார். கிளாஸ்கோ காலநிலை உடன்படிக்கையின் உறுதிப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆனால் இப்போது முக்கியமான பகுதி நடவடிக்கையை ஆரம்பிக்கின்றது என பிரதி உயர்ஸ்தானிகர் மேலும் வலியுறுத்தினார்.

ஐக்கிய இராச்சிய அரசாங்கம், புளூ பிளானட் நிதியம் மற்றும் ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புக்கு அலங்கார மீன், நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, பல நாள் மீன்பிடி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நன்றி தெரிவித்தார். இலங்கையின் 80% க்கும் அதிகமான மீன் வளம் குறைந்துவிட்டதாகவும், சுற்றுலாத்துறையிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் (40%), தொழில்நுட்ப ஆலோசனைகள் போதிய அளவில் கிடைக்காமை, வலுவான சட்டக் கட்டமைப்பின் தேவை மற்றும் கடல் வளங்களை கண்காணித்தல் / நிர்வகித்தல் ஆகியன அவர் வலியுறுத்தும் நான்கு முக்கிய பகுதிகளாகும். மீன்வளர்ப்பு மற்றும் நிலையான மீன்பிடித்தலை அபிவிருத்தி செய்வதற்கு உதவிகளை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்தார். புளூ பிளானட் நிதியம் - கடல்சார் நாடுகளின் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் ஒத்துழைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இராஜாங்க அமைச்சு முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ரெப் அப் அமர்வின் போது, தற்போதுள்ள கடல் மாசுபாடு, கடல் பல்லுயிர் மற்றும் நிலையான கடல் உணவு தொடர்பான செயற்பாடுகளை தொடர்ந்து உருவாக்குவதற்கு ஐக்கிய இராச்சியக் குழு முன்வந்தது. கடல் இடஞ்சார்ந்த திட்டமிடலுக்கான உதவி, கடல்சார் இயற்கை மூலதனத்தை மதிப்பீடு செய்தல், இலங்கை ஏற்கனவே ஒரு பகுதியாக இருக்கும் 30 x 30 முன்முயற்சிக்கு இணங்க கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை திறம்பட நிர்வகிப்பதற்கான ஆதரவு, இலங்கையின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஆதரவு, கடல்சார் இடர் தயார்நிலைக்கு இலங்கைக்கு உதவுதல், நிலையான கடல் உணவு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவதறடகான ஆதரவு மற்றும் தேசிய கடற்பகுதியில் ஐ.யு.யு. மீன்பிடித்தலை குறைப்பதற்கான ஆதரவு ஆகியன ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளின் ஏனைய முக்கிய சிறப்பம்சங்களாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஏப்ரல் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close