பாத்ஃபைண்டர் இந்து சமுத்திரப் பாதுகாப்பு மாநாடு 2020 இல் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் நிகழ்த்திய அடிப்படைக் குறிப்பு உரை - 2020 நவம்பர் 10

பாத்ஃபைண்டர் இந்து சமுத்திரப் பாதுகாப்பு மாநாடு 2020 இல் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் நிகழ்த்திய அடிப்படைக் குறிப்பு உரை – 2020 நவம்பர் 10

காலை வந்தனங்கள்! மதிய வந்தனங்கள்!

மேன்மைதங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே,

இதுபோன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் நிறைந்ததொரு சிறந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்றமை எனது கௌரவமாகும். உங்களில் சிலரை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கும் எனினும், கோவிட்-19 தொற்றுநோய் ஏனையவர்களைச் சந்திப்பதை விட்டும் தடுத்துள்ளது. கோவிட்-19 எமக்குப் பின்னால் இருப்பதாக நம்புவோம், நாம் அனைவரும் மீண்டும் கடல் கடந்து சந்தித்துக் கொள்வோம்.

நாம் அனைவரும் சிரேஷ்ட உறுப்பினர்களாக இருக்கும் சிந்தனைக் குழுவான பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தூதுவர் சிவசங்கர் மேனன் மற்றும் தூதுவர் பெர்னார்ட் கூனெடிலேக் ஆகியோருடன் இங்கு இருப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன். நான் நபர்களை பெயரிடத் தொடங்கினால், அதற்காக மட்டும் எனக்கு ஒதுக்கப்பட்ட பதினைந்து நிமிடங்களும் தேவைப்படும், எனவே உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக குறிப்பிடாமைக்காக என்னை மன்னிக்கவும். ஆனால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். வங்காள விரிகுடா - திருகோணமலை ஆலோசனை I மற்றும் II உடன் 2017 ஆம் ஆண்டு தொடங்கிய எனது கனவின் ஒரு பகுதியாக இது இருந்ததால் நானும் மகிழ்ச்சியடைகின்றேன். அந்தத் திட்டத்தில் நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், இருப்பினும் எனது வாழ்க்கை பின்னர் ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுத்ததுடன், நான் வெளிநாட்டு அமைச்சில் பணியாற்றுகின்றேன். எனவே பிரதான உரையை வழங்குவதற்காக என்னை அழைத்தபோது, அதனை பொறுப்புடன் மேற்கொள்வேன் எனத் தெரிவித்தேன்.

எனவே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, மக்களை நெருக்கமாகக் கொண்டுவருவதன் மூலமும், கலாச்சாரங்கள், வேறுபாடுகள் சுருங்குவதாலும், உலகப் பொருளாதாரத்தை ஆதரிப்பதன் மூலமும் உலகின் தலைவிதியை வரையறுப்பதற்காக கடல் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடலோர வர்த்தகம் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஒரு இயந்திரமாக இருந்து வருகின்றது. கடல்சார் இணைப்பு என்பது பல நாடுகளின் கணிசமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, உலகின் 3வது பெரிய சமுத்திரமாக விளங்கும் இந்து சமுத்திரம், ஆபிரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து அவுஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை வரை சுமார் 70 மில்லியன் சதுர கி.மீ. தூரமுடையதாக இருப்பதுடன், மிக முக்கியமாக, உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியான கிட்டத்தட்ட 2.7 பில்லியன் மக்கள் வசிக்கும் பிராந்தியமாகவும் உள்ளது.

ஆசியாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவமானது மறுக்க முடியாதது. ஆசியாவின் எழுச்சியுடன், அரசியல் மற்றும் பொருளாதார சமநிலை பெருகிய முறையில் இந்து மற்றும் பசிபிக் சமுத்திரங்களை நோக்கி நகர்கின்றது. இந்தப் பகுதி 21ஆம் நூற்றாண்டின் சர்வதேச ஒழுங்கின் முக்கிய அம்சமாக மாறி வருகின்றது. இந்து சமுத்திரம் தொடர்பான அண்மைய மூலோபாயங்களில் ஒன்று, நான் பார்த்தபடி, இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் - ஜேர்மனி - ஐரோப்பா - ஆசியா: 21 ஆம் நூற்றாண்டை ஒன்றாக வடிவமைத்தலுடன் ஜேர்மனியிலிருந்து வந்தது. அந்த ஆவணத்திலிருந்து '... எமது சமூகத்தின் செழிப்பு கப்பல் சுதந்திரத்தைப் பொறுத்தது' என்ற ஒரு வரியை நான் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். இது உலகின் பல நாடுகளுக்கும், குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பல மொழிகளுக்கும் பொருந்தும். கொள்கை வழிகாட்டுதல்கள் இந்து மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் செயற்படும் வளர்ச்சி சந்தைகளில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் அல்லது மதிப்புச் சங்கிலிகள் இந்து சமுத்திரத்தில் பின்னிப் பிணைந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். வரலாற்று ரீதியாக, இந்து சமுத்திர வர்த்தகம், கலாச்சாரம், மதம் ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதுடன், இந்து சமுத்திரம் 21ஆம் நூற்றாண்டின் முக்கிய உலகளாவிய கடல்சார் பொதுக்களில் ஒன்றாகும். எனவே அனைவரும் உள்ளே வந்து இந்து சமுத்திரத்தைப் பயன்படுத்துவதானது சுதந்திரமாக இருக்க வேண்டும்.

உலகக் கொள்கலன்களில் 50%, உலக ஆற்றலில் 72% மற்றும் உலகின் மொத்த சரக்குகளில் 35% ஆகியவை இந்து சமுத்திரத்தின் நீருக்கு குறுக்கே கொண்டு செல்லப்படுகின்றன எனும் சமன்பாடுகளை நாம் அறிவோம் என்பதுடன், இதன் விளைவாக கப்பலின் பாதுகாப்பு சமாதானம் மற்றும் மோதல் காலங்களில் ஒரு முக்கிய கவலையாக இருக்கும். சோமாலிய கடற்கொள்ளையர்களின் ஒரு சிறிய குழு இந்து சமுத்திர வணிகக் கப்பலை பணம் பறிக்கும் பொருட்டு கைப்பற்றி வைத்திருக்க முயற்சித்மையை நாம் அனைவரும் அறிவோம். இந்து சமுத்திரத்தில் கடல்சார் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக அமைவதுடன், ஏறக்குறைய மூன்று தசாப்த கால இடைவெளியின் பின்னர், இந்து சமுத்திர வலயம் மீண்டும் இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறுகளுடன் குறிப்பிடத்தக்க சக்திப் போட்டியின் மற்றொரு கட்டத்திற்குள் நுழைகின்றது என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

எனவே, கேள்வி என்னவென்றால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கரையோர நாடுகளான எமக்கு என்ன தேவை? சூப்பர் சக்திகளால் ஒரு மோதலுக்குள் இழுக்கப்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோமா? இது எமது ஆர்வத்தில் உள்ளதா? இது எமது தயாரிப்பில் உள்ளதா? எம் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டாமா? 2030க்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டாமா?

பதில்கள் தேவைப்படும் கேள்விகள் இவையாகும். ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், இது சம்பந்தப்பட்ட உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கு 22.6 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதுடன், இது 2030 வரை இயங்குகின்றது. எமது இருப்புக்களில் அந்தந்து கொள்வதை நாம் தவறவிடுவோம்.

எனவே கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இந்தப் பணம் எங்கிருந்து வரும் என்ற கேள்வியை நான் எழுப்பலாமா? இது நன்கொடையாளர்கள், இருதரப்பு - பல்தரப்பு கடன் வழங்குநர்கள், வங்கிகளிடமிருந்து வர முடியுமா அல்லது பொருளாதார ரீதியாக சாத்தியமான அந்நிய நேரடி முதலீடாக இருக்க வேண்டுமா?

கோவிட்-19 இப்போது எமக்கு ஒரு பயத்தை அளித்துள்ளதுடன், முன்னர் கேள்விப்படாத சவால்களை அது எம்மீது கொண்டு வந்துள்ளது. அது எமது அடித்தளத்தை உலுக்கிய அதே வேளை, உலகில் உறுதியாக இருந்த விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. நாம் ஆபத்தான மந்தநிலைக்கு செல்கின்றோமா? பொருளாதாரங்கள் மந்தமடைவதை நாங்கள் கண்டிருக்கின்றோம். சமூகப் பொருளாதாரப் பதற்றம் அதிகமாக உள்ளதுடன், மனித உணர்ச்சிகளை பயம் மற்றும் பாதுகாப்பின்மைக்கு இட்டுச் சென்றுள்ளன. கோவிட்-19 மூலம் தேசியவாதத்தின் தீவிர வடிவங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நாங்கள் ஏற்கனவே குறுக்கீடுகளை அனுபவித்து வருகின்றோம். சுகாதார இராஜதந்திரத்துடன் சேர்ந்து பல்தரப்பு உதவிகள் முன்னணியில் வந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் உணவு மற்றும் மருந்துப் பாதுகாப்பு ஆகியன பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது. எதிர்காலத்தில் நாடுகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பைக் காட்டிலும் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்தலாம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல், புவிசார் மூலோபாய மற்றும் புவிசார் பொருளாதாரக் காரணங்கள் மற்றும் நிலைமைகள் பற்றிய சில கருத்துக்களையும் சேர்க்கின்றேன். நான் முன்பு குறிப்பிட்டது போல, 21ஆம் நூற்றாண்டில் இந்து மற்றும் பசிபிக் சமுத்திரங்கள் முக்கிய சமுத்திரங்களாக மாறி வருவதைக் காண்கின்றோம். இந்து சமுத்திரத்தைப் பார்க்கும்போது, நான் குறிப்பிட விரும்பும் இரண்டு முக்கிய மூலோபாயங்கள் உள்ளன. ஒன்று இந்தோ - பசிபிக் மூலோபாயம். இந்தோ - பசிபிக் மூலோபாயத்தைப் பற்றி நாம் பேசும்போது, இந்து மற்றும் பசிபிக் சமுத்திரங்களுக்கான 'சுதந்திர மற்றும் திறந்த சமுத்திர வர்த்தகம்' அதன் அடிப்படையாக அமையும்.

நான் குறிப்பிட விரும்பும் மற்ற மூலோபாயம் ஒரு வழி - ஒரு பாதை முன்முயற்சியாகும். ஒரு வழி - ஒரு பாதை முன்முயற்சியானது, இந்து சமுத்திரம் முழுவதும் கடல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கடல்சார் வர்த்தகம் தொடர்பான மெகா திட்டங்களில் கவனம் செலுத்துகின்றது. இலங்கை போன்ற ஒரு கரையோர நாட்டைக் கேளுங்கள், இந்து சமுத்திரத்தில் இருந்து எங்களுக்கு என்ன வேண்டும் என நான் கூறுவேன். நான் இந்து சமுத்திரத்தில் உள்ள பல கரையோர நாடுகளின் நோக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன் என நம்புகின்றேன், கடல்சார் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கும், கடல்சார் உட்கட்டமைப்பை வளர்ப்பதற்கும் இந்து சமுத்திரத்தை சுதந்திரமானதாகவும், விதிகளை அடிப்படையாகக் கொண்ட கடல்சார் ஒழுங்கை உடையதாக காணவும் விரும்புகின்றோம். எமது பிராந்தியத்தில் இதைத்தான் நாங்கள் விரும்புகின்றோம்.

கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, துரதிர்ஷ்டவசமாக, இந்து சமுத்திரப் பகுதியானது மூலோபாயப் போட்டியின் ஒரு பகுதியாக மாறிவிட்டதைக் கண்டோம். நான் இந்த ஆர்.எம்.பி. யின் தேவைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகின்றேன் என்பதுடன், ஆர்.எம்.பி. என்பது ரென்மின்பி யுவான் அல்ல, ஆனால் வளங்கள், சந்தைகள் மற்றும் தளங்களை குறித்து நிற்கின்கிறது. இப்போது 'தளங்கள்' என்ற சொல்லை நாம் வசதியாக 'இடங்களுக்கு' மாற்றலாம்.

எங்களிடம் பல நாடுகள் இருந்தாலும், பல அரசாங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இப்போது இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்துகின்றன என்பதுடன், அவற்றின் கருத்தியல் குறிப்புக் கட்டமைப்பிற்காக, அது அவர்களின் கொள்கைகளின் அடிப்படையாகும். இருப்பினும், அவற்றின் நோக்கங்கள், முக்கியத்துவம் மற்றும் கொள்கைகள் ஆகியன ஒரே மாதிரியானவை அல்ல என்பதை நாங்கள் காண்கின்றோம். நான்கு தூண் நாடுகளான இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய குவாட் மீண்டும் தோன்றுவதை இன்று நாம் காண்கின்றோம். இந்து சமுத்திரம் மற்றும் பசிபிக் சமுத்திரத்தில் கடல் பாதுகாப்பிற்கான பதில் குவாட் ஆகுமா? கடல் பாதுகாப்பின் முதன்மை இயக்கி குவாட் ஆகுமா? இந்து சமுத்திரத்தின் அடுத்த பாதுகாப்பு வழங்குநராக எந்த ஒரு நாடும் இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம் - சோமாலிய கடற்கொள்ளையர்கள் இதை நிரூபித்துள்ளனர். எனவே, எமக்கு ஒத்துழைப்பு அவசியமானதாகும், ஆனால் குவாட் என்பது ஒரு கடல் சார் 'பனிப்போருக்கு' வழிவகுக்கும். 'பனி' என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை, ஏனெனில் அது பனிப்போர் போல குளிர்ச்சியாக இருக்காது.

கடல்சார் பாதுகாப்பு கொண்ட சில நாடுகளை நாங்கள் காண்பதுடன், இது இந்து சமுத்திரத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கு பாதுகாப்பை வழங்க வழிவகுக்கின்றது. எனவே, இந்து சமுத்திரமானது வேகமாக அதிகரித்து வரும் ஆயுதங்களால் வகைப்படுத்தப்படுகின்றது. நாம் அனைவரும் அறிந்தபடி, இந்து சமுத்திரம் உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட சமுத்திரங்களில் ஒன்றாகும். எந்த நேரத்திலும் சுமார் 120 போர் கப்பல்கள் உள்ளன. விரும்பினால், 2008 முதல் 2020 வரை பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகின்றேன். 29 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 575 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், சில சமயங்களில் வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கப்பல்களும் வருகை தந்துள்ளன. அவற்றில் ஏராளமானவை போர்க்கப்பல்களாகும். இந்து சமுத்திரத்தில் எமக்கு மிகப்பெரிய அவநம்பிக்கை மற்றும் நம்பிக்கைக் குறைபாடு இருப்பதாக தூதுவர் பேர்னார்ட் குணத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் விரைவாக கவனம் செலுத்துகின்றேன். இது மிகவும் சிக்கலான பாதுகாப்புக் கட்டமைப்பாகும். இது இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாறும் பிராந்தியமாகும், ஆனால் பாதுகாப்பு என்பது எமக்கு ஒருமித்த கருத்து இல்லை. பிராந்தியத்தில் நாம் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதும் இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரண்டு அணுசக்திகள் என்ற வகையில், எங்களிடம் மூலோபாயத் தெளிவின்மை உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக அவர்கள் எல்லையில் மோதலில் ஈடுபடுவதுடன், தெற்காசியாவின் சில நாடுகளின் எல்லையில் இருக்கும் சீனாவும் மற்றொரு அணுசக்தி ஆகும். அதைத் தொடர்ந்து, இந்தப் பிராந்திய மற்றும் தேசியப் பாதுகாப்பு இடைவெளியை நாங்கள் காண்கின்றோம். பெரிய அணுசக்திகளுக்கான புவியியல் அருகாமையின் தாக்கத்தையும், இந்த அணுசக்திகளுக்கு இடையில் சிக்கியுள்ள சிறிய நாடுகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்து சமுத்திரத்தில் சிறிய நாடுகள் சந்திக்கும் சங்கடம் இதுதான். இந்தியாவின் அளவு, அதன் மக்கள் தொகை மற்றும் இந்து சமுத்திரத்தில் அதன் கடற்கரையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது, 'சுதந்திர மற்றும் திறந்த' இந்தோ  பசிபிக் சமுத்திரத்தைப் பற்றி பேசலாம், ஆனால் எதற்காக என்பது கேள்வி. எங்களிடம் வர்த்தகம், இணைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகியன இல்லையென்றால், ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ - பசிபிக் மூலோபாயம் அல்லது எந்தவித சமுத்திர மூலோபாயத்தின் முக்கியத்துவம் ஏன், என்ன என்று கேட்கலாம்.

ஆகவே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இலங்கைக்குச் செல்லும்போது, நாங்கள் இந்து சமுத்திரத்தின் மையத்தில், இந்து சமுத்திரத்தின் வலது பக்கத்திலிருந்து சமமான தூரத்தில், முக்கிய தகவல்தொடர்பு கடல் பாதைகளுக்கு அருகாமையில், இந்தியாவுக்கு புவியியல் ரீதியாக மிக நெருக்கமாக இருக்கின்றோம் என நாங்கள் நம்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து அல்லது ரஷ்யா ஆகியவற்றின் செல்வாக்கின் கோளங்களில் அல்லது செல்வாக்கின் அச்சில் நாங்கள் இருப்பதுடன், நாங்கள் ஒரு சிறிய பொருளாதாரம் மற்றும் ஒரு சிறிய இராணுவத்தையுடைய சிறிய நாடு என்ற வகையில் எங்களுக்கு விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு ஒன்று தேவை என நாங்கள் நம்புகின்றோம். சமச்சீரற்ற தன்மையைக் கடப்பதற்கான ஒரு வழியாக, விதிகள் சார்ந்த ஒழுங்கு அமைதல் வேண்டும் என நாங்கள் உண்மையில் விரும்புகிறோம். அபிவிருத்திக்குத் தடையாக இருக்கும் என நாங்கள் நம்புவதால், இந்து சமுத்திரம் முழுவதும் கடல் வர்த்தகத்தின் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலை நாங்கள் விரும்பவில்லை. எமக்கு ஒரு சமநிலையே தேவை, மாறாக இந்து சமுத்திரத்தில் மேலாதிக்க சக்திகள் அல்ல. இலங்கை கட்டிட நிர்மாணிப்புக்களுக்கான பகுதி அல்ல என்பதையும், எமது தேசிய நலன்களையும் இறையாண்மையையும் மதிக்குமாறும் நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்பதையும் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

இந்த பின்னணியில், எதிர்காலத்தில் நாம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதற்கான அறிகுறியை இலங்கைக்கு கோவிட்-19 வழங்கியுள்ளது. சாத்தியமான நெருக்கடியை சமாளிப்பதற்காக, ஜனாதிபதிக்கு ஒரு பொருளாதார மூலோபாயம் உள்ளதுடன், அதில் மூன்று தூண்கள் உள்ளன. அதில் தேசிய பாதுகாப்பு முதன்மையானதாக அமைவதுடன், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளியுறவுக் கொள்கையின் மூலமான அதிகாரம் ஆகியவை அவற்றில் ஏனையவையாகும். முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, இந்து சமுத்திரத்தின் நிலைமையைக் கடக்க, இலங்கை போன்ற ஒரு நாடு எமது வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை விதிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுடன், அத்தகைய ஒன்று 'நடுநிலைமை' ஆகும்.

இலங்கை எப்போதுமே அணிசேரா நாடாக இருந்து வருவதுடன், நாங்கள் நடுநிலை வகிக்க விரும்புகின்றோம். அனைத்து அரசுகளுடனும் 'நட்பு உறவுகளை' தொடர்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம். எந்தவொரு பெரிய சக்தி விளையாட்டுக்களிலும் சிக்கிக் கொள்ள இலங்கை விரும்பவில்லை. நாடுகளை பாதுகாக்க நாங்கள் விரும்பவில்லை, நாங்கள் நாடுகளுக்கு இடையே தெரிவுகளை மேற்கொள்ள விரும்பவில்லை. இந்து சமுத்திரத்தில் எமது சொந்த மூலோபாய சுயாட்சியை பராமரிக்க விரும்புகின்றோம். எவ்வாறாயினும், 'இலங்கை மூலோபாய சொத்துக்களின் கட்டுப்பாட்டை வெளிநாட்டுக் கவலைகளுக்கு விட்டுவிடாத' வெளிநாட்டு முதலீடு மிகவும் வரவேற்கத்தக்கது. அதிகமான அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம், எனினும் எமது இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பின் இழப்பில் அல்ல. இந்தியாவுக்கு ஒரு மூலோபாயப் பாதுகாப்பு கவலையாக இருக்க இலங்கை விரும்பவில்லை. எமது வெளியுறவுக் கொள்கையிலும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் இவை.

கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இந்தப் பின்னணியில், எமக்கு (இந்து சமுத்திரத்தின் கரையோர அரசுகள்) உண்மையில் என்ன தேவை? அடுத்த 3 நாட்களில் எங்களது குழுவில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இப்பிராந்தியத்தில், உள்ளிருந்து, இந்து சமுத்திரத்தின் விமர்சன ரீதியான மறுபரிசீலனை அவசியமாகும். இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க விரும்புகின்றோம். 1971 ஆம் ஆண்டில் இந்து சமுத்திரத்தை அமைதி வலயமாக நியமிப்பதில் நாங்கள் முக்கிய பங்கு வகித்தோம் என தூதுவர் குணதிலக்க குறிப்பிட்டார். அணுசக்தி இல்லாத கடலை உருவாக்க நாங்கள் விரும்பினோம், அதிகாரப் போட்டிக்கு எந்தக் கோரிக்கையும் இல்லை, அத்தகைய போட்டிகளை ஆதரிப்பதற்கான தளங்களும் இல்லை. 49 ஆண்டுகளாக விரைவான பாதையில், நாங்கள் இருக்க விரும்பாத இடத்தில்தான் இருக்கின்றோம். இந்த நிலைமை இப்போது இருப்பதைத் தாண்டுவதை குறைந்தபட்சம் தடுப்போம். இலங்கை அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் விரும்புகின்றது, அப்போதுதான் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக நாம் முன்னேற முடியும். ஒரு நெறிமுறை மற்றும் நிலையான முறையிலான செல்வத்தை இலங்கை மக்களுக்கு உருவாக்க வேண்டும். 2030 க்குள் பொருளாதார ஒத்துழைப்பு மூலம் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதே எங்கள் நோக்கம். உலகளாவிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், கடல் முழுவதும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒரு 'மையமாக' முக்கிய பங்கை வகிக்கவும் நாங்கள் விரும்புகின்றோம். அனைத்து கரையோர நாடுகள் மற்றும் அனைத்து பெரிய சக்திகளிடையேயும் எங்களுக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவையாவதுடன், அது நிச்சயமாக கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துகின்றது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார துறைகளில், எங்களுக்கு தொழில்நுட்ப செயற்பாடுகள் தேவை. பரஸ்பர நன்மைக்காக எங்களுக்கு பரஸ்பரம் மரியாதை தேவை, உண்மையான ஒத்துழைப்பில் உலகளாவிய பொறுப்புக்களை எம்முடன் அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ள உள்ளடக்கம் மற்றும் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மை அவசியமாகும்.

இந்து சமுத்திரம் ஒரு திறந்த, உள்ளடக்கிய, வெளிப்படையான, கூட்டுறவு மற்றும் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட சமுத்திரமாக இருக்க விரும்புகின்றோம் என்பதுடன், அது ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் கூட இருக்கலாம். பாதுகாப்பு, இராஜதந்திர மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் பிராந்திய உறவினர் பாதுகாப்பு பொறிமுறை ஆகியவற்றிற்கான பல்தரப்பு ஒத்துழைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தை கடல்சார் ஆசியாவிலிருந்து கண்டம்சார் ஆசியாவாக மாற்ற எங்களுக்கு கூட்டணிகளும் கூட்டாண்மைகளும் அவசியமாகும். உலகின் ஏனைய பகுதிகளுடன் நாம் அதிகம் இணைந்திருக்க வேண்டும். ஒரு இந்து சமுத்திரக் கதை மற்றும் ஒரு இந்து சமுத்திரக் கடல்சார் மூலோபாயத்திற்கான முக்கியமான தேவை உள்ளதுடன், இதை அடையக்கூடிய ஒரு தளம் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் என நான் தனிப்பட்ட முறையில் நம்புகின்றேன்.

எனவே கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இந்தக் கொந்தளிப்பான நேரத்தில், வெளியுறவுக் கொள்கையின் சாராம்சமானது, மற்றவருடனான உறவு: வாழ்க்கை, எதிரி மற்றும் நண்பர் என்பதாக அமைதல் வேண்டும். சர்வதேச இராஜதந்திரம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகச் சிறப்பாக செயற்பட வேண்டும். 'ஆயிரம் மைல் பயணம் முதல் படியுடன் தொடங்குகிறது' என ஒரு சீனப் பழமொழி உள்ளது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் கீழ் மற்றும் இன்று குழுமியிருக்கும் அனைத்து அறிஞர்களும், ஒரு நீண்ட பயணத்தில் இன்னொரு படி எடுத்து வைக்கும் முயற்சியாக நான் நம்புகின்றேன் என்பதுடன், இந்த நிகழ்வு மற்றும் அதன் அமைப்பாளர்களின் ஒவ்வொரு வெற்றிகளுக்காகவும் முழு மனதுடன் பாராட்டுகின்றேன். அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடமிருந்து நான் எடுத்துக்கொண்ட, ‘நீங்கள் எதிர்த்தரப்பாக இருக்கலாம், ஆனால் எதிரிகளாக இருக்கத் தேவையில்லை’ என்ற மேற்கோளுடன் எனது பிரதான உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

மிக்க நன்றி. உங்களுடன் இருப்பதையிட்டு நான் பெருமையடைவதுடன், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close