நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை கையளிப்பு

நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை கையளிப்பு

நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மலேசிய வெளிவிவகார அமைச்சின் உபசரணைத் தலைவர் டத்தோ வான் ஜைதி பின் அப்துல்லாவிடம் 2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமையன்று கையளித்தார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து உதவிகள் மற்றும் வசதிகளுக்காக உபசரணைத் தலைவருக்கு நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் நன்றிகளைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும் என அவர் தனது எதிர்பார்ப்புக்களை வலியுறுத்தினார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

கோலாலம்பூர், மலேசியா

2022 பிப்ரவரி 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close