ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கான நலன்புரி உதவிகள்

ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கான நலன்புரி உதவிகள்

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதரக வெளிக்களத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் குளிர்காலத்திற்கான உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய கழிப்பறைப் பொருட்களை வழங்குவதற்காக இலங்கை கைதிகள் தங்கியுள்ள ஜுவைதா தடுப்பு முகாமிற்கு தூதுவர் ஷானிகா திஸாநாயக்க நவம்பர் 24ஆந் திகதி விஜயம் செய்தார்.

இலங்கைக் கைதிகளுக்கு உதவுவதற்காக தூதுவர் மற்றும் தூதரகத்தின் பணியாளர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இலங்கைக் கைதிகள் இலங்கைக்குத் திரும்பும் வரை அவர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக தூதரகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியே இதுவாகும்.

ஜோர்தானில் உள்ள ஏனைய தடுப்பு முகாம்களுக்கான விஜயங்களையும் தூதரகம் ஒருங்கிணைத்து வருகின்றது.

இலங்கைத் தூதரகம்,

ஜோர்தான்

2021 நவம்பர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close