சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள்

சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள்

 

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2021 அக்டோபர் 22ஆந் திகதி சான்சரி வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடியது.

 

இலங்கை மற்றும் இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை, தீமையை வெற்றிகொண்ட நன்மையைக் குறித்து நிற்கும் பண்டிகையாகும்.

 

தீபாவளி தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும். சான்சரி வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள், ஒளிரும் எண்ணெய் விளக்குகள், வண்ணமயமான ரங்கோலி மற்றும் மலர் அலங்காரங்களால் பிரகாசிக்கப்பட்டது.

 

இலங்கை மற்றும் இந்தியக் கலை வடிவங்களை சித்தரிக்கும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இந்நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டன.

 

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

 

2021 நவம்பர் 02

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close