கன்பெராவில் உள்ள உயர்ஸ்தானிகராலயததினால் முதலாவது 'வெஸ் மாங்கல்ய விழா'  ஏற்பாடு

கன்பெராவில் உள்ள உயர்ஸ்தானிகராலயததினால் முதலாவது ‘வெஸ் மாங்கல்ய விழா’  ஏற்பாடு

2022 ஒக்டோபர் 15ஆந் திகதி இலங்கை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் பாக்யா நடனப்  பாடசாலை ஏற்பாடு செய்த முதலாவது 'வெஸ் மங்கல்ய விழா'வை கன்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நடாத்தியது.

கன்பரா பௌத்த விகாரையில் நடைபெற்ற சமய வைபவத்தைத் தொடர்ந்து, பாக்யா  நடனப் பாடசாலையின் பத்து மாணவர்கள் கண்டி நடனக் கலைஞர்களின் உயர் தர நடனத்தை, புனித வெஸ் ஆடை அலங்காரங்களுடன் 'வெஸ் மங்கல்ய' வில் சிறந்த தொடக்க நிகழ்ச்சிகளாக வழங்கினர். இந்த நிகழ்விற்காக இலங்கையில் இருந்து பாரம்பரிய பறை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கண்டிய நடன வடிவத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகள் மற்றும் சடங்குகளைக்  கொண்டு வந்த இந்த தனித்துவமான கலாச்சார விழாவைக் காணுவதற்காக, 400 க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்கள் கூடியிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் (தொழிலாளர்) கலாநிதி மரிசா பேட்டர்சன் மற்றும் இலங்கையின் சிரேஷ்ட இசைக்கலைஞர் கலாநிதி ரோஹன வீரசிங்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பன்முகக் கலாச்சார அவுஸ்திரேலிய சமூகத்தில் இலங்கைக் கலாச்சாரம் மற்றும் மரபுகளை  ஊக்குவிப்பதற்காக, பாக்யா நடனப் பாடசாலை கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்த பதில் உயர்ஸ்தானிகர், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதலாவது 'வெஸ் மாங்கல்ய விழா' இடம்பெற்றதாகத் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களின் இலங்கைக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆதரவளிப்பதாகவும், 'கண்டியன் வெஸ் நடனக் கலைஞர்கள்' இலங்கையின் கலாச்சார ஏற்றுமதிச் சின்னம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்ஸ்தானிகராலயம் பல்வேறு நிகழ்வுகள் மூலம் இலங்கைக் கலாச்சாரம் மற்றும்  சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு சமூக அமைப்புக்களை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

கன்பெரா

2022 நவம்பர் 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close