உலகெங்கிலும் உள்ள பௌத்த தகவல்களைச் சேகரிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை

உலகெங்கிலும் உள்ள பௌத்த தகவல்களைச் சேகரிப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை

உலகெங்கிலும் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்த வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் செயற்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள பௌத்த நாடுகளுடனான இலங்கையின் உறவை விரிவுபடுத்துவதில் வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்துகின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டுடன் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்திக் கொள்வதற்கு இலங்கையின் தலைமை மதகுருமார்களின் உதவியையும் வழிகாட்டுதலையும் அமைச்சர் எதிர்பார்க்கின்றார்.

உலகெங்கிலும் உள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல் தொடர்பான முதல் ஆவணத்தை வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் விஸ்வநாத் அப்போன்சோ அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் ஒப்படைத்தமையை இந்தப் புகைப்படம் வெளிப்படுத்துகின்றது.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close