'இலங்கை வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது' - 48வது பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை பிலிப்பைன்ஸ் வர்த்தக மாநாடு  மற்றும் கண்காட்சிக்காக இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் பிலிப்பைன்ஸுக்கு விஜயம்

‘இலங்கை வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது’ – 48வது பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை பிலிப்பைன்ஸ் வர்த்தக மாநாடு  மற்றும் கண்காட்சிக்காக இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் பிலிப்பைன்ஸுக்கு விஜயம்

பிலிப்பைன்ஸ் வர்த்தக சம்மேளனம் 2022 அக்டோபர் 18 -20 வரை ஏற்பாடு செய்திருந்த 48 வது பிலிப்பைன்ஸ் வணிக மாநாடு மற்றும் எக்ஸ்போவில் முப்பது (30) உறுப்பினர் கொண்ட இலங்கை வணிகக் குழுவின் விஜயத்தை மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் எளிதாக்கியது.

இலங்கை - பிலிப்பைன்ஸ் வர்த்தக சபை மற்றும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகர்கள், கட்டுமானம், பொறியியல், கட்டிடக்கலை, கல்வி, சுற்றுலா,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி உணவு மற்றும் பானங்கள், மருந்துகள், ஃபேஷன், வாகனம், சில்லறை விற்பனை போன்ற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

பிரதிநிதிகள் மற்றும் அவர்களது பிலிப்பைன்ஸ் சகாக்களுக்கு இடையேயான தொடர்புகளை  அதிகரித்து, ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, அக்ரி பார்ட்டிலிஸ்ட்டின் காங்கிரஸ் பிரதிநிதி வில்பர்ட் லீ உடனான சந்திப்பு, புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் வணிகர்களுடனான வணிக அமர்வுகள், பிலிப்பினோ-சீன வணிக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமைப்பான பிலிப்பினோ சீன வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புக்கான விஜயம் மற்றும் வலையமைப்பு அமர்வு மற்றும் ஏனைய வசதிகள் உட்பட பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை மற்றும் பிலிப்பைன்ஸ் - இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றால் பல நடவடிக்கைகள் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்  இலகுபடுத்தல் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை-பிலிப்பைன்ஸ் வர்த்தக சபை மற்றும் பிலிப்பைன்ஸ்-இலங்கை வர்த்தக சபை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையை மையமாகக் கொண்ட அமர்வில்,  இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான நாட்டின் சாத்தியங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் குறித்து இலங்கை விளக்கமளித்தது. பிலிப்பைன்ஸ் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இ-வணிக மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை ஊக்குவிப்பது தொடர்பான ஒத்துழைப்பைத் தொடங்குவதற்குமாக, பிலிப்பைன்ஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் இலங்கை இ-வணிக சேவை வழங்குநரான அப்பிகோ பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இரண்டு நிறுவனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுவதற்கு  வழிவகுத்த, இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஆய்வுக் கலந்துரையாடலுக்கு தூதரகம் உதவியமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் விளைவாக, பிரதிநிதிகள் மற்றும் அவர்களது பிலிப்பைன்ஸ் சகாக்களுக்கு  இடையில் அறிமுகங்கள், உரையாடல்கள் மற்றும் தொடர்பாடல்களை செயற்படுத்தும் வகையில் இலங்கையின் பிரதிநிதித்துவ தொழில்துறைகள் சரியான முறையில் காட்சிப்படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் ஏற்றுமதிக் கட்டளைகளைப் பெறவும், கூட்டாண்மை மற்றும் இணைப்புக்களை உருவாக்கவும், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வணிக ஈடுபாடுகளை நிறுவவும் முடிந்தது.

நாட்டின் மிகப்பெரிய வணிக ஆதரவு அமைப்பான பிலிப்பைன்ஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் வணிக மாநாடு மற்றும் எக்ஸ்போ, முக்கிய கொள்கை சிக்கல்கள், அரசாங்கக் கொள்கை மற்றும் நிரல் புதுப்பிப்புகளைக் கண்காணிப்பதற்காக  வணிகம் மற்றும் தொழில்களில் உள்ள நாட்டின் முன்னணி பெயர்களின் முதன்மையான கூட்டமாகும்.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2022 அக்டோபர் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close