இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் நியமனம்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் நியமனம்

 

மேற்கண்ட நியமனத்தைத் தொடர்ந்து தோன்றிய கருத்துகள் தொடர்பில் பின்வருவன அவதானிக்கப்படுகின்றது:

  • இலங்கை இராணுவத் தளபதியின் நியமனமானது அரச தலைவரின் இறையாண்மைக்குட்பட்ட தீர்மானமாகும்.
  • இலங்கையில் பொதுச் சேவை பதவியுயர்வுத் தீர்மானங்கள் மற்றும் உள்ளக நிர்வாக செயன்முறைகளை பாதிக்கும் வகையிலான வெளிநாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும்.
  • குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சில இருதரப்பு பங்காளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் இந்த நியமனம் குறித்த அக்கறையுள்ளதொரு நிலையை குறிப்பிடுவது வருந்தத்தக்கதும், சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புள்ள உறுப்பினர்களும் முன்வைக்கும் இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானதுமாகும்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

 

2019 ஆகஸ்ட் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close