இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம்

இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான பகுதிகளை அடையாளம்

பரிஸில் உள்ள பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற இந்தோ - பசுபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மட்ட மன்றத்தின் பக்க அம்சமாக, சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் திருமதி. ஜுட்டா உர்பிலைனனை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்தித்தார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஆடைகள், சுவையூட்டப்பட்ட தேநீர், கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட சுவையூட்டிப் பொருட்கள், மீன்பிடிப் பொருட்கள், மாணிக்கங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிகள் மற்றும் விருந்தோம்பல் துறை, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல், மின்சாரம், வலு மற்றும் மருந்து உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதுடன் தொடர்பான கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உர்பிலைனனுடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடினார்.

சுகாதாரக் கொள்கை ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு, தொழிற்பயிற்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மக்கள் தொடர்பு கொள்வதற்கான ஏனைய அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளை அணுகுவதில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிநோக்கிப் பார்ப்பதாகவும், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரால் அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகளில் தெளிவான ஒருங்கிணைப்புக்கள் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உர்பிலைனென் பேராசிரியர் பீரிஸிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 பிப்ரவரி 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close