இலங்கையின் துணைத் தூதரகம் பாக்கிஸ்தானில் உள்ள கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் சங்கத்தின் மூலம் கட்டுமானம் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி  செய்வதை ஊக்குவிப்பு

 இலங்கையின் துணைத் தூதரகம் பாக்கிஸ்தானில் உள்ள கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் சங்கத்தின் மூலம் கட்டுமானம் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி  செய்வதை ஊக்குவிப்பு

இலங்கையின் கட்டுமானம் தொடர்பான பொருட்களை ஊக்குவிப்பதற்காக, கராச்சியில் உள்ள  இலங்கையின் துணைத்தூதுவர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் சங்கத்தின் தலைவர் அல்தாஃப் தையையும் அவர்களது உறுப்பினர்களையும், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் இல்லத்தில் வைத்து சந்தித்தார். சுவிஸ்டெக் அலுமினியம் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தரிந்து அதபத்து மற்றும் ஹேலிஸ் அவென்ச்சுரா இன்னொவேட்டிவ் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் நாட்டு முகாமையாளர் சமித் பெரேரா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் சங்கம் என்பது கட்டிடம் கட்டுபவர்கள்  மற்றும் உருவாக்குபவர்களின் தேசிய அளவிலான பிரதிநிதித்துவ அமைப்பாவதுடன், இது 1972ஆம் ஆண்டில் தனியார் துறையின் கட்டுமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் சங்கம் நாட்டில் 1,200க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

இலங்கை 2021 ஆம் ஆண்டில், இறப்பரினாலான தொழில்துறை மற்றும் அறுவை சிகிச்சை  கையுறைகள், தனிமைப்படுத்தப்பட்ட கம்பிகள் மற்றும் கேபிள்கள், சுவிட்சுகள், பலகைகள் மற்றும் பேனல்கள், எம்.டி.எஃப். மற்றும் ஃபைபர் பலகைகள், அடிப்படை உலோகத்தின் ஏனைய பொருட்கள் மற்றும் அலுமினியம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் நிலையான கம்பி போன்ற சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கட்டுமானப் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன், இலங்கையில் இருந்து அதிகமான கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பகாலியும்  கலந்து கொண்டார்.

இலங்கையின் துணைத்தூதரகம்,

கராச்சி

2022 அக்டோபர் 13

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close