இலங்கையின் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் சந்திப்பு

இலங்கையின் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் சந்திப்பு

அண்மையில் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெற்ற வலையமைப்புச் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவில் இலங்கையின் தலைமைத்துவ வகிபாகத்தை முன்வைத்தார்.

வர்த்தகப் பாதைகளால் பிணைக்கப்பட்ட மூன்றாவது பெரிய சமுத்திரமான இந்து சமுத்திரம், உலகின் கொள்கலன் கப்பல்களில் அரைவாசியையும், உலகின் மொத்த சரக்குப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதியையும், உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் ஏற்றுமதியையும் கொண்டு செல்லும் முக்கிய கடல் பாதைகளை கட்டுப்படுத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான உயிர்நாடியாக விளங்குகின்றது.

இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்து சமுத்திரத்தின் அபிவிருத்திக்காக, இந்து சமுத்திரத்திலான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்து சமுத்திர விளிம்பு சங்கம் 1997இல் நிறுவப்பட்டது. இலங்கை இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் ஸ்தாபக உறுப்பு நாடாகும். கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பை முதன்மை முன்னுரிமையாக இந்து சமுத்திர விளிம்பு சங்கம் 2011ஆம் ஆண்டில் ஒதுக்கியது.

கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்க செயற்குழுவின் தலைமையின் ஒட்டுமொத்த பொறுப்புக்களின் ஒரு பகுதியாக, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய ஒத்துழைப்புக்காக இலங்கை எவ்வாறு பயனடைய முடியும் மற்றும் பங்களிக்க முடியும் என்பதை நோக்கும் வகையில், கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு குறித்த தொடர் பட்டறைகள் / கருத்தரங்குகளை உள்நாட்டிலும் பிராந்திய ரீதியிலும் ஏற்பாடு செய்வதற்காக, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் பணியாற்றும் ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைப்பதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக இந்த சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுச் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், உறுப்பு நாடுகள் முழுவதும் ஆரோக்கியமான கலந்துரையாடல்களைத் தூண்டும் செயன்முறையை அமைப்பதாக அமைந்த இந்த வலையமைப்புச் சந்திப்பானது, இறுதியில் பிராந்தியத்தில் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றிலான நிபுணர்களின் பரந்த தரவுத் தளத்தை உறுப்பு நாடுகளிடையே உருவாக்குவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவராக இலங்கை 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொறுப்பேற்க உள்ளதாகவும், அதன் பின்னர் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் தலைமைப் பொறுப்பை வகிக்கவுள்ளதாகவும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு சகோதரத்துவத்திற்கு வெளியுறவுச் செயலாளர் அறிவித்தார்.

கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்குழுவை வழிநடத்தும் இலங்கையின் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் உட்பட கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைத்தமைக்காக கொழும்பில் உள்ள போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஜேர்மன் திங்க் டேங்க் மெக்ஸ் பிளேங்க் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 பிப்ரவரி 02


Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close