Wednesday, January 17, 2018
   
Text Size

Authentication of Documents - Tamil Version

ஆவணங்களை சான்றுறுதிப்படுத்திக்கொள்வதற்கான வழிகாட்டி

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சான்றுறுதிப்படுத்தும் பகுதியின் பிரதான பொறுப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களினால் நியதிச்சட்ட அதிகாரங்களின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களையும் ஆவணங்களையும் தாங்கள் சமர்ப்பிக்கின்றபோது உண்மையானதும் நம்பகத்தன்மையானதும் என சான்றுறுதிப்படுத்துவதாகும். தாங்கள் சமர்ப்பிக்கும் அத்தகைய ஆவணங்களின் உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் உரியவாறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அத்தகைய ஆவணங்கள் உண்மையென சான்றுறுதிப்படுத்தப்படும்.

பின்வரும் அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் கண்டிப்பாக கடைப்பிடிப்பது பிரிவினால் எதிர்பார்க்கபடுகின்ற வினைத்திறன்மிக்க அத்துடன் செயற்திறன்மிக்க சேவைக்கு வசதியளிக்கும்.தேவைப்பாடுகளுடன் இணங்காத ஆவணங்கள் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதனை தயவு செய்து கவனிக்கவும்.

பொதுவான விடயங்கள்:

  1. சான்றுறுதிப்படுத்துவதற்காக ஆவணங்களை சமர்ப்பிக்கின்றவர்கள் செல்லுபடியான ஆள் அடையாள ஆவணம் ஒன்றை சமர்பிக்க வேண்டும். பின்வரும்அடையாள ஆவணங்கள் மாத்திரம் இப் பிரிவினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
    • இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை
    • இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் செல்லுபடியான கடவுச் சீட்டு
    • இலங்கை மோட்டார் வாகனபோக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம்.
    • வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது சொந்த நாட்டின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் நிலையத்தினால் வழங்கப்படும் சொல்லுபடியான கடவுச்சீட்டு. (வெளிநாட்டு பிரஜைக்கான கட்டணம் அறவிடப்படும்)

குறிப்பு : வேறு ஒரு நாட்டில் இரட்டை பிரஜா உரிமையினை கொண்டுள்ள இலங்கை பிரஜைகள் இலங்கை கட்டண வகுப்பின் கீழ் சேவைகளை பெறுவதற்காக ஏதேனும் மேற்குறித்த செல்லுபடியான  இலங்கை அடையாள  ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும்.

2. தமது சான்றிதழ்களை சான்றுறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியவர்கள் அத்தகைய சான்றிதழ்களை கொன்சியூலர் பிரிவின் சான்றுறுதிப்படுத்தும் பகுதிக்கு நேரடியாக கையளிக்க வேண்டும். எனினும், சான்றிதழ் உரிமையாளர் நேரடியாக சமூகமளிக்க முடியாதிருப்பின் சான்றிதழ்களை கொண்டுவரும் நபரின்பின்வரும் தகவல்கள் உள்ளடங்கிய அங்கீகாரக் கடிதம் ஒன்றுடன் நெருங்கிய உறவினர் மூலம் அனுப்பப்படலாம். 

    • சான்றிதழை கொண்டுவரும் நபரின்:
    • முழுப்பெயர்
    • தேசிய அடையாள அட்டை இலக்கம்
    • வதிவிட முகவரி

இப்பிரிவிற்கு ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தப்படுவதற்கு சமர்பிக்கின்ற நபர் அங்கீகார கடிதத்துடன் சான்றிதழ் உரிமையாளரின் கடவுச்சீட்டின் பிரதி ஒன்றினையும் கொண்டுவருதல் வேண்டும். சான்றிதழின் உரிமையாளர் செல்லுபடியான கடவுச்சீட்டு ஒன்றினை கொண்டிருக்காவிடின் அங்கீகாரக்கடிதம் தொடர்புடைய கிராம சேவகர்;  முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு தொடர்புடைய பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட வேண்டும். அத்தகைய சான்றிதழ்களுக்கு சான்றுறுதிப்படுத்தல் தொடர்பான தீர்மானம் கொன்சியூலர் பிரிவின் பணிப்பாளர் நாயகத்தினால் எடுக்கப்படும் என்பதை தயவு செய்து கவனிக்கவும்.

3. 18 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் சான்றிதழ்களை சான்றுறுதிப்படுத்துவதற்காக தொடர்புடைய பிள்ளைகளின் சட்ட ரீதியான பாதுகாவலர் பிரசன்னமாக வேண்டும் அல்லது பிள்ளை சார்பாக இந்நோக்கத்திற்காக வருகின்ற நபர் பாதுகாவலரின் கோரிக்கை கடிதத்துடன் அவரது கடவுச்சீட்டினை சமர்ப்பிக்க வேண்டும். (மேலே இலக்கம் 02 இல் உள்ள அறிவுறுத்தல்கள் ஏற்புடையதாகும்)பெற்றோரினை / பாதுகாவலரினை நிரூபிப்பதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இந்நோக்கத்திற்காக பிள்ளைகளை அழைத்து வரவேண்டிய தேவையில்லை.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் அட்டைகளுடன் வருபவர்களுக்கும் மேற்படி விடயம் பொருந்தும்.

4.சான்றுறுதிப்படுத்துவதற்காக பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தல் சட்டத்தினால் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.

5.பொய்யான ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்காக அல்லது ஆவணங்களுக்கு சான்றுறுதிப்படுத்தல்வழங்குவதை துரிதப்படுத்தவதற்காக எவரேனும் தரப்பினருக்கு ஏதேனும் பணத்தினை வழங்க வேண்டாம் என தங்களுக்கு கண்டிப்பான ஆலோசனை வழங்கப்படுகின்றது. இக்கட்டடத்தின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் செயற்பாட்டில் உள்ளன. சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் எவரேனும் ஈடுபட்டால் சட்டத்தினை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னால் கொண்டுவரப்படுவார் என்பதனை தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

6.நியமனங்களை வழங்குவதற்கான நியமனக் கருமபீடம் பி..1.30 மணிக்கு மூடப்படும். கருமபீடம் மூடப்பட்டதன் பின்னர் நியமனங்களை வழங்குமாறு அலுவலர்களிடம் கோருவதை தயவுசெய்து தவிர்க்கவும்.பரீட்ச்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களை சான்றுறுதிப்படுத்துவதற்காக மு..7.30 தொடக்கம் பி..3.00 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

              7.ஒவ்வொரு ஆவணத்திற்கும் சான்;றுறுதிப்படுத்தல் செய்வதற்கான கட்டணம் பின்வருமாறு (2018.01.01ம் திகதியிலிருந்து)

    • இலங்கை பிரஜைகளுக்கு ரூபா 800/=
    • வெளிநாட்டு பிரஜைகளுக்கு ரூபா 1500/=
    • பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்காக ரூபா /= அறவிடப்படும் (மேற்குறித்த கட்டணங்களுக்கு மேலதிகமாக தமது சேவைக்காகபரீட்சைகள் திணைக்களம் அதன் சேவை கட்டணத்தை அறவிடலாம்)
    • இவ் அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற வர்த்தகசம்மேளனம் ஒன்றினால் சான்றுப்படுத்தப்பட்ட ஏற்றுமதி ஆவணத் தொகுதி ஒன்றினை சான்றுறுதிப்படுத்துவதற்காக ரூபா 6000/= அறவிடப்படும்.

    அனைத்து கொடுப்பனவுகளும் கொடுப்பனவு கருமபீடத்தில் மாத்திரம் காசு அல்லது கடன் அட்டை/ பற்று அட்டை மூலம் மாத்திம் செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கொடுப்பனவு தொடர்பிலும் பற்றுச்சீட்டு விநியோகிக்கப்படும். பற்றுச்சீட்டுக்கமைவாக நீங்கள் மேற்கொண்ட கொடுப்பனவுத்தொகை சரியானதா என்பதனை உறுதிப்படுத்துவதற்காக கொடுப்பனவு கருமபீடத்தை விட்டுச் செல்வதற்கு முன்னர் சரிபார்த்துக் கொள்வது உமது பொறுப்பாகும்.

8.எந்தவொரு நிழற்பிரதி ஆவணங்களும் சான்றுப்படுத்தலுக்காக ஏற்றுக் கொள்ளப்படாது ஒவ்வொரு ஆவணமும் ஊடுகதிர் படம் (Scan) செய்யப்படும். எனவே சேதமடைந்த அல்லது சிதைவுற்ற ஆவணங்களை சமர்ப்பிப்பதை தயவுசெய்து தவிர்க்கவும்.

          9.குறித்த நிறுவனங்களுக்கு அல்லது தூதரகங்களுக்குமுகவரியிடப்பட்ட கடிதங்கள்சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்படாது.

10.இலங்கை அரசாங்கத்தின் நிறுவனங்களினால் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலமொழியில் வழங்கப்பட்ட ஆவணங்களின் மூலப்பிரதிகள் மாத்திரம்சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

 11.மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கு பின்வரும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

11.1.  சான்றுறுதிப்படுத்தப்பட வேண்டிய மொழிபெயர்ப்பின் மூல ஆவணம் மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மொழிபெயர்க்கப்பட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் மூல ஆவணத்துடன் ஒத்திருத்தல் வேண்டும்.

 11.2 மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களுக்கு சான்றுறுதிப்படுத்தல்,நீதிஅமைச்சில் பதிவுசெய்யப்பட்ட சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரினால் செய்யப்பட்டமொழிபெயர்ப்பாக இருந்தால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும். சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் தனது கடிதத் தலைப்பில் அல்லதுமுத்திரையில் மொழிபெயர்ப்பினை செய்வதற்கு அவருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள               மொழிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும். நீதி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட  சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய விபரங்களை அவ்        அமைச்சின் இணையத்தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

 11.3 சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழியிலுள்ள ஆவணம் ஒன்று வேறு வெளிநாட்டு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு இருக்குமாயின் மூல ஆவணத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் மொழிபெயர்ப்பு பிரதியில் சாரம்ச வடிவில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படல் வேண்டும்.

             11.4 மேற்குறித்த விதத்தில் வேறு வெளிநாட்டு மொழி ஒன்றினுள் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் ஒன்று குறித்த வெளிநாட்டு மொழியில் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு தகைமையுடைய மொழிபெயர்ப்பாளராக நீதி அமைச்சில் பதிவுசெய்த சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரினால் தொடர்புடைய ஆவணம் மொழிபெயர்க்கப்பட்டு அதனை நீதி அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

             11.5 நீதியமைச்சில் குறித்த வெளிநாட்டு மொழியில் சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லையாயின், குறித்த வெளிநாட்டு மொழி அரசகரும மொழியாக கருதப்படுகின்ற நாடு ஒன்றின் தூதரகத்தினால்  மொழிபெயர்ப்பு உண்மையானதும் சரியானதும் என சான்றுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தகைய தூதரகம் இலங்கையில் இல்லாதவிடத்து அவ்வாறான சான்றுப்படுத்தல் தொடர்புடைய நாட்டினை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட அருகில் உள்ள நாட்டில் உள்ள தூதரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் குறித்த அருகாமையிலுள்ள நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

    11.6 பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆவணங்கள் தொடர்பில் அத்திணைக்களத்தின் சத்தியப் பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளரினால் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பதாரிகள்  ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

       12. ஆவணங்களை கையளிக்கின்ற சந்தர்ப்பத்தில் சான்றுறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவிப்பதன் மூலம்தங்களுக்கும் அதேபோன்று கடமை அலுவலர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக் கொள்ளலாம். நியமனத்தை பெறுகின்றபோது உமது பெயர், கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை சரியாக வழங்குவதும் கணனியின் கணனித் திரையில் அவற்றை பரிசோதிப்பதன் மூலம் தகவல்களை மீள் உறுதி செய்வதும் உமது பொறுப்பாகும் என்பதை கவனத்திற் கொள்க. ஆவணங்கள் சான்றுறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இத்தகவல்கள் திருத்தப்பட முடியாதவை என்பதனை தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்.

  13.  இலத்திரனியல் ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையின் கீழ் சான்றுறுதிப்படுத்தப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும்மாதிரி இலக்கங்கள் வழங்கப்படுவதுடன் சகல தூதரகங்களும் தமது நடவடிக்கைகளுக்காக பாதுகாக்கப்பட்ட இலத்திரனியல் வழிமுறை ஒன்றின் மூலம் அனைத்து சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்ய முடியும். தொடர்புடைய தூதரகங்களுக்கு இலத்திரனியல் மூலம் சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்துடன் சேர்த்து உமது மூல ஆவணங்களையும் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

       14.       வெளிநாட்டு முகவர் நிலைய அதிகாரி ஒருவரினால் வழங்கப்படும் ஏதேனும் ஆவணம், குறித்த நாட்டில் உள்ள இலங்கையின் இராஜதந்திர தூதரகத்தினால் அல்லது அந்நாட்டினை பிரதிநிதித்துவம் செய்கின்ற இலங்கையிலுள்ள இராஜதந்திர தூதரகத்தினால் அவ் ஆவணம் சான்றொப்பம் இடப்பட்டிருந்தால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்படும். (தயவுசெய்து பின்வரும் உருவினை பார்க்கவும்)

15.   ஆவணங்களை சேகரிக்கின்ற போது சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் உமது பிரதி, மூல ஆவணங்கள், கொடுப்பனவு பற்றுச்சீட்டு ஆகியவற்றை  சரிபார்ப்பதன் ஊடாக உமக்கும் அதேபோன்று நிறுவனத்திற்கும் ஏற்படுகின்ற அசௌகரியங்களை குறைக்கக்கூடியதாக இருக்கும்.

16         சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் சான்றுறுதிப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து ஒருவருட காலத்திற்கு செல்லுபடியாகும்.

17.        இணையத்தளத்தின் ஊடாக எமது இணையத்தளத்திற்குச் சென்று (www.mfa.gov.lk) நேரடி நியமனத்தினை பெற்றுக்கொள்ளலாம். (onlineappointment)

பின்வரும் ஆவணங்களின் பகுதிகள், அவ் ஆவணங்களின் ஒவ்வொரு வகுதியின் கீழும் குறிக்கப்பட்ட தேவைகளுக்கு அமைவாக மூலப்பிரமாணங்களை பூர்த்தி செய்திருந்தால் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை கவனத்திற் கொள்ளவும். அத்தகைய மூலப்பிரமாணங்களுடன் இணங்காத ஆவணங்கள் நிராகரிக்கப்படும்.

பின்வரும் வகுதிகளின் கீழ் வருபவை தவிர வேறு ஆவணங்கள் எதுவும் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ள முடியாத ஆவணங்களுக்கு சான்றுறுதிபடுத்துமாறு கோர வேண்டாம் என நீர் வேண்டப்படுகின்றீர்.

1.    பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்

    • 2008.01.01 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், மூலப் பதிவகத்திலிருந்து அல்லது பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தின் தரவு முறைமையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு 2008.01.01 அன்றோ அல்லது அதன் பின்னரோ மாவட்ட பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட மூல ஆவணமாக இருப்பின் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும். 'மூலப் பிரதி' என்பதன் கருத்துபிறப்பு, திருமணம் அல்லது இறப்பு நிகழ்ந்த வேளையில் அதனை பதிவு செய்கின்ற பதிவாளரினால் விண்ணப்பதாரருக்கு கையளிக்கப்பட்ட ஆவணமன்று என்பதனை கருத்திற் கொள்வது அவசியமாகும். ஆனால் அது பிறப்பு, திருமணம் அல்லது இறப்பு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர்அலுவலக தரவுத் தளத்திலிருந்து அல்லது உத்தியோகபூர்வ பதிவகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற மாவட்ட பதிவாளரினால் விநியோகிக்கப்படுகின்ற சான்றுப்படுத்தப்பட்ட உண்மை பிரதியாகும். (பிறப்பு, திருமண மற்றும் இறப்பு பதிவு செய்கின்ற நேரத்தில் விநியோகிக்கப்படும் ஆவணம் உண்மைப் பிரதியாக மாவட்ட பதிவாளரினால் மீள் சான்றுப்படுத்தப்பட்டிருக்கும் எனின் சான்றுறுதிப்படுத்துவதற்காக கருத்தில் கொள்ளப்படலாம்.
    • தேடலின் 'பெறுபேறுகள் கிடைக்கவில்லை' உடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏதேனும் மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது கொழும்பில் மாளிகாவத்தையில் உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்தின் மத்திய பதிவேட்டு அறையில் உள்ள பதிவகம் ஒன்றில் அத்தகைய தரவு பதிவு செய்யப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்படும்.
    • முஸ்லிம் விவாகரத்து சான்றிதழ்கள் விவாகரத்துக்கிற்கு கட்டளை வழங்குகின்றஹாதி நிதிமன்றத்துடன் தொடர்புடைய பிரதேச செயலகத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ஒருவரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

 

2.   திருமணமாகாத அந்தஸ்தினை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்

    • திருமணம் செய்வதற்கு எதிர்பார்க்கின்ற தொடர்புடைய விண்ணப்பதாரியினால், அவரது தாய் அல்லது தந்தை மற்றும் அதே குடுப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அத்துடன் சகோதரிகள் மூலம் மாத்திரம் திருமணமாகாத அந்தஸ்;து பற்றிய சத்தியக்கூற்று சமர்பிக்கப்படலாம். சத்தியக்கூற்றில் திருமணம் செய்வதற்கு எதிர்பார்க்கின்ற தொடர்புடைய விண்ணப்பதாரியின் கடவுச் சீட்டு இலக்கத்தினை குறிப்பிடுவது அவசியமாகும். (வெளிநாட்டு பிரஜைகளுக்கான திருமணமாகாத சான்றிதழ்கள் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படாது)
    • திருமணம் செய்வதற்கு எதிர்பார்க்கின்ற விண்ணப்பதாரி இலங்கையில் திருமணமாகாமல் இருக்கின்றார், திருமணம் செய்வதில் சட்டரீதியான தடைகள் எதுவும் கிடையாது மற்றும் திருமணம் செய்வதற்கு எதிர்பார்க்கின்ற விண்ணப்பதாரியின் குடும்ப உறவுகள் என்பன மாத்திரம் இச் சத்தியக் கூற்றில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும். இச் சத்தியக் கூற்று சட்டத்தரணி அல்லது சமாதான நீதவான் முன்னிலையில் விளம்பப்பட வேண்டும்.
    • சட்டத்தரணி ஒருவரின் முன்னிலையில் சத்தியக் கூற்று கையொப்பமிடப்படுமாயின் அது உயர் நீதிமன்றத்தின் பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும் அல்லது சமாதான நீதிவான் ஒருவரின் முன்னிலையில் சத்தியக் கூற்று கையொப்பமிடப்படுமாயின் அது நீதி அமைச்சின் சமாதான நீதவான் கிளையின் அதிகாரம் பெற்ற அலுவலரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
    • திருமணம் செய்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரியின் செல்லுபடியான கடவுச்சீட்டின் உண்மைப்பிரதி ஒன்றினை  சத்திய கூற்றுடன் சமர்பிக்கப்பட வேண்டும்.
    • வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை பிரஜைகள் இச் சத்திய கூற்றினை அத்தகைய நாட்டின் இலங்கை ராஜதந்திர தூதரகத்தில் கொன்சூலர் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவரின் முன்னிலையில் விளம்பலாம்.
    • அத்தகை சத்தியக் கூற்றின் மாதிரியினை இவ் அலுவலகத்தின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது இவ் அலுவலகத்தின்   அறிவித்தல் பலகையில் இருந்து பிரதி எடுக்க முடியும்.

 

3. பொலிஸ் தலைமைக் காரியாலயத்தினால் வழங்கப்படும் பொலிஸ் இசைவு அறிக்கைகள்

அனைத்து பொலிஸ் இசைவு அறிக்கைகளும் பொலிஸ் தலைமை அலுவலகத்தின் மாதிரிப் படிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும் அத்துடன் கடிதத் தலைப்புகளில் உள்ள வேறு எவையேனும்; ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரியின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், திகதி, தபால் முகவரி, பொலிஸ் அறிக்கையினால் உள்ளடக்கப்படுகின்ற காலம், பொலிஸ் தலைமை அலுவலகத்தின் அதிகாரம் அளிக்கப்பட அலுவலரின் கையொப்பம், அவரது அலுவலக முத்திரை ஆகியன பொலிஸ் அறிக்கையில் தெளிவாகவும் சரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும்.

 

4. பொலிஸ் நிலையங்களினால் வழங்கப்படும் பொலிஸ் அறிக்கைகள்

அனைத்து பொலிஸ் அறிக்கைகளும் 'பொலிஸ் 423' படிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும். கடிதத் தலைப்புகளில் உள்ள வேறு எவையேனும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

 

அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு பணம் செலுத்தியமைக்காக வழங்கப்பட்ட 'பொது 172' படிவத்தின் பற்றுச் சீட்டின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

விண்ணப்பதாரியின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், திகதி, தபால் முகவரி, பொலிஸ் அறிக்கையினால் உள்ளடக்கப்படுகின்ற காலம், பொலிஸ் பொறுப்பதிகாரியின் கையொப்பம், அவரது அலுவலக முத்திரை ஆகியன பொலிஸ் அறிக்கையில் தெளிவாகவும் சரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும்.

 

5. வெளிநாடுகளினால் வழங்கப்படுகின்ற பொலிஸ் அறிக்கைகள்

 

  • இவ் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் தலையீட்டுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பொலிஸ் அறிக்கைகள் அந் நாட்டின் இலங்கையின் இராஜதந்திர தூதரகத்தினால் அத்தகைய அறிக்கை சான்றுப்படுத்தப்பட்டிருந்தால் மாத்திரம் அல்லது கொன்சியூலர் பிரிவின் பதவி நிலை அலுவலர் ஒருவரின் சான்றுப்படுத்தலின் கீழ் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

 

  • விண்ணப்பதாரிகளினால் தனிப்பட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளப்டுகின்ற வெளிநாட்டு பொலிஸ் அறிக்கைகள் அந்நாட்டின் இராஜதந்திர தூதரகத்தினால் அவ் ஆவணங்கள் சான்றுப்படுத்தப்பட்டிருந்தால் மாத்திரம் அல்லது இலங்கையில் அத்தகைய நாட்டினை பிரநிதித்துவப்படுத்துகின்ற இராஜதந்திர தூரகத்தினால் சான்றொப்பம் இடப்பட்டிருந்தால் மாத்திரம் சான்றுப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும். இம் மூலப்பிரமாணங்களை திருப்திப்படுத்தாத ஆவணங்கள் சான்றொப்பத்திற்கு முன்னர் சரிபார்பதற்காகவும் சான்றுப்படுத்தலுக்காகவும் வழங்குகின்ற நாட்டின் இலங்கை இராஜதந்திர தூதரகத்திற்கு திருப்பி அனுப்பப்படும். இம் முயற்சிக்காக எடுக்கப்படும் காலம்,கொன்சியூலர் பிரிவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதனை தயவு செய்து கவனிக்கவும்.

 

6. கடவுச்சீட்டுகள்

 

  • குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டின்; புகைப்பட மற்றும் தகவல் பக்கம்,திருத்தங்கள் மற்றும் அவதானிப்பு பக்கங்கள் மாத்திரம் உண்மைப்பிரதியாக சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

 

  • இவ் ஆவணத்துடன் மூல கடவுச்சீட்டு சமர்பிக்கப்பட வேண்டும் அத்துடன் மூல கடவுச் சீட்டு கிடைக்கப்பெறவில்லை எனின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி ஒன்று சான்றுறுதிப்படுத்துவதற்காக சமர்பிக்கப்பட வேண்டும்.

 

7. தொலைந்த கடவுச் சீட்டுகள் பற்றிய பொலிஸ் அறிக்கைகளை சான்றொப்பமிடுதல்

    • தொலைந்த கடவுச் சீட்டுகள் பற்றிய பொலிஸ் அறிக்கைகள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் புதிய கடவுச்சீட்டில் தொலைந்த கடவுச்சீட்டு பற்றிய தொடர்புடைய குறிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் மாத்திரம் சான்றொப்பமிடப்படும்.
    • தொடர்புடைய அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் நிலையத்திற்கு செலுத்திய கொடுப்பனவு தொடர்பில் விநியோகிக்கப்பட்ட 'பொது 172' படிவத்தின் பற்றுச் சீட்டின் மூலப்பிரதி சமர்பிக்கப்பட வேண்டும்.

  8. பிரஜா உரிமைச் சான்றிதழ்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூல பிரஜா உரிமைச் சான்றிதழை அத்திணைக்களத்திலிருந்து மூன்று மாதங்களினுள் பெற்றுக்கொண்ட சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப்பிரதியுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

   9. சாரதி அனுமதிப் பத்திரங்கள்

    • மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் தகவல் பொழிப்பு மாத்திரம் சான்றொப்பமிடப்படும்.
    • பத்திரத்தின் பொழிப்புடன் சேர்த்துசாரதி அனுமதிப் பத்திரத்தின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • இலங்கை வாகனங்கள் அமைப்பினால் (Ceylon Auto Mobile Association) வழங்கப்படும் ஆவணங்கள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

   10. தேசிய அடையாள அட்டை

  •  ஆட்களைப் பதிவு செய்வதற்கான ஆணையாளரினால் வழங்கப்படும் கடிதத்தின் மூலப் பிரதிக்கு மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • ஆட்களைப் பதிவு செய்வதற்கான ஆணையாளரினால் வழங்கப்படும் கடிதத்தின்மூலப் பிரதிக்கு மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • தொடர்புடைய தேசிய அடையாள அட்டையும் இக்கடிதத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

11. மருத்துவச் சான்றிதழ்

    • இலங்கை மருத்துவ சபையினால் சான்றுப்படுத்தப்பட்ட மருத்துவச் சான்றிதழ்கள் மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபையினால் சான்றுப்படுத்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவச் சான்றிதழ்கள் மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும்.

 

12. பட்டய அல்லது தொழில்சார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

    • பாராளுமன்ற சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்ட பட்டய/ தொழில்சார் நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் உண்மைப்பிரதிகள் தொடர்புடைய நிறுவத்தினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • வெளிநாடுகளில் உள்ள பட்டய அல்லது தொழில்சார நிறுவனங்களினால வழங்கப்பட்ட சான்றிதழ்களுக்கு சான்றுறுதிப்படுத்துவதற்காக தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள அதிகாரம் அளிக்கப்பட்ட உள்நாட்டு நிறுவனங்;களினால் அல்லது அந்நாட்டினை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இலங்கையில் உள்ள தூதரகத்தினால் உண்மைப் பிரதிகளாக சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

 

13. தொழிநுட்ப மற்றும் தொழிற் பயிற்சிக்காக தாபிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

  • பாடநெறிகளை நடாத்துகின்ற நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதியுடன் சேர்த்து மூலச்சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும்.
  • பயிற்சி நெறியினை நடாத்துகின்ற நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட தொடர்புடைய சான்றிதழின் உண்மைப் பிரதி பயிற்சி நெறி நடாத்தப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கு மூன்றாம்நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கடிதம் ஒன்றுடன் சேர்த்து சமர்பிக்கப்பட வேண்டும். சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பயிற்சி நெறியின் பெயர், மூன்றாம்நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் வழங்கப்படும் கடிதத்தில் தரப்பட்ட பெயருடன் ஒத்திருத்தல் வேண்டும்.

  14. பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

    • பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற .பொ.(சா/) பரீட்சை, .பொ. (/) பரீட்சை மற்றும் வேறு பரீட்சைகளின் சான்றிதழ்களின் சான்றொப்பத்திற்கான விண்ணப்பங்கள் பத்தரமுல்லையில் உள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அத் திணைக்களத்தினால் கொன்சியூலர் பிரிவிற்கு நேரடியாக அனுப்பப்படும் அச் சான்றிதழ்கள் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் அட்டையினை இப் பிரிவிற்கு சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தையும் சான்றொப்பமிடுவதற்காக கொன்சியூலர் பிரிவினால் ரூபா 500/= அறவிடப்படும். மேற்குறித்த கட்டணங்களுக்க மேலதிகமாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு சேவை கட்டணங்களைசெலுத்தவேண்டியிருக்கும்.

 

15. பாடசாலை விடுகைப்பத்திரங்கள்

அரசாங்க பாடசாலைகளின்; அதிபர்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களும் அவற்றின் மொழிபெயர்கப்பட்ட பிரதிகளும் தேவையாயின் சான்றுறுதிப்படுத்தப் படலாம். ஆயினும் இப் பிரிவிற்கு சமர்பிக்கப்படுகின்ற மூல பிரதியும் மொழிபெயர்கப்பட்ட பிரதியும் பாடசாலை உள்ளடங்கும் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரினால் உரியவாறு சான்றுப்படுத்தபடல் வேண்டும்.

 

16. தனியார்/சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

  • கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட தனியார்/ சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றொப்பத்திற்காக அத்தகைய பாடசாலைகளின் பிரதானிகளால் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்களின் உண்மைப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்கல்வி அமைச்சின் தனியார் பாடசாலை பிரிவினால்; அல்லது வலயக் கல்வி அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • கல்வி அமைச்சில் பதிவு செய்யப்படாத தனியார்/ சர்வதேச பாடசாலைகளினால் வழங்கப்படும் ஆவணங்கள், சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளாக மாத்திரம் அங்கீகாரமளிக்கப்படக்கூடியன. இந் நோக்கத்திற்காக பாடசாலைகளின் தலைவர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள்  பாடசாலை தலைவரினால் சான்றுப்படுத்தப்பட்ட தொடர்புடைய ஆவணங்களின் நிழற்பிரதிகளுடனும் பாடசாலையின் வியாபார பதிவுச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப்பிரதியுடனும் சேர்த்து சமர்ப்பிக்கப்படவேண்டும்.

 

17. சமய அல்லது கலாசார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்

சமய அல்லது கலாசார நிறுவனங்களினால் வழங்கப்படும் ஏதேனும் சான்றிதழ் அத்தகைய சான்றிதழானது குறித்த விடயத்திற்காக அரசாங்க திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்தால் மாத்திரம் அல்லது தொடர்புடைய அரசாங்க திணைக்களத்தின் அத்தகைய நிறுவனம் பதிவு செய்யப்பட்டு குறித்த திணைக்களத்தினால் அத்தகைய தகவல் ன்றுப்படுத்தப்பட்டால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

  

18. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்படும் வெளிநாட்டு பரீட்சைகள் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள்

    • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்படுகின்ற பரீட்சைகளை நடாத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு முகவர் நிலையங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள உள்நாட்டில் அங்கீககரிக்கப்பட்ட அலுவலகத்தினால் அல்லது அந் நிறுவனம் அமையப்பெற்றுள்ள நாட்டினை பிரதிநிதிதித்துவப்படுத்துகின்ற தரகத்தினால் உண்மைப்பிரதிகளாக சான்றுப்படுத்தப்பட்டடிருந்தால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • எனினும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் தொடர்பில் பிரிடிஸ் கவுன்சிலினால் (British Council) சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகளும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா புல்பிரைக் ஆணைக்குழுவினால் (US Fulbright Commission) சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகளும் சான்றுறுதிப்படுத்துவதற்காக கருத்திற் கொள்ளப்படும். 

    19. தனியார் நிறுவனங்களின் சேவை பற்றிய சேவைச் சான்றிதழ்கள்

    • தனியார் துறையில் தொழில்புரிதல் தொடர்பில் தனியார் நிறுவனமொன்றினால்; வழங்கப்படும் சேவைச் சான்றிதழ் உண்மைப் பிரதியொன்றாக மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதுடன் இந்நோக்கத்திற்காக மூல ஆவணத்துடன் சேர்த்து குறித்த நிறுவனத்தின் தலைவரினால் சான்றுப்படுத்தப்படுத்தப்பட்ட நிழற்பிரதியொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • தனியார் துறையில் தொழில்புரிதல் தொடர்பில் தனியார் நிறுவனமொன்றினால்; வழங்கப்படும் சேவைச் சான்றிதழ் உண்மைப் பிரதியொன்றாக மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதுடன் இந்நோக்கத்திற்காக மூல ஆவணத்துடன் சேர்த்து குறித்த நிறுவனத்தின் தலைவரினால் சான்றுப்படுத்தப்படுத்தப்பட்ட நிழற்பிரதியொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • முறையான நியமனக் கடிதத்தினை அல்லது வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க தவறுகின்ற போது நிறுவனத்தின் தலைவரினால் சான்றுப்படுத்தப்பட்ட சேவைச் சான்றிதழின் உண்மைப் பிரதியுடன் சேவைச் சான்றிதழின் மூலப் பிரதியும் பிரதேசத்தின் பிரதேச செயலாளரினால் அல்லது வழங்கும் அதிகாரியினால்சான்றுப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் வியாபார பதிவின் உண்மைப் பிரதியும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

20. உள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்

  • தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகளின் தேவையா  எண்ணிக்கையுடன் சேர்த்து பட்டச் சான்றிதழின் மூலப் பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்தொடர்புடைய பல்கலைக்கழகத்தினால் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாத்திரம் பட்டச் சான்றிதழ் சான்றுறுதிப்படுத்தப்படும்.

  • இதற்காக குறித்த பல்கலைக்கழகம் எடுத்துக்கொள்கின்ற காலம் இந் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயமாகும்இதுதொடர்பிலான விசாரணைகளை தொடர்புடைய பல்கலைக்கழகத்திடம் மேற்கொள்ளமுடியும்.

21. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்

    • வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பட்டச் சான்றிதழ் ஒன்றுக்கு சான்றுறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகம் அல்லது இலங்கையில் உள்ள தொடர்புடைய நாட்டின் தூதரகம் ஏதாவது ஒன்றினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும். பிரதிகளின் எண்ணிக்கையுடன் சேர்த்து மூலப்பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    • எனினும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் தொடர்பில்  பிரிடிஸ் கவுன்சிலினால் (British Counsil)  சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகளும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க புல்பிரைக் ஆணைக்குழுவினால் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகளும் சான்றொப்பத்திற்காக கருத்திற் கொள்ளப்படும்.

22. சத்திய கூற்றுகள்;/ அற்றோனித் தத்துவங்கள்

    • இலங்கைப் பிரஜையினால் அல்லது இலங்கைப் கூட்டாண்மை பிரஜையினால் விளம்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட சத்தியக் கூற்று அல்லது அற்றோனித் தத்துவம் மாத்திரம் சான்றொப்பத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும். இலங்கைப் கூட்டாண்மை பிரஜை, அது பற்றிய தகவல்களை நிரூபிப்பதற்காக துணை ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் (உதாரணம்: கம்பனிப் பதிவாளரினால் சான்றுப்படத்தப்பட்ட படிவம் 20 ஆவணம்)
    • சத்தியக்கூற்று/அற்றோனித் தத்துவம் சட்டத்தரணி ஒருவரினால் தயாரிக்கப்பட்டிருப்பின்உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் சான்றுப்படுத்த வேண்டும்சத்தியக்கூற்று/ அற்றோனித் தத்துவம் சமாதான நீதவான் ஒருவரினால்தயாரிக்கப்பட்டிருப்பின், நீதி அமைச்சின் சமாதான நீதவான் பிரிவினால் மேலொப்பம் இடப்பட வேண்டும்.
    • சத்தியக்கூற்றில் அல்லது அற்றோனித் தத்துவத்தில் தரப்பட்டுள்ள உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கு தொடர்புடைய உத்தியோகபூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். சத்தியக்கூற்றில் அல்லது அற்றோனித் தத்துவத்தில் தரப்பட்டுள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்குதொடர்புடையஉத்தியோகéர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் அத்தகைய சத்தியக்கூற்று அல்லது அற்றோனித் தத்துவம் சான்றுறுதிப்படுத்துவதற்காக கருத்திற்கொள்ளப்படமாட்டாது.
    • பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள், மரணச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் போன்ற அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள ஆவணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற சத்தியக்கூற்றுகள் மூலப்பிரதி ஆவணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்படுகின்ற அதிகாரியினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும்.
    • பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர் தவிர மூன்றாம் தரப்பினரொருவர் மூலம் வெளிநாடு செல்வதற்கு வயது குறைந்த பிள்ளைக்காக தயாரிக்கப்படும் சத்தியக்கூற்றுகள், சொல்லப்பட்ட மூன்றாம் தரப்பினருடன் அத்தகைய பிள்ளை பயணிப்பதற்கு குடியியல் நீதிமன்றமொன்றினால் அல்லது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால்அத்தகைய மூன்றாம் தரப்பினரக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
    • வெளிநாட்டில் வசிக்கின்ற எவரேனும் இலங்கையர் கொன்சூலர் சட்டத்தின் கீழ் இலங்கை தூதரகத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் முன்னிலையில் சத்தியப் கூற்று ஒன்றினை அல்லது அற்றோனித் தத்துவம் ஒன்றினை விளம்பலாம் அல்லது கையொப்பமிடலாம்.

 

    23. நீதிமுறை ஆவணங்கள்

    • நீதிமுறை ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்காக ஆவணங்களின் மூலப்பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் தொடர்புடைய நீதிமன்ற பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆவணத்தில் உள்ள விடயங்கள் தொடர்புடைய நீதிபதியினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சான்றொப்பம் அளிக்கப்படும்.
    • விவாகரத்து சான்றுகளுக்கு முற்றான தீர்ப்பாணை வழங்கப்பட்டிருப்பின் முற்றான தீர்ப்பாணையின் மீது மாத்திரம் சான்றுறுதிப்படுத்தப்படும். எனினும், பின் முற்றானதீர்வும் இவ்வலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். முற்றான தீர்வு மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்
    • குறிப்பு: தொடர்புடைய நீதி மன்றம் எடுக்கும் காலம் இவ் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும் இதனால், இது குறித்த விசாரணைகள் குறித்த நீதி மன்றத்திடம் மேற்கொள்ளப்படலாம்.

        24. பிள்ளை மகவேற்பு ஆவணங்கள்

பிள்ளை மகவேற்பு ஆவணங்களுடன்  பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தால்மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.  

          மாவட்ட நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதியினால் வழங்கப்படும் மகவேற்புக்  கட்டளை (படிவம் 4)

      பிள்ளையின் இயற்கை பெற்றோரின்/பாதுகாவலரின் விருப்பத்தினை நீதிமன்றத்திற்கு உறுதிசெய்கின்ற சட்டத்தரணியொருவரினால் தயாரிக்கப்பட்ட ஆவணம் (படிவம் 20) (இது உயர் நீதிமன்ற பதிவாளரினால் சான்றுப்படத்தப்படவேண்டும்)

          மகவேற்ற பெற்றோருக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால் வழங்கப்படும் கடிதம்

          நன்னடத்தை மற்றும்  சிறுவர் பராமரிப்பு ஆணையாளரினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்ட கடிதம்

          பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ்

          பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் மகவேற்புச் சான்றிதழ்

          ஹேக் சமவாயத்தின் 23ஆவது உறுப்புரையின் கீழ் வழங்கப்படும் இணக்கக் கடிதம் (இரண்டு பெற்றோர்களும் இலங்கையராக இருப்பின், இது தேவையில்லை)

25. கிராம சேவகரின்; சான்றிதழ்கள்

       கிராம சேவகரினால்  வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் வதிவிடம் மற்றும் தங்கியிருப்போர் பற்றிய தகவல்களை மாத்திரம் உறுதிப்படுத்த முடியும்.

     “DS 4” படிவத்தில் கிராம சேவையாளரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட தகவல்கள் சான்றொப்பத்திற்காக கருத்தில் கொள்ளப்படும். பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்படாத கிராமசேவகரின் சான்றிதழ்கள் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படாது.

         26. லங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்  (SLBFE)

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரினால் கையொப்பமிடப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதியுடன் மூலச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரம் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

 27.   சில நிதிச் சட்ட அதிகாரங்களின் கீழ் பல் வேறு அரசாங்க நிறுவனங்களினால் வழங்கப்படும் உத்தரவுப்பத்திரங்கள் அல்லது ஆவணங்கள்

• சான்றொப்பத்திற்காக அந்நிறுவனத்திற்கு உரித்தளிக்கப்பட்ட நியதிச்சட்ட அதிகாரத்தின் கீழ் அரசாங்க நிறுவனமொன்றினால் வழங்கப்படும் ஆவணமொன்றின் அல்லது உத்தரவுப்பத்திரமொன்றின் மூலப்பிதியுடன் வழங்கம் அதிகாரியினால் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப்பிரதி சமர்ப்பிக்கப்படவேண்டும்.

• அத்தகைய ஆவணங்களின் அல்லது உத்தரவுப்பத்திரங்களில் உள்ளடங்கியள்ளவை தொடர்படைய அதிகாரியினால் உறுதிப்படத்தப்பட்ட பின்னரே  சான்றுறுதிப்படுத்தல் அளிக்கப்படும்.

குறிப்பு: தொடர்புடைய அரசாங்க நிறுவனம் எடுக்கும் காலம் இவ் அலுவலகத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும் இதனால், இது குறித்த தாமதம் பற்றிய விசாரணைகள் குறித்த அரசாங்க நிறுவனத்திடம் மேற்கொள்ளப்படலாம்.

 

28. ஏற்றுமதி ஆவணங்கள்

    • இவ் அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தக சம்மேளனம் ஒன்றினால் மூலச் சான்றிதழ் வழங்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருந்தால் ஏற்றுமதி ஆவணங்கள் சான்றுறுதிப்படுத்துவதற்காக ஏற்றக்கொள்ளப்படும்.
    • ஏற்றுமதி ஆவணத் தொகுதியொன்றிற்கு சான்றொப்பம் அளிப்பதற்கு கட்டணமாக ரூபா. 6000.00 அறவிடப்படும். மூலச் சான்றிதழின் ஒவ்வொரு தனித் தொகுதிக்கும் வேறாக கட்டணம் அறவிடப்படும். ஒவ்வொரு மூலச் சான்றிதழுக்குமான ஏற்றுமதி ஆவணத் தொகுதியும் பின்வரும் ஆவணங்களை உள்ளடக்கலாம்
  • மூலச் சான்றிதழ்
  • விலைப்பட்டியல்/வர்த்தக விலைப்பட்டியல்
  • கப்பற் சரக்குப் ஏற்றுமதிப் பட்டியல்
  • ஆரோக்கியச் சான்றிதழ்கள்
  • ஆய்வுகூடச் சான்றிதழ்கள்
  • பகுப்பாய்வு அறிக்கைகள்
  • தாவரநலச் சான்றிதழ்கள்
  • தொற்றுத் தடைகாப்புச்சான்றிதழ்கள்

இதற்கு மேலதிகமாக, மூலச் சான்றிதழ் இன்றி வேறான சான்றொப்பத்திற்காக பின்வரும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறாக சான்றொப்பம் இடப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும்ரூபா 800/= அறவிடப்படும்.

  •     ஆரோக்கியச் சான்றிதழ்கள்
  •     ஆய்வுகூடச் சான்றிதழ்கள்
  •          பகுப்பாய்வுச் சான்றிதழ்கள்
  •          தாவரநலச் சான்றிதழ்கள்
  •          தொற்றுத் தடைகாப்புச்சான்றிதழ்கள்
  •          சுதந்திர விற்பனைச் சான்றிதழ்கள்
  •          தர நியமச் சான்றிதழ்கள்
  •          சத்தியக் கூற்றுகளும் அற்றோனித் தத்துவங்களும் (உயர் நீதிமன்றத்தினால் சான்றுப்படுத்தப்படவேண்டும்)

29. வியாபாரத்துடன் / கம்பனிகளுடன் தொடர்புபட்ட ஆவணங்கள்

. கம்பனிப் பதிவுச் சான்றிதழ்

கம்பனிகள் பதிவாளரிடம் இருந்து அண்மையில் எடுக்கப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதியுடன் அல்லது மூலப்பிரதி ஆவணங்களுடன் அண்மையில் செலுத்தப்பட்ட வரிப் பற்றுச்சீட்டுடன் நிழற் பிரதி சான்றுறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். கம்பனி பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட படிவம் 20 உம் கம்பனியின் கையொப்ப அதிகாரத்தினை சரிபார்ப்பதற்கான துணை ஆவணமாக      கோரப்படும்.

       . தனிப்பட்ட வியாபாரப் பதிவுச் சான்றிதழ்;

 

தனிப்பட்ட வியாபாரப் பதிவுச் சான்றிதழுக்கு சான்றுறுதிப்படுத்துவதற்காக மூலப்பிரதியுடன் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரிதியுடன் அண்மையில் செலுத்தப்பட்ட பணப்பற்றுச் சீட்டுகளை இணைத்து விண்ணப்பதாரி சமர்ப்பிக்க வேண்டும்.

 

 . கூட்டிணைவு பற்றிய உறுப்புரை அல்லது சபைத் தீர்மானங்கள்

 

கம்பனி ஒன்றின் கூட்டிணைவு பற்றிய உறுப்புரையினை அல்லது சபைத் தீர்மானங்களை  சான்றுறுதிப்படுத்துவதற்காக பின்வரும் இரு வழிமுறைகள் விண்ணப்பதாரரினால்         பின்பற்றப்பட வேண்டும்.

    • கம்பனி ஒன்றின் கூட்டிணைப்பு பற்றிய உறுப்புரை அல்லது கம்பனி ஒன்றின் சபைத் தீர்மானங்கள், கம்பனிகள் பதிவாளரிடம் பதியப்படல்/ குறிக்கப்படல் வேண்டும். அத்துடன் பதிவு செய்யப்பட்ட/ குறிக்கப்பட்ட ஆவணத்தின் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதி சான்றுறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அல்லது

    • கம்பனியின் சட்ட அலுவலரின்/கம்பனிச் செயலாளரின் (சட்டத்தரணி) முன்னிலையில் சபை உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்ட கூட்டிணைப்பு மூல உறுப்புரையினை அல்லது சபைத் தீர்மானத்தினை உயர் நீதிமன்ற சான்றுப்படுத்தலுடன் விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும்.

    • குறிப்பு: இரு வழிமுறைகளுக்கும் கம்பனி பதிவுச் சான்றிதழும் படிவம் 20 உம் துணை ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

. படிவம் 20

கம்பனி ஒன்றின் படிவம் 20 சான்றுறுதிப்படுத்துவதற்காக விண்ணப்பதாரர்; கம்பனிகள் பதிவாளரினால் வழங்கப்படும் படிவம் 20 ஆவணத்தின் சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப்பிரதி ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.


குறிப்பு: கம்பனி பதிவுச் சான்றிதழ் துணை ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

. கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளின் அறிக்கை

கம்பனி ஒன்றின் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள், பட்டயக் கணக்காளர்  ஒருவரினால் கையொப்பமிடப்பட வேண்டும். அத்துடன் அவர் பற்றிய  உண்மைத்தன்னை அவருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கும் நிறுவனத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும் (உதாரணம்: இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம்).

missionnews

indday2017

newsfromom2

Human Rights Action Plan

logoHR

Open Government Partnership

OGPicon

Right to Information

ria-image
                               
                 Click Here to Read More...


Important Links

            HEweb
pmweb1
news gov.info
travel tourism
business financial
defence immigration

announcements

Gov20151GICnewslk2015SLTPB

AASL

cbsl-2013BOI2015

UNHRC AND HUMAN RIGHTS

UNHRC20151

ONUR

scrm

DOCUMENTS

v2025english

visionbutton-sin        visionbutton-tam

maithri-en-manifesto
S-Button20-1-2015  T-Button20-1-2015

Sri Lanka Missions Overseas

BIDTI

BIDTI_logo

NEWS FROM OTHER GOVERNMENT INSTITUTIONS

Bid Notices

Bid-MinRuralEconomy

RFP-Proposal

RDA
Higher_Education__Highways_3

Ministry_of_Health1

Bid_Norice1